திருவண்ணாமலை கிரிவல மகிமை-Thiruvannamalai Girivalam 2022
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மகிமை பற்றி சிவபெருமான் : கார்த்திகை மாதத்தில் பல்வேறு ரிஷிகளும் முனிவர்களும் ஞானியர்களும் தேவாதி தேவர்களும் சூட்சும ரூபத்தில் என்னை தரிசிக்க கிரிவலம் வருவர், அப்படி வரும் சமயம் சாமானியர்களில் எவர் ஒருவர் மிக அதிக புண்ணியம் செய்துள்ளாரோ அவர்களும் திருவண்ணாமலை கிரிவலம் வரும் வாய்ப்பு கிட்டும் என்கிறார். மேலும் திருவண்ணாமலையானது க்ருத யுகத்தில் அக்னி மலையாகவும் த்ரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும் த்வாபர யுகத்தில் ஸ்வர்ண மலையாகவும் கலியுகத்தில் மரகத கல் மலையாகவும் இருப்பதாக நம் புராணங்கள் கூறியுள்ளன. இன்றளவும் எரிமலைகள், தங்கம் கிடைக்கக்கூடிய மலைகள், இரத்தின கற்கள் உள்ள மலைகள் நம் பாரத தேசத்தில் உள்ளதை நாம் அறிவோம். இப்படி திருவண்ணாமலையானது ஒவ்வொரு யுகத்திலும் மாறி உருவெடுத்து நாம் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏதுவாக கல் மலையாக இருக்கும் சமயம் முடிந்தவரை கிரிவலம் சென்று வருவது அளவற்று புண்ணியம் தரும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் மற்றவருடன் பேசாமல் செல்போன் போன்றவை பார்க்காமல் மனதினுள் 'அருணாச்சல சிவ' மந்திரம் கூறியவாறே கிரிவலம் சென்று வருவது மட்டுமே பலன் தரும்.
திருவண்ணாமலை கிரிவலம் செய்த பலனை வீட்டிலேயே பெறுவது எப்படி? இதில் க்ளிக்கவும்
14 கிலோமீட்டர்கள் கொண்ட திருவண்ணாமலை கிரிவலம் பாதை சுமார் 4 மணி நேரம் நடை பயணம் தேவைப்படும். அதற்கு தகுந்தாற் போல் பகல் வேளையில் ஆரம்பித்து மாலைக்குள் முடித்து கொள்வது நல்லது. சிலர் தற்சமயம் திருவண்ணாமலையில் இரவில் கிரிவலம் செல்கின்றனர்- மலையை சுற்றி பல்வேறு மூலிகை மரங்களின் உயிரோட்டம் மற்றும் நம் கண்ணுக்கு புலப்படாத மகரிஷி சித்தர்களின் நடமாட்டம் கிரிவல பாதையில் இரவில் இருந்து வரும்-அந்த சமயத்தில் நம் அவர்களுக்கு இடையூறாக இருக்க கூடும்-இரவில் கிரிவலம் தவிர்க்க சொல்வதின் காரணத்தில் இதுவும் ஒன்று.