பொடித்தேங்காய் வழங்கும் செல்வ சிறப்புகள்படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் பொடி தேங்காயானது வட மாநிலங்களில் மிக பிரபலம். மஹாலக்ஷ்மியின் ரூபமாக இதை பலர் கழுத்தில் அணிந்து இருப்பர். அனைத்து வீடுகளிலும் பூஜை பொருட்களுடன் சேர்த்து வைத்திருப்பர். இதற்கு மூன்று கண்கள் இருக்கும்.  மற்றும் அனைத்து வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பண பெட்டிகளில் இருக்கும்.வட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும் இதன் வேறு சில பயன்களை பார்ப்போம். 

இதை சிகப்பு பட்டு துணியில் சுற்றி வீடு, தொழில் செய்யும் இடங்களில் வைக்க பண வரவு மிகும். 

செய்வினை கோளாறு, பில்லி-சூனிய பயம் போன்றவை அகல இதில் 7 அடி நூலை சுற்றி பின்பு வீட்டில் உள்ள அனைவரின் தலையையும் 7 முறை வலது புறமாக சுற்றி பின்பு எரியும் நெருப்பில் இட பாதிப்புகள் அகலும். 

சனி கிரகத்தின் பாதிப்புகள், சனி பெயர்ச்சியால் தொல்லை, ஏழரை சனி, சனி திசை நடப்பவர்கள் ஒரு இரும்பு சட்டியில் கடுகு எண்னை விட்டு , அதில் இந்த பொடி தேங்காயினை இட்டு,பின்பு முகத்தை அதில் பார்க்க வேண்டும்.பின்பு அதை தானம் செய்து விடலாம். இவ்வாறு 11 சனி கிழமைகள் செய்ய அனைத்து சனி தோஷங்களும் நீங்கி சுகம் பெறலாம். 

இதை கருப்பு துணியில் கட்டி வீடு, தொழில் இடங்களின் வாயிலில் கட்டி வைக்க திருஷ்டி, எதிர் மறை சக்திகள் அண்டாது. 

கடன் பிரச்சனைகள் அகல இதை கடுகு எண்ணையில் இட்டு 9 சனிக்கிழமைகள் காலை வேலையில் அரச மரத்தடியில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர, கடன் சுமை குறையும்.

இதை வெள்ளியில் கட்டி கழுத்தில் அணிந்து வர, பண வரவிற்க்கு குறைவிருக்காது. 
(நம் சென்டரில் இது வெள்ளியில் கட்டப்பட்டு தயார் நிலையில் 24 தேங்காய்கள் உள்ளன)

Post a comment

0 Comments