ஆடிப்பெருக்கன்று காவிரியில் மட்டும் தான் வழிபாடு செய்யவேண்டுமா? இல்லை. அதிகாலை சூரிய உதயத்தை கண் திறந்து ஐந்து நிமிடங்கள் தரிசித்து, ஓம் ஆதித்யாய நமஹ மந்திரம் நூற்றியெட்டு முறை கூறி வணங்கி பின், சமுத்திரம் அல்லது ஓடும் நீர் நிலை, ஆறு போன்றவற்றில் அல்லது அங்கிருந்து கொண்டு வரப்பட்ட நீரில் குளித்து, வீடு முழுதும் கல் உப்பு அல்லது ஹிமாலயன் ராக் சால்ட் மற்றும் கோமியம் கலந்து கழுவி, பின் நெய் விளக்கேற்றி வீட்டிலேயே அம்பிகையை துதிக்கலாம். சகோதரிகளுக்கு தங்களால் முடிந்த துணி வகைகள், வளையல்கள், குங்குமம் மஞ்சள் போன்றவற்றை கொடுக்கலாம். இயன்றவர்கள் தங்கம் அல்லது வெள்ளி நகை வகைகளை கொடுப்பதும் நன்று. இந்நாளின் மாலையில், அஸ்வினி நட்சத்திரமும் அஷ்டமியும் கூடுவதால் இவ்வேளையில் செய்யப்படும் உக்ர சாந்தி பூஜை அல்லது ஹோமங்கள் உடனுக்குடன் பலன் கொடுக்க வல்லவை. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857


Post a Comment

Previous Post Next Post

Get in touch!