தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற  லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். தீப ஒளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறேன்.

தீப ஒளி திருநாளில் புதியதுடைபத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும்.

மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும்.

கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும். 

வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். 

இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.

திருமணமான பெண்களுக்கு இந்நாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.

அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும். 

பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும். 

அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். 

கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.

முன்பே கொடுக்கப்பட்ட குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.

தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்க்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.தீப ஒளி நாள்  காலையில் மரத்திற்க்கு நீர் ஊற்றவும். 

தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்-அசைவம் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து இறை வழிபாட்டுடன் இந்நாளை இனிதே கொண்டாடி மகிழ்வீராக !! 



Post a Comment

Previous Post Next Post

Get in touch!