யார் இந்த தூம்ர வாராஹி?அதீதமாய் அள்ளி வழங்கும்  வராஹி ரூபம் 

தூம்ர வாராஹி


சிலர் தற்சமயம் நினைப்பது போல் வாராஹி திடீரென தோன்றிய தெய்வமல்ல. கிரகங்களில் செவ்வாய்க்குரிய வாராஹி வேத காலம் தொட்டு வணங்கப்பட்டு வருபவள்.மேலும், சில கிறுக்கர்கள் கூறுவது செவ்வாய் நீச்சமானால் வராஹியை வழிபட கூடாது,செவ்வாய் கெட்டிருந்தால் வாராஹியை வழிபடக்கூடாது என்பெதெல்லாம் அறிவிலித்தனம். வாராஹியை வழிபடுவரிடம் ஒதுங்கி இரு என்று ஒரு முதுமொழி உண்டு. தன்னை வழிபடுபவரை எவர் ஒருவர் சுடுசொல் பேசினாலும் தாங்கி கொள்ள மாட்டாள்,உடனடியாக அவர்களுக்கு பாடம் புகட்டுவாள் என்பதால் அப்படி சொல்லி வைத்தனர்.

அதீத பலன் தரும் தெய்வங்கள் 

விநாயகர்,வாராஹி,வராஹர்,ஆஞ்சநேயர்,நரசிம்மர், பிரத்தியங்கரா,லக்ஷ்மி ஹயக்ரீவர் போன்ற மனித மற்றும் மிருகங்களின் கலவையான தோற்றத்தில் இருக்கும் தெய்வங்களை ப்ரீதி செய்வது மற்றும் அவர்களின் அருளை பெறுவது  எளிது. அவர்களிடம் அதீத பக்தியும் அன்பையும் செலுத்துவது ஒன்றே பிரதானம். பயம் தேவையில்லை.

யார் இந்த வாராஹி?

வாராஹி சப்த மாதர்களில் நான்காவது. தேவி லலிதாவின் தளபதி மற்றும் வர்தாளி, தண்டநாதா, வஜ்ர முகி, தான்ய லக்ஷ்மி, மஹா லக்ஷ்மி, பூ சக்தி, க்ரோத முகி, ஸ்வப்னேஷி, மஹா கர்ணிகா, தூம்ர ரூபிணி மற்றும் சேனா நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.  தந்த்ரத்தில் வாராஹி தந்திரம் என்று ஒரு தனி தந்த்ர வித்யை உள்ளது, வேதங்கள், ஸ்ரீ வித்யா, வைஷ்ணவம், பௌத்தம் முதலிய ஏறக்குறைய அனைத்து பழங்கால கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் எப்படி பாம்பு கடவுள்கள்/தெய்வங்களை வழிபாடுகளை கூறியுள்ளனவோ, அதே போல வாராஹியும் குறிப்பிட்டுள்ளன. அவள் தன் பக்தர்களின் மாயை மற்றும் துர் எண்ணங்களை  நீக்கி, அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை உயர்த்தி மாத்ரிகாக்களில் ஒரு தனி இடத்தைப் பெறுகிறாள். அவளுடைய வாராஹி நிக்ரஹ ஸ்தோத்திரம் இதை பறைசாற்றுகிறது.

வராஹி தோற்றம் மற்றும் வீர்யம் 

வாராஹி பன்றியின் முகம், நீல நிறம் மற்றும் வீராசனத்தில் அமர்ந்து, தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களை போக்குபவள். அவள் நான்கு கைகள், எட்டு கைகள் அல்லது பதினெட்டு கைகள் கொண்டவள்.  

தெற்கு திசையை ஆட்சி செய்யும் வாராஹியின் வாகனம் எருமை. மந்த்ர ரூபிணியானவள்.



வாராஹியின் வடிவங்கள் 

வாராஹியின் வடிவங்களில் சில : உன்மத்த வாராஹி (தாமச ரூபம்), ப்ருஹத் வாராஹி (ரஜஸ ரூபம்)  ஸ்வப்ன வாராஹி (சாத்விக ரூபம்) கிராத வாராஹி (தாமச ரூபம்)  ஸ்வேத வாராஹி (சாத்விக ரூபம்) தூம்ர வாராஹி (தாமச ரூபம்) மற்றும் மஹா வாராஹி (சாத்விக ரூபம்). 

வார்த்தாளி மற்றும் தண்டினி ரூபங்கள் மகிமைகள் இன்றளவும் பலரும் அறியாதது.ஆனால் அதீத சக்தி வாய்ந்தவை. 

தூம்ர வாராஹியை பொறுத்தமட்டில், அவள் அனைத்து  வாராஹி ரூபங்களுக்கும் தாயானவள் என வணங்கப்படுபவள்.தன் பக்தர்கள் கேட்கும் எதையும் அளவுக்கு அதிகமாக வழங்குபவள் என்ற கூற்று உண்டு.தாமச ரூபிணி ஆனதால் அவளுக்கு உடனடியாக கோபம் வரும்-தன் பக்தர்களுக்கு துன்பம் நேர்ந்தால்.

வாராஹிக்கு உரிய பூஜை நேரம்

வாராஹி இரவு நேரத்தை குறிப்பாக இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை உள்ள நேரத்தை ஆட்சி செய்பவள். இந்த நேரத்தில் அவளின் ஆற்றல்கள் மிக அதீத சக்தி கொண்டதாய் இருக்கும் என்றாலும் மற்ற நேரங்களில் வழிபட்டாலும் நிச்சயமாக தன்னுடைய அருட்பார்வையை அளிப்பாள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

வாராஹியை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

Dhumra Varahi
கடந்த 4 வருடங்களாக காணொளி மூலமாக வாராஹியை பற்றியும் 10 வருடங்களாக முகநூலிலும் இது பற்றி கூறிவருகிறோம் என்றாலும் இன்றளவும் இந்த கேள்வி நின்றபாடில்லை. காரணம், ஆன்மீக ஜோதிட போர்வையில் இருக்கும் அறைகுறைகள் மற்றும் அறிவிலிகள்,வித்யாசமாக ஏதேனும் சொல்வதாக நினைத்து கொண்டு,வாராஹியை வீட்டில் வைக்கக்கூடாது,வீட்டில் வழிபடக்கூடாது,குரு தீட்சை இன்றி வழிப்பட்டால் குடும்பம் நாசமாகும் என்ற அளவுக்கு எல்லை மீறி செய்யும் பிரச்சாரம் தான் காரணம். அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்யும் அவள் இந்த அனைவரையும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டாள் என்பதென்னவோ நிதர்சனம். 

தூம்ர வாராஹியை வழிபடும் முறை :

வாராஹி படம் அல்லது விக்ரஹம் வைத்துள்ளோர், அவளை தூம்ர வராஹியாக பாவித்து,அதீத அன்பையும் பக்தியையும் செலுத்தி,தங்களின் தாயாக பாவித்தால்,அவர்களுக்கு வேண்டியதை அளவுக்கு அதிகமாக தந்து அருள் செய்வாள் தூம்ர வாராஹி. வெகு விரைவில் தூம்ர ரூபிணியானவளின் சக்தி வாய்ந்த மூல மந்த்ரம் மற்றும் மற்ற வராஹி ரூபங்களை பற்றியும் இந்த பக்கத்தில் பகிர்வோம். அது வரை கீழ்கண்ட மந்திரம் கூறி வழிபட்டு வரவும் :

"ஓம் தூம்ர ரூபிண்யை வாராஹ்யை நமஹ" 

வருகிற ஆடி பஞ்சமி நாளில் தூம்ர வாராஹி ஹோமம் நம் ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் (மேற்கு மாம்பலம்-சென்னை) யில் நடைபெறவுள்ளது. கடுமையான கடன்களை மந்த்ர சக்தியால் தீர்க்க உதவும் கருங்காலி மணியை வாராஹியின் அருட் பிரசாதமாக கொடுக்கவுள்ளோம். விருப்பமுள்ளோர்,கீழ்கண்ட இணையதளத்தில் சென்று சங்கல்ப பதிவு செய்து கொள்ளலாம். 

www.poojahomam.org 




Post a Comment

Previous Post Next Post

Get in touch!