மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-2


வியாழனிற்க்கு மிக அற்புதமான ஒரு பரிகாரம் அத்தி மரத்தின் வேர்.
மேலும் மண வாழ்க்கையில் நிம்மதியின்மை,திருமண தடைகள் மற்றும் குடி அல்லது வேறு ஏதேனும் போதை பழக்கத்திலிருந்து விலக இதை வலது கையில் அணிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற நூலில் கட்டி அணிய வேண்டும். குழந்தை பேற்றிற்க்கும் இதை மஞ்சள் நூலில் இடுப்பை சுற்றி ஆண் பெண் இருவரும் (தம்பதியர்) கட்டி கொள்ள நன்மை நடக்கும். வாஸ்து தோஷம் உள்ள வீடுகள், வீடுகளில் உள்ள நபர்களுக்கு அடிக்கடி உடல் நிலை கோளாறு போன்றவை உள்ள மனையில் இதன் வேரை செப்பு தாயத்தில் அடைத்து தோஷமுள்ள இடத்தில் வைக்க தோஷம் நிவர்த்தியாகும். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த அனைத்து வீடுகளிலும் வைக்கலாம். திடீரென்று உறவுகளுக்குள் பிரச்னை போன்றவை ஏற்படின் இதன் வேரை வெள்ளி தாயத்தில் இட்டு மஞ்சள் நூல் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ள பிரச்னை விலகும். யோகா மற்றும் மந்திர, தந்திர சாதனைகள் செய்வோர், ஆன்மீகத்தில் உயர்வு பெற விரும்புவோர் மற்றும் திடமான மன நிலை வேண்டுவோர் இதன் வேரை சந்தனாதி தைலம் மற்றும் கற்பூர தைலம் சேர்த்து அரைத்து நெற்றியில் திலகமாக இட்டு பின் தியானத்திலோ, அல்லது படிக்கவோ அமரலாம். நல்ல முன்னேற்றம் தரும். (இந்த தைலங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
இதன் வேரை எடுக்க:
ஓரளவு வளர்ந்த செடியாக வாங்கி வீட்டில் வைத்து 12 நாட்கள் மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும். பின்பு ஒரு வியாழன் அன்று காலை 6-7 மணிக்கு செடிக்கு நீர் ஊற்றி தீப தூபம் காண்பித்து, திராட்சை அல்லது பேரிட்சம் பழம் வைத்து நிவேதனம் செய்து, மரத்திடம் மானசீகமாக அனுமதி வேண்டி, ஆணி வேர் அறுகாமல், ஆயுதம் படாமல் சிறிது வேர் எடுத்து பின்பு மீண்டும் செடியை எடுத்த மண்ணிலேயே வைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும். செடியின் வளர்ச்சியில் வேர் வேலை செய்யுமா என அறிந்து கொள்ளலாம். வீடுகளில் அதை தொடர்ந்து வளர்க்க முடியதோர், சிறிது வளர்ந்ததும் கோவிலிலோ அல்லது ஏதும் இது போன்ற செடி விற்கும் கார்டன்களில் கூட இலவசமாக கொடுத்து பராமரிக்க சொல்லலாம். எடுத்த வேறை மஞ்சள் நீரால் சுத்தப்படுத்தி தூப தீபம் காண்பித்து பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை
-"ஓம் பிரஹஸ்பதயே நமஹ"
12 நாட்கள் ஒரு நாள் 1008 முறை வீதம் 11 நாட்கள் கூறி (சூரியன் அஸ்தமணத்திற்க்கு முன் செய்யலாம். காலை வேளை உசிதம்) பின்பு கடைசி நாள் 912 முறை கூறி நிவேதனம் செய்து எடுத்து உபயோகிக்கலாம். நல்ல பலன் தரும்.

Post a comment

0 Comments