அலக்ஷ்மி விலக தரித்திரம் நீங்க

அலக்ஷ்மி விலக தரித்திரம் நீங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா ? 


சுத்தம் சுகம் தரும்

சத்தம்......?

யோசித்துப் பாருங்கள்.நீங்கள் யோசித்துப் பார்த்தேயிராத ஒன்றை அதுவும் நீங்கள் விரும்புபாமலேயே தரும்.ஆச்சர்யமாக இருக்கிறதா?

எச்சரிக்கை

இது ஆபத்தானதும் கூட.

"அட என்னங்க பெரிசா"பீபி(B.P), டென்ஷன்(Tenson), பதற்றம்(Anxiety) அதானே! என்கிறீர்களா? இவை உடல் சார்ந்தவை.இது மட்டுமல்ல, மேலும் ஒன்று.ஏன், ஏன், ஏன் பல ஏன்கள் உங்களை துளைத்துக் கொண்டிருக்கிறதல்லவா? அதற்கான  பதில்.முக்கியமானது, மூத்தது.இன்னுமா புரியல? " அலக்ஷ்மி விலக"

வீட்டுக்கு வீடு நடப்பது தானே?

சத்தம் போட்டால், சண்டை போட்டால் அலக்ஷ்மி வருமா?அட! எந்த டாக்டரும் இது வரை சொன்னதில்லையே! சொல்லியிருந்தால் அதற்கும் சேர்த்து 2 மாத்திரை  எழுதி வாங்கியிருப்பேனே என்கிறீர்களா?

பொறுங்கள் ! பொறுங்கள் !!

சத்தம் என்பதின் முழு பரிமாணத்தை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

1.உரத்த குரலில்  பேசுவது, உரையாடுவது

2.உரத்தகுரலில் கூப்பிடுவது

3.நிலம் அதிர நடப்பது

4.படார் என கதவை உதைப்பது,சாத்துவது.

யோசித்துப் பாருங்கள் இவ்வாறான பல விஷயங்கள் புலப்படும்.

இவைகளை எப்படியாவது(control &then stop)நிறுத்தி விடுங்கள்.பிறகென்ன?மேலே சொன்ன வார்த்தையில் இருந்து முதல் எழுத்து உயிர் எழுத்து போய்விடும்.

அடக்கடவுளே!!

நான் சொன்னது உயிர் எழுத்தை.உயிரை அல்ல.

இப்போது தங்கியுள்ளது என்ன? ஆம்

லக்ஷ்மி !! தரித்திரம் நீங்க  வேண்டுமா? வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா ? 

அப்பாடா பாயிண்டை கேட்ச் பண்ணியாச்சு.

வாங்க இப்ப லக்ஷ்மி தாயாரை நிரந்தரமாக வீட்டில் கேட்ச் பண்ணி வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.அதுவும் இப்பவே.

ஆம் இந்த ஆடி மாதம் செவ்வாய்கிழமை தொடங்கி 9 செவ்வாய் கிழமைகளில் மதியம் 1-2 அல்லது மாலையில் ஸ்வாமி அறையில் விளக்கேற்றி விட்டு செய்யலாம். (முக்கிய குறிப்பு : ஆடி மாத செவ்வாய்கிழமையை தவற விட்டவர்கள் ஏதேனும் வளர்பிறை செவ்வாய்கிழமையாக தேர்ந்தெடுத்து செய்து வரவும்)

அலக்ஷ்மி விலக தரித்திரம் நீங்க சங்கல்பம்:

லக்ஷ்மி தாயாரே இந்த மங்கள வாரத்தில் எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்யவேண்டும்.

நாங்கள் செய்யும் இந்த பூஜையை ஏற்று வீட்டில் தாயாய் நிலைத்திருந்து அலக்ஷ்மியை விலக்கி அது தொடர்பான அனைத்து அம்சங்களிலும் ஆட்படாமலும்,அவைஎங்களை அண்டாமலும்காத்து ரட்சிக்க வேண்டும் என்று மனமாற வேண்டி க் கொண்டு வீட்டில் செல்வம் பெருக வழிபாட்டை தொடங்கலாம்.

பணம் சேர செல்வம் வர செல்வம் சேர பல்வேறு பூஜை முறைகள் மற்றும் தாந்த்ரீக முறைகளை அறிய இதில் க்ளிக் செய்யவும். 

சொல்லவேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ:

பூஜை முறை

தேவையான பொருட்கள்:

ஒரு சிறிய கிண்ணம்

நல்ல பச்சரிசி சிறிது

மஞ்சள் தூள்

குங்குமப்பூ (விலை அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை)

முக்கிய குறிப்பு:

இதை செய்யும்போது உடலில் சிறிய அளவிலாவது சிகப்பு வஸ்திரம் அணிந்திருக்க வேண்டும்.இல்லாத பட்சத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை பெண்கள் ஆடையில் முடிந்து கொள்ளலாம்.

ஆண்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு செய்யலாம்.

சங்கல்பத்தை மனத்தில் இருத்தி, மந்திரம் சொல்லியபடியே கையில் சிறிதுஅரிசியை பிடித்தபடியே கிண்ணத்தில் இட்டு துளியளவு மஞ்சள் தூள் கலக்கவேண்டும்.(அட்க்ஷதை போல் அதிகமாக மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாம்.பலனளிக்காது.) 

பின்பு ஆள்காட்டி விரல்,கட்டை விரல் அல்லது மோதிரவிரல் கட்டைவிரல் கொண்டு குங்குமப்பூவை சேர்த்து கலந்து வழிபாட்டை நிறைவு செய்யவும்.இவ்வாறு 9 வாரங்கள் செய்யவேண்டும்.இதை தங்களின் பூஜை அறையில் திறந்த நிலையில் அல்லது சிறிய அளவிலான வெற்றிலை/வாழை இலை கொண்டு மூடலாம்.

வாழ்வை எளிதாகி கொள்ள எளிய பரிகார முறைகளை தெரிந்து கொள்ள இதில் க்ளிக் செய்யவும் 

முதல் வாரம் வைத்த அரிசியை ஒரு ஜிப்லாக் கவரில் வைத்து பணப்பெட்டி,நகைப்பெட்டி, சொத்து பத்திரங்கள் வைக்கும் இடத்தில் வைக்கவும்.பேப்பரில் மடித்து வைக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.ஒவ்வொரு வாரமும் இப்படி எடுக்கும் அரிசியை வீட்டில் தனம் தான்யம் வஸ்திரம் இருக்கும் இடங்களில் வைத்து வரலாம்.குறைந்தது 1 வருடகாலம் இது வீட்டில் இருப்பது நற்பலனைத்தரும்.

பெண்கள் 9 வாரம் தொடர்ந்து செய்யமுடியாதபோது அந்த குறிப்பிட்ட வாரத்தை தவிர்த்து அடுத்த வாரத்திலிருந்து தொடரலாம்.

அதன் பின் மாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள், அரிசியை மட்டும் நீர்நிலைகளில் விட்டுவிடலாம்.மேலும் முக்கியமாக தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் இந்த சூட்சும தந்திர பூஜை முறையை குழந்தைகளிடமும் இந்த பழக்கத்தை ஏற்படுத்திவிடுங்கள்-அது நிரந்தரமாகத் நம் வீட்டில் அலக்ஷ்மியை அண்டவிடாது.

சத்தம் விலக்கி சௌகர்யமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் சூட்சுமம் இது தான்.

வாழ்க சிறப்பாக சத்தமின்றி.


மேலும் அறிய : ஆடி செவ்வாய் அலட்சுமி விலக லட்சுமி வீட்டில் குடியேற


தமிழாக்கம் உதவி-நன்றி : ஸ்ரீமதி. நிர்மலா



Post a Comment

Previous Post Next Post

Get in touch!