செய்யும் தொழிலில் லாபம் பெருக

செய்யும் தொழிலில் லாபம் பெருகவும், பண தட்டுபாடு இல்லாமல் இருக்கவும் திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் ஓதவும் :

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசு இல் மிழலையீர் , ஏசல் இல்லையே. 1

இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர்

கறை கொள் காசினை முறைமை நல்குமே. 2

செய்யமேனியீர், மெய் கொள் மிழலையீர்

பை கொள்அரவினீர், உய்ய நல்குமே. 3

நீறு பூசினீர், ஏறுஅது ஏறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4

காமன் வேவ ஓர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே. 5

பிணி கொள் சடையீனீர், மணி கொள் மிடறீனீர்

அணி கொள் மிழலையீர், பணிகொண்டு அருளுமே. 6

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியீனீர், சங்கை தவிர்மினே. 7

அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்

பரக்கும் மிழலையீர்,கரக்கை தவிர்மினே. 8

அயனும் மாலுமாய், முயலும் முடியீனீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9

பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்

வெறி கொள் மிழலையீர், பிறிவுஅது அரியதே. 10

காழி மா நகர், வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல், தாழும் மொழிகளே. 11

Post a comment

2 Comments

gdpani said…
அப்பனை அடிபணிந்தால் அனைத்தும் பெறலாமே