வலிய பிரச்சனைகளை தீர்க்க எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்(1) நீரிழிவு, ஞாபக மறதி, ஆஸ்துமா, மூச்சிறைப்பு போன்றவை ஜாதகத்தில் குரு கிரகத்தினால் ஏற்படுபவை ஆகும். இதற்கு வாழை மரத்தின் வேரை வியாழனன்று காலை 6-7 மணியளவில் எடுத்து மஞ்சள் பூசி, பின்பு மஞ்சள் நூலில் கட்டி கழுத்திலோ அல்லது கை மணிக்கட்டிலோ அணிந்து கொள்ள மேற்சொன்ன நோய்கள் விலகும். (வேர் எடுக்கும் முறை பல பதிவுகளில் கொடுத்துள்ளது-மந்திரம் எதுவும் தேவை இல்லை)

(2) கர்ம வினைகளால் பாதிப்பிற்க்கு உள்ளானோர், சனி, ராகுவினால் தொல்லைகளுக்கு உள்ளானோர், ஏழரை சனி மற்றும் ராகு,சனி திசை நடப்பில் உள்ளோர்-ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நாள் முழுதும் தன்னுடன் யூக்கலிப்டஸ் மர இலையை தன்னுடன் வைத்திருக்க பாதிப்புகள் அகலும். ஒவ்வொரு சனியான்றும் வைத்திருக்கலாம்.

(3) எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும். சனிக்கிழமை தொடுங்குவது சிறப்பு.

(4) பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் (மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.Post a comment

0 Comments