சக்தி வாய்ந்த சுக்ர மணியின் பலன்கள்- SHUKRA MANI BENEFITS IN TAMIL
வைரம் கிரகங்களில் சுக்கிரனின் அம்சமுள்ள கல்லாகும். சுக்கிரனை அசுர குரு என்பர்.சுக்கிரன் மனிதனின் ஆசைகளைக் குறிக்கும் கிரகமாகும். பலவகையான இன்பங்கள், உயர்தர வாழ்க்கை, கண்ணுக்கினிய நல்ல அம்சங்கள் குணநலன்கள் நிறைந்த பணக்கார வீட்டு மனைவி, சொகுசு கார்,பங்களா,நல்ல தாம்பத்ய வாழ்க்கை, பல வகை ஈர்ப்புகள், நகை, பொழுதுபோக்கு, இன்பம், ஆடம்பரம்,ஆர்வம் மற்றும் மகிழ்ச்சிகள், போன்ற பலவற்றையும் அனுபவிக்க கண்டிப்பாக சுக்கிரனின் அருட்பார்வை வேண்டும்.
அப்படி என்றால் வைரம் அணிந்தால் சுக்கிரன் யோகம் வந்து விடுமா?
எல்லோராலும் வைரம் வாங்கி அணியமுடியாது என்பது ஒரு பக்கம், சுக்கிரனின் நிலையை ஆராயாமல் வைரத்தை (கைகளில்) அணிந்தால் சுக்கிர யோகம் மட்டும் அல்ல அதல பாதாள யோகம் கூட வரலாம். அதனால் தான் எவர் ஒருவர் ராசிக்குரிய அல்லது பணம் வர பணம் சேர செல்வம் சேர ராசி கற்கள் (ராசி கற்கள் என்கிற வார்த்தை சரியல்ல, இரத்தின கற்கள் என்பதே சரி) அணிகின்றார்களோ அவர்கள் தகுந்த ரத்ன சாஸ்த்ர ஞானம் உள்ள ஜோதிடரை அணுகி பின்னர் தகுந்த உலோகம் தகுந்த நாள்,ஹோரை,அணியும் முறை மற்றும் அணிய வேண்டிய கை,விரல் என அறிந்து பின்னர் அணிவதே சிறந்தது. ராசிக்கு என கற்கள் அணியவே கூடாது,அது ஆபத்தை தரலாம் என பல ஆண்டுகளாக நாம் கூறி வருகின்றோம். அப்படியும் ராசிக்கு கற்கள் பலர் அணிந்து இருப்பதை அவர்களை தனி நபர் ஆலோசனையில் சந்திக்கும் சமயம் காண்கிறோம். சரி, இப்பொழுது சுக்கிர மணியை பற்றிய விஷயத்திற்கு வருவோம்.
சுக்கிர மணியின் விசேஷ தன்மை என்ன ?
உருவேற்றப்பட்ட சுக்கிரமணி சுக்கிரனின் நன்மை தரும் தன்மைகள் அனைத்தையும் உள்வாங்கி அணிபவரை மேற்சொன்ன நிலைக்கு மாற்றும் தன்மை கொண்டது. இங்கே, நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நன்மை தீமை என இரண்டையும் அதிவேகத்தில் தரும் தன்மை கொண்டவை ரத்தினங்கள். ஆனால் உபரத்தினங்கள் அப்படி அல்ல. கெடு பழங்களை தரும் யோகம் அவற்றுக்கு இல்லை. அதே சமயம் ஒரேடியாக ஆளை உச்சாணி உயரத்தில் கொண்டு சென்று நிறுத்தவும் நிறுத்தாது.நிதானமாக வாழ்நாள் முழுதும் பலன் தரும்.
இதன் அருமைகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள இதில் க்ளிக் செய்யவும்.
இரத்தின கற்கள் போன்று உப ரத்தினங்களுக்கு குறிப்பாக சுக்கிர மணிக்கு தீட்டு கிடையாது.ஆகையால் பல காலங்கள் இவற்றை உபயோகம் செய்யலாம். சுக்கிர மணியை பொறுத்தவரை லெதர் அல்லது மணிபர்சில் ஆண்கள் வைத்திருக்கலாம். பெண்கள் லெதர் அல்லாத தங்கள் கைப்பையில் வைக்கலாம். வீட்டில் பூஜை அறையில் வைக்கலாம். பணப்பெட்டியில் வைக்கலாம்.மற்றும் விலை மிகுந்த ஆடை ஆபரணங்களை வைக்கும் இடத்தில், சொத்து பத்திரங்கள் வைக்கும் இடத்தில், சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் வைக்கலாம். இவை அற்புத பலன்களை தரும்.
இதை தினசரி கையில் வைத்து "ஓம் சுக்ராய நமஹ" மந்திரம் 108 அல்லது 45 கூறுவது இதன் பலன் தரும் தன்மையை அதிகரிக்க செய்யும்.
அனைத்து வித கலைஞர்கள்,பாடகர்கள்,இசையில் சம்பந்தம் உள்ளவர்கள்,நடிகர்கள்,நடிகைகள் போன்ற பலரும் இதை வாங்கி கழுத்தில் அணியலாம் அல்லது தங்களுடன் வைத்திருக்கலாம். இவர்களுக்கு இது இரட்டிப்பு பலனை தரும். கடக,கன்னி,மீன லக்கினம் மற்றும் ராசி அன்பர்களுக்கு இது ஒரு முக்கிய வழிபாட்டு பொருளாகும். மேலும் சுக்கிரனின் திசை புத்தி நடந்து கொண்டிருந்தாலும் இது அதிக பலனை தரும்.
இவை இணையத்தில் 6000 ருபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.உண்மையில் இதை விலை அவ்வளவு கிடையாது.அனைவரும் இதனால் பலன் பெற வேண்டும் என்ற நோக்கில் இதை மிக மிக குறைந்த விலையில் தருவித்து ஆகர்ஷண சக்தி ஊட்டி வழங்க எண்ணம். ஆனால் அப்படி அனைவருக்கும் வழங்க முடியக்கூடிய நிலை இருக்கும் என தோன்றவில்லை.
இவை இருப்பு உள்ளதா என சோதிக்க, வாங்க இதில் க்ளிக் செய்யவும்