சொட்ட சொட்ட பணத்தை கொட்டும் உச்சிஷ்ட சண்டாலினி சுமுகி தேவி
உச்சிஷ்ட சண்டாலினி (இங்கே சண்டாலினி என்பது வீர்யத்தன்மையையும் அவளின் அள்ளி வழங்கும் சுவபாவத்தையும் குறிப்பதாகும்-வட மாநிலங்களில் இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கமான ஒன்றாகும்)
சுமுகி தேவி தடைகளை நீக்குவதற்கும், எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதற்கும், செழிப்பு மற்றும் ஆன்மீக அருள் வழங்குவதும் இவரது சக்தியாகும்-வராஹி அன்னையின் வித்யாசமான மற்றும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள வடிவங்களில் ஒன்றாகும் என வராஹி தந்த்ரம் குறிப்பிடுகிறது. பண்டைய வேதங்களில் வேரூன்றியிருக்கும், அவரது வழிபாடு பொருள் செல்வத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் அள்ளி வழங்குவதும் தன்னை துதிப்பவர்களின் துன்பங்கள் கடன்கள் போன்றவற்றை வெகு எளிதாக நீக்குவதும் இந்த அன்னையின் செயல்களாகும்.
தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளபடி, "உயர்ந்த செல்வத்தின் உருவமாக இருப்பவள், எல்லா உயிர்களிலும் செழிப்பாக வாழ்பவளே, அந்த தேவிக்கு நாங்கள் எங்கள் பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்." மற்றும் லக்ஷ்மி தந்திரம் தெய்வீக தாயை "தன் பக்தர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் வெற்றியை வழங்குகிறாள், எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவர்களை உயர்த்தி, செழிப்பு பாதைக்கு அழைத்துச் செல்கிறாள்" என்று போற்றுகிறது.
இந்தியாவில், ஏன் உலகிலேயே (பொது மக்களுக்காக) முதன் முறையாக நம் குருஜியின் மூலம் இந்த ஹோமம் சென்னை பட்டாபிராம் வராஹி கோவிலில் வரும் சனிக்கிழமை ஆவணி பஞ்சமி தினத்தில் மாலை 3 மணி முதல் நடைபெற உள்ளது.
தன் மந்திரத்தை கேட்பவர்களுக்கும் மேலும் தன்னை சிகப்பு ஆடையுடன் துதிக்க வருபவர்களுக்கும் சிகப்பு திரி கொண்டு நெய் விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கும் 5 இரவுகளில் பலன் தருவாள் என சாக்த தந்த்ர சாஸ்திரங்களில் குறிப்புகள் உள்ளன. மேலும்,இந்த தேவியின் 3 பூஜை/ஹோமங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு (சிகப்பு ஆடையுடன்) நெய் விளக்கேற்றி வருபவர்க்ளின் கஷ்டங்களை பொடி பொடியாகும் என்பது கண்கூடு. ஆகவே இவளின் ஹோமத்தை தொடர்ந்து 3 பஞ்சமியில் நடத்த எண்ணமுள்ளது. அவளின் கருணையும் அருளும் இருப்பின் அவை கைகூடும். அப்படி 3 ஹோமங்கள் தடையின்றி நடந்து அதில் உங்களின் பங்கேற்பும் இருப்பின் பின் எந்த கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படாது என்பது திண்ணம்.
முதன் முறையாக இந்த ஹோம சங்கல்பத்திற்கு நீரில் (பன்னீர்) போட்டு வைக்க வேண்டிய யந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் 3 மணிக்குள் நேரில் வருபவர்களுக்கு சுமுகி தேவி குங்குமம் (அதீத சக்தி கொண்டது) கட்டணமின்றி வழங்க உள்ளோம். சங்கல்ப விவரத்திற்கு இதில் க்ளிக்கவும்.
முக்கிய குறிப்பு : உங்களுக்கு இந்த ஹோமத்தின் மூலம் முழு பலனும் அடைய வேண்டும் என்றால் மிக சரியாக 3 மணிக்கு அல்லது முன்னதாக வந்து முழு மந்திரத்தையும் உள்வாங்கி கொள்ளவும். ஹோமம் நடக்கும் சமயம் விளக்கு ஏற்றி வைக்கவும். ஒரு நெய் விளக்கு சிகப்பு திரி கொண்டு ஏற்றினால் போதுமானது. சிகப்பு வஸ்திரம் (ஏதேனும் ஒரு பாகத்திலாவது-பெண்களாயின் ரவிக்கை அல்லது புடவை/உள்ளே அணியும் உடைகள்-ஆண்களாயின் உள்ளே அணியும் உடைகள் அல்லது சட்டை வெட்டி பாண்ட் மட்டுமாவது சிகப்பாக இருப்பது நன்மை தரும். இவள் மந்திர ரூபமான ரகசிய தேவியாவார். மிகுந்த தெய்வ பலம் கொண்டோர் மட்டுமே இதை பயன்படுத்தி கொள்வர் என்பது நாம் அன்றாடம் கண்டு வரும் நிகழ்வு.