சித்தர்கள் வழங்கிய அபூர்வ "கடன் நீக்கி பணம் சேர்க்கும் மூலிகை"
நாம் அன்றாடம் வாழ்வில் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் கஷ்டங்கள் கடன்கள் போன்றவையே நீக்க கணக்கில் அடங்கா முறைகளை நம் சித்தர்கள் கொடுத்து சென்றுள்ளனர்.அவற்றில் சில காலப்போக்கில் உபயோகம் தெரியாதைவைகளாக மாறியும், சில நம் அருகில் இருந்தும் அதன் அருமை தெரியாமலும் இருந்து வருகிறோம். அப்படிப்பட்ட வகை தான் மூலிகைகள்.
உடல்,மனம் மற்றும் சிக்கலான விஷயங்களுக்கு மூலிகைகளை அணுக வேண்டிய முறையை தாந்த்ரீக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதம், சித்தம் மற்றும் மாந்த்ரீக சாஸ்திரமாக கொடுத்து சென்றுள்ளனர் சித்தர்கள். கலிபுருஷனின் கூற்றுப்படி அவை அரைகுறை ஆசாமிகள் மற்றும் தவறாக பயன்படுத்துவோர், அதன் முழு வீரியம் தெரியாமல் மிக சாதாரண விஷயங்களுக்கும் பயன்படுத்துவோர் என மாறிவிட்டது.
அவற்றில் ஒன்று தான் 'மஞ்சிஸ்தா' மூலிகை. இருக்கும் இடத்தில் மிகுந்த பாதுகாப்பையும் (எதிர்மறை சக்தியை நீக்குதல்) மற்றும் தனஆகர்ஷணம், கடன் நீக்குதல் (இது செவ்வாயின் தன்மையையும் அக்னி தத்துவத்தையும் சார்ந்தது) செய்யவல்லது இந்த மூலிகை. மருத்துவத்திற்கு மிகப்பெரும் பயனை கொடுத்து வரும் இது, மேற்சொன்ன விஷயங்களுக்கு சிறு மந்திர சக்தியூட்டப்பட்டு வேலை செய்யும்.
அப்படிப்பட்ட மூலிகையை உங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நோக்கில் வரும் மஹாளய அமாவாசை தினத்தில் சென்னை பட்டாபிராமில் உள்ள அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி கோவிலில் நடைபெறும் சண்டி ஹோமத்தில் கொடுக்க உள்ளோம்-கட்டணமின்றி.
இப்படி கொடுப்பதன் தலையாய நோக்கம் நீங்கள் அனைவரும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற வேண்டும் என்பதே. ஹோமம் முடிந்து அம்பாளுக்கு ஆரத்தி ஆனதும் மூலிகை வழங்கப்படும். முக்கிய விஷயம் என்னவென்றால் இவை ஹோமத்திற்கு மதியம் 3 மணிக்கு வருவோர்க்கு மற்றும் முழுமையாக கலந்து கொள்வோருக்கு மட்டுமே வழங்கப்படும். வந்ததும் டோக்கன் பெற்று பூஜை மற்றும் ஹோமத்தில் கவனம் செலுத்தலாம்.
அனைவரும் சண்டி தேவியின் அருள் மற்றும் வராஹி அம்பாளின் அருளை பெற மஹாளய அமாவாசை (காந்தி ஜெயந்தி) தினத்தில் உங்கள் உற்றார் உறவினருடன் மேற்கண்ட ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். முடிவில் அனைவருக்கும் நிவேதன அன்னம் (உணவு) உண்டு.
இந்த மூலிகையை உபயோகப்படுத்தும் முழு முறைகளை ஹோம தினத்தில் தெரிவிக்கப்படும்.