aadi masam 2021



ஆடி 2021 | ஆடி வியாழன் பணம் வர சூட்சும வழிபாடு முறை 

ஆடி மாதம் வியாழக்கிழமை இந்த விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.இது பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். 

வருடத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் கடைபிடிக்கப்படும் ஆன்மீக விஷயங்கள், பூஜை முறைகள் பரிகாரங்களுக்கு அதிக சக்தி உண்டு.அந்த வகையில் 5 மாதங்கள்,பல சிறப்பான நாட்கள், நேரங்கள் , முகூர்த்தங்கள் யாவும் அடங்கும். இந்த ஆடி மாதத்தில் தினமுமே சில சின்னச்சின்ன விஷயங்களை செய்து மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஆடி மாத பூஜை முறையை தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி வழங்கியுள்ளார்.

வியாழக்கிழமையன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடும் சமயம்,அது காலை அல்லது மாலை இரவு 8மணி வாக்கில் கூட இதை செய்யலாம்.

செய்யவேண்டிய நாட்கள்: வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.ஆடி மாத வியாழக்கிழமை மிக சிறப்பானது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டிய முறை இது. 

தேவையான பொருட்கள்: விநாயகர் விக்ரகம் அல்லது படம் 7 எண்ணிக்கை அருகம்புல் சிறிய மஞ்சள் நிற நூல் மஞ்சள் கட்டை-1(ஆள்காட்டி விரல் அளவு) சிறிய தட்டில் கரைத்த மஞ்சள் நீர் (ஆர்த்தி போல்) புதிய மண் &அதை வைக்க டப்பா (வீட்டில் உள்ள 1லிட்டர் தண்ணீர் பாட்டிலை கூட பாதியாக வெட்டி உபயோகிக்கலாம்) 

சொல்ல வேண்டிய மந்திரம்: "ஹரித்ரே க்ருஹம் தனம் தான்யம் வசமானய ஸ்வாஹா"11 முறை பூஜையின் தொடக்கம் முதல் இறுதிவரைக்குள் சொல்ல வேண்டும். 

 முதலில் மஞ்சள் கரைசலில் மஞ்சள் கட்டையை போட்டு வையுங்கள். விநாயகர் விக்ரகம்/படம் இதற்கு மஞ்சளால் பொட்டு வையுங்கள்.படம் எனில் மஞ்சள் நூலால் அருகம்புல் மாலை கட்டி சார்த்துங்கள். விக்ரகமானால் அருகம்புலை கரைத்த மஞ்சள் நீரில் லேசாக முக்கி அப்படியே அல்லது மாலையாகவோ வையுங்கள்.எப்போதும் போல் தூபதீபங்கள் ஸ்வாமி மாடத்தில் இருக்கட்டும்.

இப்போது மஞ்சள் கரைசலை தீபாராதனை காட்டுவது போல் மூன்று முறை விநாயகரை சுற்றுங்கள் என்னது மூன்று முறை சுற்றி வரணுமா? அதெப்படி ஸ்வாமி மாடத்தில்.....? என்கிறீர்களா! 

 சற்று பொறுங்கள்.

அவரை வலம் வரச் சொல்லவில்லை.இந்த களேபரம் தில் மந்திரத்தை மறந்துவிடாதீர்கள். பின்பு மற்ற எல்லா ஸ்வாமிகளுக்கும் சேர்த்து 3 முறை மஞ்சள் ஆர்த்தியை சுற்றி விட்டு , (இதற்கு மந்திரம் எதுவும் இல்லை) ஞாபகம் இருக்கிறதா? மண் டப்பா etc.அதில் இந்த மஞ்சளை ஊற்றி விட்டு வீட்டில் எங்காவது வைத்து விடுங்கள்.

திசை எதுவும் பார்க்கத் தேவையில்லை.அவ்வளவுதான்.அளப்பரிய நலன்களை நல்கும் எளிமையான பூஜை முறை.செய்துபாருஙகள்.ஒவ்வொரு ஆடி வியாழக்கிழமையும் செய்யலாம்.ஆடிமாதம் என்றில்லை தொடர்ந்தும் செய்யலாம்.எந்த கிழமையில் தொடங்கினீர்களோ அதே கிழமையில் தொடரவேண்டும். 

இந்த மண்ணை காய்ந்து விடாமல் வைத்துக்கொள்ளுங்கள்.வீடுகட்டும் போது இந்த மண்ணை உபயோகிக்கலாம்.சொந்தவீடு,இன்னபிற சொத்துக்கள் இருப்பவர்கள் 3-4மாதங்களுக்குப்பிறகு சிவன் கோயில் தல விருட்சத்தில் போட்டு விடலாம்.விநாயகர் கோயிலிலும் வைத்து விடலாம்.விருப்படி மீண்டும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

 எளிமையான ஷா சில முறையில் சொந்த வீடு தனவிருத்தி தான்யவிருத்தி நல்கும் நல்லதோர் வழிபாடாகும் இது. ஆடி மாதத்தை இவ்வாறு பயன்தரும் வகையில் செய்து மேம்பட்ட வாழ்வதனைப் பெறுவோம்.

தமிழாக்கம் உதவி-நன்றி : ஸ்ரீமதி. நிர்மலா 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!