ஆடி முதல் நாள் அமாவாசை கஷ்டங்களை தீர்க்கும் நாள்
2023 ஆடி முதல் நாள் அமாவாசை தினம் புனர்பூச நக்ஷத்திரத்தில் வருகிறது. தட்சிணாயன புண்ய காலம் துவக்கம்.இந்த மாதம் அதிக மாதம் ஆகும்.இவை ஒவ்வொரு வருடமும் வரக்கூடியது.அதிக மாசத்தில் செய்யப்படும் எந்தவொரு ஆன்மீக வழிபாட்டிற்கும் அதிக பலனும்,பொதுவாக சில ராசிகளுக்கு வேண்டதகாத விஷயங்களும் நடக்கும் என நம் பண்டைய முகூர்த்த கிரந்தங்கள் கூறியுள்ளன.அது பற்றி யூடியூப் மற்றும் முகநூல் பக்கத்தில் ஆடி மாத ராசிபலனில் விளக்கப்படும். அத்தகைய கஷ்ட சூழ்நிலை வராத வண்ணம் தடுக்க இம்மாதம் அம்பாள் மற்றும் சிவ வழிபாடு மிக சிறந்தது. குறிப்பாக இந்த நாள் சாமுண்டி வழிபாட்டிற்கு மிக சிறந்த நாள்.
ஒவ்வொரு புனர்பூச நக்ஷத்திர நாளிலும் சாமுண்டி தேவியை, சண்டியை வழிபடுவது நன்மை தரும். ஆடி மாதமானது சாமுண்டி தேவி மகிஷாசுரனை அழிக்க அவதாரமெடுத்த மாதமுமாகும். சிவன் மற்றும் புராதன கோவிலில் இருக்கும் சப்த மாதங்களில் சாமுண்டி வீற்றிருப்பாள். கலியுகத்தில் அதீத துன்பங்களை உடனடியாக போக்குவதில் வல்லவள் சாமுண்டி தேவி.
கடன்களால் ஏற்படும் அதீத மனஉளைச்சல் மற்றும் தவறான முடிவுகள் போன்றவை நீக்கி ருண கர்மா எனப்படும் கடன் தொடர்ந்து ஏற்படும் அவல நிலையை நம் வாழ்வில் இருந்து அகற்ற வல்லவள் சண்டி.
ஆடி மாதம் முதல் நாள் செய்ய வேண்டிய விஷயத்தை யூடியூபில் முன்னரே பகிர்ந்துள்ளோம். மேலும் நாளை 14.7.23 முகநூல் பக்கமான ATTRACT DIVINE பக்கத்திலும் வெளிவரும்.
ஆடி மாதம் சண்டி தேவிக்கு அமாவாசை அஷ்டமி நவமி பௌர்ணமி என அனைத்து தினங்களிலும் பூஜிப்பவருக்கு பல ஜென்மங்களில் தீராத கஷ்டங்களும் தீரும்.இதை கருத்தில் கொண்டு சண்டி ஹோமம் ஆடி மாதம் முதல் நாள் பின்னர் பௌர்ணமி கடைசியாக ஆடி சர்வ அமாவாசை தினத்தில் செய்யப்படுகிறது.ஆடி இரு பஞ்சமியிலும் வாராஹி அன்னைக்கு ஹோமம் செய்விக்கவும் முடிவு செய்துள்ளோம்.ஆடி முதல் நாள் ஹோமத்தில் சண்டி ரக்ஷை குடும்பத்தில் இரு நபருக்கு பிரசாதமாகவும் மேலும் பூஜையில் மந்திர சக்தி உருவேற்றப்பட்ட நீல முடிக்கயிறு 4-ம் கொடுக்கப்படவுள்ளது. இப்படி கொடுக்கப்படும் ரக்ஷை (தாயத்து) கழுத்தில் நீல அல்லது சிகப்பு கயிற்றில் அணிய வேண்டியது.
சாமுண்டியானவள் ராகு மற்றும் சனி கிரகத்தினால் ஏற்படும் கொடூர துன்பங்களை தீர்க்கவல்லவள், மேலும் சாக்த வழிபாட்டில் முதன்மையானவளும் அதீத சக்தி பெற்றவளும் ஆவாள் என்பதால் நீல முடிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
அன்பர்கள் காணொளியில் கொடுத்துள்ள விஷயங்களை செய்வது மட்டுமின்றி சண்டி ஹோமம் நடக்கும் தினத்தில் யூடியூப் சானலில் வெளிவரும் நேரலையில் சமயம் தங்களின் இடத்தில் இருந்து கொண்டே "ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே" என்கிற பீஜ மந்திரத்தை ஹோமம் நடக்கும் நேரத்தில் கூறுவது,முழு ஹோம பயனையும் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.நேரமில்லாத அன்பர்கள் ஹோம சமயத்தில் மந்திரம் 108 முறையாவது கூறுவது பலன் தரும்.
முக்கிய குறிப்பு : சண்டி ரக்ஷை சங்கல்பம் செய்யும் ஒவ்வொரு நபருக்குமாக மந்திர உச்சாடனம் செய்து வழங்க முடிவு செய்துள்ளதால்,சங்கல்ப பதிவுகள் 15.7.23 நாள் இரவுடன் முடியும்.
ஹோமத்தில் சங்கல்பம் செய்ய விருப்பமுள்ளோர் இதில் க்ளிக்கவும்.