மயிலிறகை எப்படி வைத்தால் எக்கச்சக்க பலன் கிடைக்கும்

மயிலிறகை எப்படி வைத்தால் எக்கச்சக்க பலன் கிடைக்கும்? 

மயில் எதைக் குறிக்கிறது?

ஹீலிங் என அழைக்கப்படுகின்ற எதையும் குணமாக்கும் தன்மையுடைய ஒன்றாகும். கடவுள்களில் முருகர் கிருஷ்ணருக்கு மட்டும் அல்ல மஹாலக்ஷ்மி தேவிக்கும் இந்திர தேவனுக்கும் மிகவும் உரித்தான ஒன்று மயில். மனிதர்களுக்கு சிலவற்றை எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது. வானவில், ஓடும் ரயில்,யானை,மீன்கள் போல சலிக்காத விஷயங்களில் மயிலை கண்டு களிப்பு கொள்வதும் ஒன்று. மையிலினம் முக்கிய பண்புகளாக மனிதர்களுக்கு உணர்த்தும் குறியீடாக நீண்ட ஆயுள், தலைமை, அழகு, நுட்பம், கண்ணியம், மனநோய் பார்வை, அன்பு மற்றும் பெருமை போன்றவையை உணரலாம்.

செல்வம் வர செல்வம் சேர பணம் வர மயிலிறகை தாந்த்ரீக முரையில் பயன்படுத்தும் முறைக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

மயில் இறகுகளுக்கான ஜோதிடம் வாஸ்து தாந்த்ரீக பரிகார பயன்கள்:

  1. உங்கள் வீட்டை தீமை மற்றும் எதிர்மறையிலிருந்து பாதுகாத்து அவற்றை அலங்காரமாக வைக்கவும்-அழகுக்கு அழகு சேர்க்கவும் செய்கிறது. 
  2. நம்முடைய ஆசைகளை சிறிய பேப்பர் ஒன்றில் எழுதி மயில் தொகை (குறைந்தது 10) நடுவில் சொருகி, எண்ணம் நிறைவேறும் வரை வீட்டின் முக்கிய வடகிழக்கு பகுதியில் வைத்து வரலாம்.நினைத்த கறியும் நிறைவேறிய பின் பின்னர் பேப்பரை நீக்கி வேறு ஆசைகள் இருப்பின் தொடர்ந்து செய்யலாம். ஒரு நேரத்தில் ஒரே ஆசைக்கு மட்டும் பயன்படுத்தவும்.
  3. உங்கள் பல்வேறு கனவுகள் நனவாகவும், ஆசைகள் நிறைவேறவும் தனிப்பட்ட அறையில் ஆங்காங்கே கண்ணில் தெரியும் படி வைத்து வரலாம். இதை பார்த்தபடி மனதின் உள்ளே ஆசைகளை கூறி பிரார்த்திப்பதும் பலன் தரும். 
  4. முகம் பார்க்கும் கண்ணாடியில் நீண்ட காம்புகளை உடைத்து சிறிதளவு காம்புடன் ஓட்ட வைத்து விட்டால் முகம் பார்க்கும் சமயம் இதையும்சேர்த்து பார்த்து வருவது அந்தந்த நாளில் அதிர்ஷ்டம் அதிகரிக்க கூடிய வாய்ப்பினை பெறலாம். 
  5. துஷ்ட நபர்களின் சாபங்கள், வயிற்றெசிச்சல், கண் திருஷ்டி நீங்க மயிலிறகை வீடு ஜன்னல்களில் கட்டி வைப்பதன் மூலம் பெருமளவு பாதுகாத்து கொள்ளலாம்.
  6. உத்வேகம் புத்துணர்ச்சி போன்றவை மனிதர்கலின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய ஒன்றாகும்.அப்படிப்பட்ட முன்னேற்றத்தை தருவதற்கு மயிலிறகை தங்களின் மேஜை மற்றும் குழந்தைகள் படிக்கும் மேஜை மீது வைப்பதும் அதிக பலன் தரும் ஒன்றாகும்.
  7. ஒரு சில முக்கிய தாந்த்ரீக காரியங்களுக்கு தாந்த்ரீக பரிகாரம் மற்றும் மந்திரங்கள் எளிதில் பலிதம் தர மயிலிறகு நல்ல பலன் தரும்.அவற்றை பின்னொரு பதிவில் பார்ப்போம் .
  8. ஒரு மயிலிறகை நம் தலையணை அடியில் மற்றும் குழந்தை பெரியவர்கள் தலையணை அடியில் வைத்து உருகுவது வேண்டாத எண்ணங்களையும் துர் கனவுகளையும் நீக்கும் .
  9. ஆடி கிருத்திகை அல்லது எந்தவொரு கிருத்திகை,சஷ்டி,ரோகிணி நக்ஷத்திரம் மற்றும் அஷ்டமியில் (வளர்பிறை) மயிலிறகை வாங்கி வைப்பது பல மடங்கு பலனை தரும்.


மயிலிறகை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் :

நல்ல கடையில் உண்மையானதாக பார்த்து வாங்கவும். வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த மறுநிமிடம், கங்கை நீர் அல்லது ஒரு மாட்டு கோமியம் அல்லது காராம் பசு கோமியம் தெளிக்கவும். பின்னர் பூஜை அறையிலும் அனைத்தையும் வைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு பின்னர் மேற்கூறிய முறைகளுக்கு உபயோகம் செய்யவும்.
Post a Comment

Previous Post Next Post

Get in touch!