கருங்காலி மாலை உண்மையிலேயே கடன் தீர்க்குமா ? KARUNGALI MALAI FACTS
கருங்காலி மாலை :
பண்டைய ஜோதிட கிரந்தங்களில் கருங்காலி கிரகங்களில் சனிக்கும் செவ்வாய்க்கும் உரியது என்றே குறிப்புகள் உள்ளன. எனினும் தற்சமயம் குறிப்பாக தமிழ்நாட்டில் கருங்காலியை செவ்வாய்க்கு உரியதாக மட்டுமே பலரும் கூறி வருகிறார்கள். அதன் வீரியம் மற்றும் ஆற்றல் காரணமாக சனிக்குரியதும் கூட என சொல்லாமல் விட்டார்களா அல்லது சனி செவ்வாய் என இரண்டையும் கூறினால் எதிர் எதிர் கிரகங்கள் என மக்கள் குழப்பமடைவார்கள் என மறைக்கின்றனரா தெரியவில்லை. எம்முடைய மூலிகை ஆராய்ச்சி மற்றும் கருங்காலியை உபயோகித்தோரின் பலன்களை ஆராய்ந்ததில், கருங்காலி நிறம் மற்றும் நீடித்திருக்க கூடிய நிலை தன்மை பண்நெடும்காலம் பலனளிக்கும் தன்மை போன்றவற்றினால் சனியின் தன்மையையும் வீரிய சக்தி, அணிந்தோரின் உடல் ரீதியான பிரச்சனைகளை நீக்குதல் மற்றும் மன ரீதியான உத்வேகத்தை அளித்தல் போன்றவற்றில் செவ்வாயின் தன்மையையும் கொண்டிருப்பதாக அறிகின்றேன்.
கருங்காலி மாலை கடன் பிரச்சனை நீக்குமா?
கருங்காலி மாலை அல்லது கருங்காலி BRACELET எனப்படும் கை வளையம், தன்னுள்ளே கொண்ட செவ்வாயின் வீரிய தன்மையால் எவ்வித பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனப்பாங்கை கொடுக்கும். மற்றும் துரித செயல்பாடு சூட்சுமுமாக எந்த விஷயத்தையும் கையாளுதல் போன்றவற்றை கருங்காலியை அணிவதன் மூலம் பெறலாம் என்பதை, அணிந்து பயன் பெற்றோர் மூலம் அறிகின்றோம்.
கடன் தொல்லை கடன் பிரச்சனை கிரகங்களில் செவ்வாயின் நிலையை குறிப்பது என்பதால் கருங்காலி மாலையை ஜப மாலையாக ருண விமோசன மந்திரம் அல்லது 'ஓம் அங்காரகாய நமஹ' மந்திரம் கூறி ஜபித்து பின்னர் அதை செவ்வாய்க்குரிய தெய்வங்களான வாராஹி அம்மன், நரசிம்மர்,முருகர்,பகளாமுகி, அனுமன் போன்றோரில் எவர் இஷ்ட தெய்வமோ அவர் படத்திற்கு இட்டு இலுப்பெண்ணெய் தீபம் சிகப்பு திரி இட்டு ஏற்றி வருவது (குறைந்தது 45 நாட்கள்) பெருமளவில் கடன் சுமை குறைய வழிவகுக்கும். ஏதேனும் ஒரு ரூபத்தில் கடன் அடைய பணம் வந்து சேரும்.
கடன் நீக்கும் தாந்த்ரீக பரிகாரம்
மேலும், எம் அனுபவத்தில் கடன் நீங்க மிக அதீத சக்தி வாய்ந்த ஒரு தாந்த்ரீக மந்திரம்,தினசரி 10 நிமிடம் இரவில் செய்யக்கூடியதாக யூ டியூப் மற்றும் முகநூலில் வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். அதை மீறிய வேறு எந்த ஒரு வழியும் அதீத கடன் பிரச்சனைகளுக்கு பலன் தராது. மேலும் கடன் அடைபட்டாலும் சிலருக்கு மேலும் மேலும் கடன் சேர்ந்து கொண்டே இருக்கும். அதற்கும் சுலப அதே சமயம் வீரிய முறை நாம் கொடுத்துள்ள தாந்த்ரீக மந்திர முறை மட்டுமே. இதற்கு கருங்காலி மாலையை ஜப மாலையாக உபயோகம் செய்வது மேலும் பலனை அதிகரிக்கும்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் மேலும் மேலும் கடன் வாங்கிக்கொண்டே இருப்போர் மற்றும் ஜாதகத்தில் மிக கடுமையான தோஷங்கள் இருப்போர் மேற்கண்ட முறையை 3 முறை தொடர வேண்டி உள்ளதை அறிகிறோம். எப்படி இருந்தாலும் இவ்வுலகில் மேற்கண்ட முறையை தவிர அதி சக்தி வாய்ந்த முறை வேறு இல்லை என்பதை கண்டிப்பாக கூற முடியும். இதை செய்யாமல் எளிதில் நடக்க மேலும் மேலும் எம்மிடம் ஏதேனும் கடன் பரிகாரம் கேட்டு வருவோர் ஏராளம். இவர்கள் வாழ்நாள் முழுதும் கடன் நீக்கும் 'எளிய' மற்றும் 'பொய் நம்பிக்கை'களை விதைக்கும் பரிகாரம் என ஒவ்வொரு யூ டியூப் வீடியோக்கள் பார்த்து செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
கருங்காலியை யார் உபயோகிக்க கூடாது?
நாம் கருங்காலி மாலை எவ்வாறு உருவாக்கப்படுகிறது (எம்முடைய தயாரிப்பாளர்களால்) என்பதை காணொளியாக முன்னரே கொடுத்துள்ளோம். பார்க்க விரும்புவோர் இதை க்ளிக்கலாம். கருங்காலி மாலை தற்சமயம் அதீத டிமாண்ட் இருப்பதால் பலரும் வாய்க்கு வந்த விலையில் விற்று வருகின்றனர்-அன்பர்களின் வசதிக்காக கருங்காலி மாலை வரும் செப்டம்பர் 5 தேதி வரை மிக குறைந்த சலுகை விலையில் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.