கணவன் மனைவி ஒற்றுமைக்கு வசியம்

சிறிது நாட்கள் முன் முகநூலில் தொடர்புள்ள ஒருவர் என்னிடம் பெண்களை வசீகரிக்க என்ன செய்வது? நம் சொல் பேச்சு கேட்டு நடக்க என்ன செய்வது என கேள்வியுடன் வந்தார். மனிதருக்கு வயது 55. எதற்காக கேட்கிறீர்கள் என கேட்டு, பின்பு அவர் முக நூல் ப்ரொஃபைல் அனைத்தும் பார்த்து சமாதானம் அடைந்தேன். மிக நல்ல குடும்பத்தை சேர்ந்த, அதிர்ந்து பேசாத தன்மை கொண்ட அவருக்கு, தன் மகன் மருமகளால் தொடர்ந்து மன வேதனை. மருமகள் திருமணமான சிறிது நாட்களிலேயே தன் தாயார் பேச்சை கேட்டு கொண்டு தொடர்ந்து தன் மகனுடன் சண்டையிட்டு வருவதாக கூறி கவலை பட்டார்.அவர் மகனின் ஜாதகத்தை பார்த்து அவர் மேல் தவறு ஏதும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டு மிக சக்தி வாய்ந்த மூலிகை ஒன்றை கொடுத்து அதை அவரின் மகனை அணிந்து வர சொன்னேன். மேலும் குறிப்பிட்ட நாட்களில் சுத்ததுடன் இறை வழிபாடு முடித்து இரவில் அவர்களை தாம்பத்திய உறவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஜோதிட விதிகளின் படி கணவன் குறிப்பிட்ட நாட்களில் (நட்சத்திரங்களில்) மனைவியுடன் உறவு கொள்வதும், மனைவியாக இருப்பின் அவர் குறிப்பிட்ட நாட்களில் கணவருடன் தாம்பத்திய உறவில் இருப்பதும் இருவரையும் கடைசி காலம் வரை பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் வசீகரிக்கப்பட்டு இருக்க செய்யும்-இது சிறந்த சூட்சும விதியாகும். இதன் படி நடந்து வந்தால் பல விவாகரத்துகளை தவிர்க்கலாம். இது நடந்து நான்கு மாதங்கள் கழித்து தற்சமயம் தொடர்பு கொண்டு தம்பதியர் இருவரும் அமைதியாக இருப்பதாகவும், மருமகள் மூன்று மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் தெரிவித்து மிகுந்த நன்றி கூறி சென்றார். மூலிகைகள் மிகுந்த சக்தி கொண்டவை-பல வியங்களை சாதிக்க கூடியவை. முறையாக உபயோகித்தால் மிகுந்த பலன் பெறலாம். 

Post a comment

1 Comments

AEU INDIA said…
ஓம் அகத்தீசாய நம