சனி பெயர்ச்சி 2025: பிரளய சனிபகவான் தரப்போவது என்ன தெரியுமா??
சிலருக்கு உயர்வு, சிலருக்கு சவால்கள். தாமதங்கள், பயங்கள், எதிர்பாராத திருப்பங்கள்... ஆனால் சனியை புரிந்து கொண்டவர்களுக்கு சனி ஒரு கடுமையான ஆசானாக மாறி, நீடித்த வெற்றிக்கான வழிகாட்டியாக திகழ்கிறார்.
🌟 இந்த 2025 சனி பெயர்ச்சியில் லாபம் பெறக்கூடிய ராசிகள் (பொது பலன்கள்)
மகரம் (3-ஆம் வீடு) – துணிச்சலும், நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகும்.
ரிஷபம் (11-ஆம் வீடு) – பண வருமானம், பொருளாதார வளர்ச்சி, முயற்சியில் வெற்றி.
துலாம் (6-ஆம் வீடு) – எதிரிகளை வெல்வீர்கள், கடன்கள் குறையும், உடல்நலம் மேம்படும்.
சனியை அறிந்துகொள்ள சனிப்பெயர்ச்சி பற்றிய விவரங்கள் அறிய இங்கே க்ளிக்கவும்.
⚠️ சனிப்பெயர்ச்சி சவாலாக இருக்கக்கூடிய ராசிகள் :
சிம்மம் (8-ஆம் வீடு – அஷ்டம சனி) – எதிர்பாராத திருப்பங்கள் மாற்றங்களுக்கு தயாராகுங்கள், உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம், உடல் நிலை பாதிப்பில் கவனம் தேவை.
தனுசு (4-ஆம் வீடு – சுக சனி) – வீட்டில் அமைதி குறையலாம், அலைச்சல் மிகும். ஆன்மிக ஈடுபாடு கட்டாயம் தேவை. சிவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்.
மிதுனம் (10-ஆம் வீடு – கர்ம சனி) – வேலைப்பளு அதிகம், கிடைக்கவேண்டிய எந்தவொரு விஷயங்களும் முடிவில் தள்ளிபோகுதல் மற்றும் கடுமையான உழைப்பு கொடுக்க வேண்டிய நிலை.
🪐 ஏழரை சனி – சனியின் 7½ ஆண்டுகள்:
கும்பம் – கடைசி கட்டம். சிற்சில சோதனைகள் தொடரும்.
மீனம் – நடுக்கட்டம். முக்கிய பாடங்கள் அனுபவங்களுக்கு தயார்படுத்தி கொள்ளுங்கள்.
மேஷம் – துவக்கம். கர்மாவை எதிர்கொள்ள வேண்டிய நேரம்.
ஏழரை சனி பயப்பட வேண்டியதல்ல – மாற்றத்திற்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்-இனி நீங்கள் புதிதாய் மாறப்போகின்றீர்கள் !!
ஏழரை சனியால் நன்மை பெற்ற பலரை கூறலாம் எனினும்,நீங்கள் அனைவரும் அறிந்தவர்களாக
ஏழரை சனி ஒப்பில்லாத பாரத பிரதமரை (நரேந்திர மோடி) நமக்கு அளித்தது.
ட்ரம்ப் அதிபர் ஆனது ஏழரை சனியின் காலத்தில்
🧘♂️ ஏன் சிலர் சனியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
சனியின் பலம், பிற கிரகங்களின் நிலை, நடப்பு தசா, புத்தி, அஷ்டவர்க்க புள்ளிகள்,ஜாதகத்தில் சனியின் பலம்– இவை எல்லாவற்றையும் சோதித்து தகுந்த வழிபாடு பரிகாரங்கள் செய்ய வேண்டியது அவசியம்..
🕉 சனியை சாந்தி செய்யும் பரிகாரங்கள் VAMANAN SESSHADRI YOU TUBE சேனலில் நாளை (27/3/25) வெளிவரும்.
மிக மிக முக்கிய அறிவிப்பு:
🔥 சனி பெயர்ச்சி ஹோமம் – மார்ச் 29, 2025
📍 NEW MR Mahal, லேக் வியூ சாலை, மேற்கு மாம்பலம், சென்னை 33
🕑 நேரம்: மதியம் 2 மணி முதல்
📅 தேதி: மார்ச் 29, 2025
📌 கூகுள் லோகேஷன் : https://g.co/kgs/1azJgCa
🎁 விசேஷ பரிகார பிரசாதம்-கட்டணமின்றி :
முதலில் 2 மணிக்கு வரும் 100 நபர்களுக்கு ஆகர்ஷணம் சாந்தி பூஜை செய்யப்பட்ட “சனி மூலி” வன்னி வழங்கப்படும். பூஜித்த இந்த வ்ருக்ஷத்தை நீங்கள் பலன்பெற என்ன செய்யவேண்டும் என்பதும் ஹோமம் முடிந்ததும் தெரிவிக்கப்படும்.
ஹோமத்தில் கலந்து அனைவருக்கும்: “சனி ரக்ஷை” பூஜித்து ஆகர்ஷணம் செய்த முடிக்கயிறு வழங்கப்படும். (நேரில் வருவோர்க்கு மட்டும்)
🎁 சங்கல்ப பதிவு:
சங்கல்ப பிரசாதம் : சனி சாந்தி செய்து ஆகர்ஷித்த விபூதி மற்றும் சனியின் நன்மைகளை மட்டும் பெற்று தரும் அமெதிஸ்ட் கல்.
சனி பெயர்ச்சி காலத்தில், அறம் வழி நடப்பது ஒன்று மட்டுமே சிறந்த பரிகாரம் என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம் !!
சனி தண்டிக்க மாட்டார்.
அவர் கற்றுவிப்பவர்.
தாமதிப்பவர் – செம்மை பெற.
சனி மறுக்கமாட்டார்-மாற்றுவார்.
சனி பெயர்ச்சி ஹோமத்தில் பங்கேற்குங்கள். உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை காணுங்கள்.