Wednesday, 3 September 2014

அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள்


(1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு.

(2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.

(3) 14 முக ருத்திராட்சம் அணியலாம்.

(4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

(5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில்
நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது,துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக  விளைவிக்கும். 

Tuesday, 2 September 2014

புது வரவு..
வாழ்க்கையை எளிதாக்கி கொள்ள முன்னோர்கள் அருளி சென்ற சில முறைகளை, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனி வலைப்பூவாக விளக்களாமென்ற நோக்கத்தில் கீழ்க்கண்ட ப்ளாக் துவங்கப்பட்டுள்ளது. அமானுஷ்ய பரிகாரங்களை போலவே மாந்திரீக பரிகாரங்களும் மிக சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
http://manthreegam.blogspot.in/
கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலமாம். வாங்கி பயன் அடையுங்கள்.

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் தோஷம் விலகும். ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.

மேற்கண்ட கோமதி சக்கரம் பெற +919840130156 எண்களை தொடர்பு கொள்ளவும்.


அக்‌ஷய திரிதியையில் சூட்சும பரிகாரங்கள்

அக்‌ஷய திரிதியையில் தங்கம் வாங்கினால் அது பெருகும் என சமீப காலமாக மீடியாக்கள், தங்க வியாபாரிகள்,சில போலி ஜோஷியர் மற்றும் ஆன்மீகவாதிகளால் பரப்பப்பட்டு வந்துள்ளது.இது வெறும் பணம் சேர்க்கும் முயற்சி மட்டுமல்ல அந்நாளில் மக்களை வேறு எந்த புண்ணிய காரியங்களிலும் ஈடு படாமல் தங்க நகை கடைகளின் பின்னே அலைய வைக்கும் அயோக்கியத்தனமும் ஆகும். செய்யும் நற்காரியங்கள் பல்கி பெருகும்இந்நாளிற்கும் தங்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையில் இந்நாள் வெள்ளி உலோகத்துக்கு உரியது எனலாம். இப்போது மிக பலன் வாய்ந்த, நம் கஷ்டங்கள் உடனடியாக விலக,கிரக தோஷங்கள் விலக இந்நாளில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம் .
பூச்சி,பறவைகள்,பசு,எறும்பு மற்றும் நாய்களுக்கு உணவிடுவதே அந்த பரிகாரமாகும். மிக சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை ஒரு நிகழ்வில் காஞ்சி மஹா பெரியவரே சூட்சுமுமாக விளக்கியுள்ளார். இந்நாளில் எறும்புகள் கூடியுள்ள புற்றுகளில் சிறு சர்க்கரை அல்லது அரிசி பொடி சேர்ப்பது,நாய்களுக்கு தயிர் சாதம் அல்லது சப்பாத்தி, பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் பழங்கள், பறவைகளுக்கு அரிசி அல்லது தினை மற்றும் இவைகளுக்கு இந்த கோடை காலம் முழுதும் நீர் அருந்த நம் வீட்டில் ஏதேனும் வசதி செய்து கொடுத்தால் இந்த புண்ணியம் நம் வாழ் நாள் பின் தொடர்வதோடு நம் கஷ்டங்களும் கண் கூடாக விலகுவதை காணலாம். மேலும் முடிந்தவர்கள் வெள்ளி பாத்திரத்தில் வயதானவர்கள் குடிக்க நீர் மோர் வழங்கலாம். வெள்ளி பாத்திரத்தில் தயிர் சாதம் வைத்து அதை விநியோகம் செய்வதும் மிக சிறந்த பரிகாரம்.இதையெல்லாம் விட்டு விட்டு தங்க நகை வாங்க அலை மோதுவது எந்த விதத்திலும் பயன் தராது !! அனைவரும் மேற்கண்ட முறைகளை பின்பற்றி வாழ் நாள் முழுதும் இன்புற்று இருக்க வேண்டுகிறேன் !!

பண புழக்கம் அதிகரிக்க


பணவசியம் ஏற்பட, பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பட்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம்.ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது.

தண ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்

பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை. இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும். எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்க்கில்லை. பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம் (பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)
வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும். ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.
காயத்ரி மந்திரம் :
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
உச்சரிப்பு முறை தகுந்த நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.(கோவில்களில் உள்ள அந்தணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்-இப்பொழுது ஸீடீ வடிவிலேயே கிடைக்கிறது) 

அகத்தியர் அருளிய வலம்புரி வசிய விநாயகர்

விநாயக சதுர்த்தியை முன்னிட்டும், மேலும் பலன்களை வீரியப்படுத்தும் முன்னிட்டும் விந்தைகள் பல புரியும் நம் அகத்திய வலம்புரி விநாயகர் மேலும் சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு வெளி வருகிறார். லக்னத்தில் கேது இருப்பவர்கள், கேது திசை, அஷ்டமத்தில் கேது, ஏழரை சனி, அஷ்டம மற்றும் கண்டக சனி நடப்பில் உள்ளோர், சனி திசையில் அவதிப்படுவோர் மற்றும் தொடர்ந்து காரிய தடைகளை சந்தித்து கொண்டு வருவோர், வியாபாரத்தில் போட்டி மற்றும் திடீர் தொழில் முடக்கம், கணவன் மனைவி தொடர்ந்த சண்டை சச்சரவு போன்றவற்றை அறவேநீக்கியிருக்கிறார் அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் நம் விநாயகர்.
சிறு காணொளி காட்சி உங்களுக்காக. 

வசிய வார்த்தைகள் கொடுக்கும் வளமான வாழ்க்கைகள்


நாம் பிரியோகிக்கும் வார்த்தைகள் மிக சக்தி வாய்ந்தவை. இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.நாம் கூறும் சில வார்த்தைகள் சில வாழ்க்கைளை மாற்றி போடும். நம் பண தேவைகளுக்கு-பிற பிரச்சனைகளுக்கு சரியான வார்த்தைகளை மந்திரமாக உபயோகித்தால் எல்லா வித தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். என் பரிகார முறைகளில் வெகு சிலருக்கு மட்டும் இதை கொடுத்து வந்திருக்கிறேன். இதற்கு முழுமையான சரணாகதி நம்பிக்கை தேவை. அப்படி உள்ளவர் களுக்கு மட்டுமே அந்த பரிகாரம் செயல் படும். மேலும் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு மட்டுமே அதை கொடுத்து வருகிறேன். சில படங்களும் அந்த மாயங்கள் செய்யும். ஒருவர் ஜாதகம் இல்லாமல் ஒரு நாள் மிக மோசமான பிரச்சனைகளோடு என்னை இரவு நேரம் சந்திக்க வேண்டி வந்தார். ஜாதகம் இல்லை. கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தார், மிக பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்.நல்லவர். குறிப்பட்ட ஏழு நாட்களுக்குள் பணத்தை குடுக்காவிட்டால் அவரை என்ன வேண்டுமானாலும் செய்து விடும் அந்த ரவுடி கும்பல் என்றார். நான் குறிப்பட்ட வார்த்தை மந்திரங்களை கூறி அதை நம்பிக்கையுடன் தினமும் இரவு கூறி வரும் படி சொன்னேன். மேலும் ஒரு படத்தையும் கொடுத்து அதை இரவு நேரங்களில் பார்த்து விட்டு பின்பு தலையணை அடியில் வைத்து காலையில் மீண்டும் பார்க்க சொன்னேன். அவருக்கு தன் உறவினரிருக்கு கொடுத்த சுமார் 30 லட்சம் மதிப்புள்ள நகைகள் திரும்பி வந்தாலே கடனை அடைத்து விடலாம். அவரும் நம்பிக்கையுடன் மந்திரத்தை கூறிவருவதாக சொல்லி சென்றார். இப்பொழுது இரவு மணி 3 க்கு கூப்பிட்டு நன்றி கூறுகிறார். தன்னை மிரட்டி வந்த கும்பல் வேறோவரையும் மிரட்ட அவர் முதலமைசரின் தனிபட்ட செல்லுக்கு குறுந்தகவல் அனுப்ப அவர்கள் அந்த கும்பலை பிடித்து சிறையில் அடைத்துள்ளனரம். மேலும் அவரே, இது எதேச்சையாக நடந்ததா என்று பரிசோதிக்க தொடர்ந்து மந்திரத்தை கூறி வந்துஉள்ளார். ஆனால் அவருக்கு வர வேண்டிய நகையிலும் இப்போது அவர் உறவினர் வந்து பாதி கொடுத்து விட்டு சென்றாராம். மகிழ்ச்சியில் இந்த நேரம் என்றும் பார்க்காமல் என்னைத்தொடர்பு கொண்டாராம். மன்னிப்பும் கேட்டு கொண்டார். மன நிறைவிற்க்கு ஏது நேரம் காலமெல்லாம்?? வாழ்க அவர் பல்லாண்டு-மகிழ்ச்சியோடு.

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல


பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

நவகிரஹ தூப பொடி

வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அனைத்தையும் பொடித்து சிறுது சம்பிராணியுடன் தூபம் தினசரி தொடர்ந்து 45 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். மேற்கண்ட பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது. இவற்றை வாங்கி பொடித்து செய்ய நேரமில்லாதவர்கள் "ருத்ர பரிஹார் ரக்‌ஷா ஸென்டர்"ல் (+919840130156) பொடியாகவே வாங்கி கொள்ளலாம். இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
(விலை ரூ.100/- மட்டும். தேவைப்படுபவர்கள் +919840130156 அழைக்கவும். மேற்கண்ட மூலிகைகளுடன் மேலும் 3 மூலிகைகள் நொச்சி, குங்கிலியம், தேவதாறு சேர்க்கபட்டுள்ளன. )

மூலிகை பரிகாரங்கள்


(1) இனம் தெரியாத பயம், படபடப்பு, பயத்தினால் தூக்கமின்மை உள்ளோர்கள் செந்நாயுருவி வேரை தாயத்தில் அடைத்து கழுத்தில்,கைகளில் கட்டி கொள்ள மேற்கண்டவை நீங்கும். எந்த நாளும் செய்யலாம். நல்ல நேரம் மட்டும் பார்த்தால் போதுமானது.வேறு எந்த நிபந்தனையும் இல்லை.ஜாதகத்தில் கேது-சந்திரன், சந்திரன்-செவ்வாய், சனி-சந்திரன் சேர்க்கை உள்ளோர் அவசியம் அணிதல் நன்று. மேலும் அஸ்வினி, பரணி, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் இதை அணிய நன்மைகள் பல நேரும்.
(2) மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோர் வெள்ளை அரளியை தன்னோடு வைத்திருக்க மனம் அமைதி பெரும். முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறும் சமயங்கள் மற்றும் தன்னம்பிக்கை குறைவான சமயங்களில் சிவப்பு அரளியை தம்மோடு வைத்திருக்க மேற்கண்டவை நீங்கும்.
(3) எங்கு சென்றும் நீங்காத உடல் பிரச்னை இருந்து வந்தால், காரணம் தெரியாமல் இருந்தால் பப்பாளி பழம் ஒன்று எடுத்து தலையை வலது புறமாக 27 முறை சுற்றி பின்பு அதை பசுவிற்க்கு கொடுக்க, உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும். குழந்தைகள் திருஷ்டியால் அழுது கொண்டே இருந்தால் பப்பாளி மரத்தின் இலையை சிறிது நேரம் குழந்தையின் நெற்றியிலோ அல்லது வயிற்றிலோ வைத்திருக்க, திருஷ்டி நீங்கி அழுகை நிற்கும்.

மூலிகை பரிகாரங்கள்


(1) இனம் தெரியாத பயம், படபடப்பு, பயத்தினால் தூக்கமின்மை உள்ளோர்கள் செந்நாயுருவி வேரை தாயத்தில் அடைத்து கழுத்தில்,கைகளில் கட்டி கொள்ள மேற்கண்டவை நீங்கும். எந்த நாளும் செய்யலாம். நல்ல நேரம் மட்டும் பார்த்தால் போதுமானது.வேறு எந்த நிபந்தனையும் இல்லை.ஜாதகத்தில் கேது-சந்திரன், சந்திரன்-செவ்வாய், சனி-சந்திரன் சேர்க்கை உள்ளோர் அவசியம் அணிதல் நன்று. மேலும் அஸ்வினி, பரணி, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் இதை அணிய நன்மைகள் பல நேரும்.
(2) மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோர் வெள்ளை அரளியை தன்னோடு வைத்திருக்க மனம் அமைதி பெரும். முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறும் சமயங்கள் மற்றும் தன்னம்பிக்கை குறைவான சமயங்களில் சிவப்பு அரளியை தம்மோடு வைத்திருக்க மேற்கண்டவை நீங்கும்.
(3) எங்கு சென்றும் நீங்காத உடல் பிரச்னை இருந்து வந்தால், காரணம் தெரியாமல் இருந்தால் பப்பாளி பழம் ஒன்று எடுத்து தலையை வலது புறமாக 27 முறை சுற்றி பின்பு அதை பசுவிற்க்கு கொடுக்க, உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும். குழந்தைகள் திருஷ்டியால் அழுது கொண்டே இருந்தால் பப்பாளி மரத்தின் இலையை சிறிது நேரம் குழந்தையின் நெற்றியிலோ அல்லது வயிற்றிலோ வைத்திருக்க, திருஷ்டி நீங்கி அழுகை நிற்கும்.

Monday, 1 September 2014

உடல் நலம் சிறக்க 'ஹெல்த் தெரபீ " (HEALTH THERAPHY) !!

பல உடல் கோளாறுகள், உடல் பருமன், தலைவலி, நீரிழிவு, தீராத வயிற்று வலி, முதுகு மற்றும் கழுத்து வலி மேலும் பல உடல் கோளாறுகள் தகுந்த சுவாச பயிற்சி மற்றும் வண்ணங்கள்,ஓலிகள் மற்றும் சில மிக எளிமையான பயிற்சிகள் மூலம் முழுவதும் குணப்படுத்த முடியும்.இதை தான் நாம் 'ஹெல்த் தெரபி' இல் கொடுத்து வருகிறோம். மிகுந்த பலன் கொடுத்து வருகிறது. சமீபமாய் கூட நம் குழுவை சேர்ந்த இருவரின் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது இதன் மூலம். அப்படி 'ஹெல்த் தெரபி' யில் சில பிரத்யேக கிரகங்களின் தாக்கம் கொண்ட உணவு பொருட்களின் பயனையும் கூறி வருகிறோம். அவற்றில் சில :
(1) பாதாம் : பாதாம் அடிக்கடி உண்பது நம் ஜாதகத்தில் சூரியனை வலுப்படுத்தும். சூரியன் பலவீனமான பலர் வீட்டிலேயே பாதாம் இருப்பினும் உண்ண மாட்டார்கள். மேலும் பாதாம் நம் மூளையை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் ஒன்றாகும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் மட்டும் 'பாதாம்' பருப்பை நீரில் ஊறவைத்து பின்பே உண்ண வேண்டும். இது சூரியனை வலுப்படுத்துவதால் தந்தை மற்றும் அரசாங்க அதிகாரிகள், அரசு ரீதியான நல்லுறவு போன்றவற்றிற்கு உதவும்.
(2) சந்திரன் மற்றும் சுக்கிரன் கிரகங்களால் வரும் கோளாறுகளை இஞ்சியின் மூலம் தீர்த்து கொள்ளலாம் !! அதே போல் ஏழரை சனியின் தாக்கத்தில் இருப்போரும் இஞ்சியை அதிக்க அளவில் சேர்த்து கொள்ள மிகுந்த காபந்தை தரும். மேலும் இது எலும்புகளை வலுப்படுத்தும் ஒன்றாகும். சனி-செவ்வாய், சனி-சந்திரன், சனி-புதன் சேர்க்கையால் வயிற்று கோளாறுகள் மற்றும் பேதி போன்றவை ஏற்படும். இவற்றிற்கு அந்த காலத்தில் உணவு உண்ட பிறகு இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிது கருப்பு உப்பை சேர்த்து அருந்துவர்.சில காலங்கள் முன்பு வரை வைத்தியர்கள் நோயாளிகளின் கிரக நிலைகளையும் ஆராய்ந்தே அதற்கேற்ற மருத்துவம் செய்து வந்தனர்.
(3) மூன்றாவது சுற்று ஏழரை சனி, மற்றும் பொதுவாக சனியினால் ஏற்படும் கோளாறுகள் பூண்டின் மூலம் தீர்த்து கொள்ளலாம். பூண்டு-சனி மற்றும் கேதுவினால் ஏற்படும் மன இறுக்கத்தை குறைகிறது. வலிப்பு வருபவர்களுக்கு உடனடியாக பூண்டை முகர கொடுத்தாலோ அல்லது பூண்டை கசக்கி அதன் சாரை மூக்கில் விட்டாலோ உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இது போன்று பல முறைகள் நம் 'ஹெல்த் தெரபி' யில் கொடுக்கப்படுகின்றன.முதலில் கிரக ரீதியாக உள்ள கோளாறுகளை கண்டுபிடித்த பிறகே தெரபி கொடுக்கப்படுகிறது.வெறும் 15 நிமிடங்களில் கொடுக்கப்படும் இதை தினசரி 15-30 நிமிடம் வரை கடைபிடித்து வந்தால் போதும். பல ஆயிரங்களை லட்சங்களை மருந்துக்கு கொடுப்பதை தவிர்க்கலாம் !! பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நோய்களுக்கே 20 நாட்களில் குணம் தெரிந்தது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !!

பணத்தேவைகளை நிறைவேற்றும் 'MONEY' தெரபீ

சப்தங்கள், வார்த்தைகள், வண்ணங்கள் எல்லாவற்றாலும் நம் குறிப்பிட்ட தேவைகளை பிரபஞ்சத்தில் ஈர்த்து நம்மிடம் சேர்க்கும் சக்தி உண்டு. இதை தான் 'Money தெரபி' யில் கொடுத்து வருகிறோம். தற்போது முதல் நிலை முடிந்து பயன் கண்டவர்கள் 'Money தெரபி'- Advanced தெரபி" எடுத்து வருகிறார்கள். இதில் வேண்டியதை அடைய நாமே உருவாக்கி கொள்ளும் குறியீடு முறைகள், பிரயோக முறை, மற்றும் சில ஒளிகள் ஒலிகள் அடங்கிய CD வழங்கப்படும்.அவற்றை தினசரி பார்த்தும் கேட்டும் வருவதாலும் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ஒரு சிலருக்கு கால நிலை மிக மிக மோசமாக இருந்தால் மட்டுமே இதன் பயன்கள் கிடைக்காமல் போகும்-இது அனுபவத்தில் கண்டது-அவர்கள் நாம் கூறும் கிரக பரிகாரங்களையும் சேர்த்து செய்தால் பலன் நிச்சயம். பெரிய தேவைகள் உள்ளவர்கள் இதை செய்து பயன் அடையலாம். அப்படி Advanced தெரபி எடுத்து வருவோரிடம் நான் கூறும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முக்கிய செய்தி : கருத்து பெட்டியில் விலை விவரங்கள் கேட்பதை தவிர்க்கவும். தேவைகள் இருப்பின் தொலைபேசியில் அணுகவும் . +919840130156

1. செல்வத்தின் கடவுளான மஹாலக்ஷ்மியை தனி படமாகவோ இல்லை விக்கிரகமாகவோ வைத்து வழிபட கூடாது-அவசியம் பெருமாள் (விஷ்ணு) இணைந்திருக்கும் படங்கள் தான் பூஜிக்க பலன் தரும். ஆந்தையின் மேல் அமர்திருக்கும் லக்ஷ்மியை வழிபட கூடாது. கருடன் மற்றும் பெருமாள் இணைந்துள்ள படம் வெகு சிறப்பு.உங்கள் வெற்றிக்காக கருடனுடன் அமர்திருக்கும் தாயார்
மற்றும் பெருமாள் அபூர்வ படம் ஒன்றை இணைத்திருக்கிறேன். தரவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும். (Advanced தெரபி-வருவோர்கள் எம்மிடமே லாமிநேசன் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தை பெற்று கொள்ளலாம்)

2. பண வரவை அதிகரிக்க கொடுக்கப்பட்டுள்ள படத்தை வைத்து வெள்ளை மற்றும் சிகப்பு தாமரைகள் சாற்றி, கீழ்க்கண்ட ஒரு வரி மந்திரத்தை 1008 முறை தாமரை மணி மாலை கொண்டு ஜெபித்து, நிவேதனம் செய்யவும். இதை ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். நல்ல பலன் தெரியும்.புதன்கிழமையில் ஆரம்பித்து செய்யவும். வளர்பிறை ஆகவும் இருப்பின் மேலும் நலம். இதை வாழ் நாள் முழுதும் தொடர்ந்து செய்பவர்களும் உண்டு.

|| ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் ||

3. உருவேற்றப்பட்ட || சோடஷி யந்திரம் || வீட்டில் வைத்து வரவும்.இது மிகுந்த பயன் தருவதோடல்லாமல் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும். தனியாக தொழில், வேலை செய்து வரும் பெண்மணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். (இதுவும் பயிற்சிக்கு வருவோர்க்கு வழங்கப்படும்)

4. உணவு அருந்தும் முன் மூன்று உருண்டைகள் உணவை தனியாக வைத்து விட்டு, பின்பு முறையே பறவை,நாய் மற்றும் பசுக்களுக்கு தினசரி வழங்கி வரவும்.

பணம் தான் பல பிரச்சனைகளுக்கும் பிரதானமாய் இருந்து வருவதாலும், என்னை அன்றாடம் சந்திக்க வருவோரின் குறைகளும் இதுவாகவே இருப்பதால், சில பதிவுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிட்டு வருகிறோம். பணத்தை ஈர்க்கும் முறை பல உண்டு.

பணத்தை ஈர்க்க தனிப்பட்ட பரிகாரங்களை சிலருக்கு வீட்டு மருந்து, சிலருக்கு வைத்தியர் தரும் மருந்து,சிலருக்கு ஊசி, கண்டிப்பாக தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை-இப்படி தான் வேறு படுத்தி கொடுத்து வருகிறேன்.ஓரிருவருக்கு தான் எது செய்தாலும் சரியாகாமல், அறுவை சிகிச்சை என கூறியுள்ள தாந்த்ரீக முறைகள் தேவைப்படும்-அவர்கள் தேவையும் அதிகமாக இருந்தால் !! மற்றோர்க்கு இந்த தெரபி முறைகளையும் அவற்றில் வழங்கப்படும் குறிப்புகளையும் தங்கள் வாழ்க்கை முறையாகவே மாற்றி கொண்டால், செல்வ செழிப்போடு வாழலாம்.வாழ்ந்தும் வருகிறார்கள் !!

பண வரவிற்கு:


மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.


Remedy to attract Money / Meet Monetary Needs

Keep a small portion of root of the Vitex negundo plant also known as Nochi in Tamil in your Wallet /Cash Box Always. It is said to have the Vibrations to attract wealth. It has also got excellent medicinal Properties.

உயிர்களுக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்


மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது நம் அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும். அன்றாட வாழ்வில் அதன் பயனை உணரலாம். மேலும் உயிர் வதை (அசைவ உணவு) செய்யாமல் இருப்பதும், உணவுக்காக வெட்ட அழைத்து செல்லப்படும் பசுக்களை காப்பாற்றி பசு மடங்களுக்கு விடுதல் சனி,ராகு,குரு, சுக்கிரன் போன்ற கிரகங்களை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நீண்ட நாள் பிரச்சனைகள் பலவற்றுக்கு திடீர் தீர்வு தேடித்தரும். மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஒன்று-பசு வதையை தடுப்பது.இங்கே எந்த எந்த நாளில் எந்த உயிர்களுக்கு உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது-ஜாதகம் இல்லாதவர்கள் ஏழு நாட்களும் தன்னால் முடிந்த அளவு உணவிட்டு பலன் அடையலாம்.
நாட்கள் - கிரகம் - உணவு
ஞாயிறு - சூரியன் - சப்பாத்தி மற்றும் ஊர வைத்த கோதுமை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.
திங்கள் - சந்திரன் - கோதுமை மாவை சீறிய உருண்டைகள் செய்து மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல). பசுவிற்க்கு நீர் வைப்பது.
செவ்வாய் - செவ்வாய்- ஊர வைத்த கடலை பருப்பு மற்றும் வெல்லம்- குரங்குகளுக்கு, இனிப்பு பொடி - எறும்புகளுக்கு
புதன் - புதன் - பச்சை புற்கள் - அகத்தி கீரை பசுக்களுக்கு அல்லது குதிரைவாளி (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு.
வியாழன் - குரு - ஊர வைத்த கொண்டை கடலை - குதிரை மற்றும் பசுக்களுக்கு- சோளம் புறாக்களுக்கு
வெள்ளி - சுக்கிரன் - பூனைகளுக்கு பால் - பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்தி கீரை.
சனி - சனி - கருப்பு நாய்கள் மற்றும் கருப்பு பசுக்களுக்கு நல்லெண்ணையில் சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகள்.
புதன் அல்லது சனி - ராகு - எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும் யானைகளுக்கு இலை தழை ஏதேனும்.
கேது- நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ அது. ஆனால் அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும். லக்னத்தில், அஷ்டமத்தில் கேது, கேது திசை நடப்பவர்கள் இவற்றை செய்து பலன் அடையலாம்.
பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் ஆவது வாங்கி போட்டு வருவது நலம். மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் நாய்,பூனை சிறு உயிரினங்கள்,எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல் இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பவதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே ! 

Sunday, 31 August 2014

சூட்சுமத்தை உணர்த்த ஒரு குட்டி கதைஅன்பர் திரு. Kr Saravanan  // மற்றும் திருPavalak Kannan  கடுகு எண்னை பரிகாரம் பற்றியும் கருப்பு உளுந்து பரிகாரம் பற்றி அந்த அந்த பதிவுகளில் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக சில எளிமையாக தேடி தெரிந்து கொள்ள முடிகிற விஷயங்களை திரும்ப திரும்ப கேட்கும் ஒரு சிலருக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட விஷயம் முக்கியமானது.அனைவரும் தெரிந்து கொள்ள இதை தனி பதிவாக இடுகிறேன் !!

ராமர் சீதை இணைந்த  பிற்கு ராம பக்த அனுமன் தினசரி மாலை சேது கரையில் ராமரை நினைத்து தொழுது பின்பு சேதுவை ஒரு பிரதட்சினமாக பறந்து வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் செய்து கொண்டு இருக்கும் பொழுது சனீஸ்வரர்  அந்த வழியாக வந்தார்.அதை கவனிகாது தன் பூஜையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அனுமன். தான் வருகையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள் ஆனால் இந்த குரங்கு நம்மை அவமதிக்கிறதே என சனிக்கு கோவம் வரவே அனுமனை தன்னிடம் சண்டையிட்டு ஜெயிக்கும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ தான் பூஜை முடித்து ராம சேதுவை சுற்றி வர வேண்டும், அதனால் அதற்கெல்லாம் நேரமில்லை என மறுத்தும் சனி பிடிவாதமாக வற்புறுத்தி கொண்டே இருந்ததால், அனுமன் தன் வாலால் சனியை சுழற்றி அழுத்தி கொண்டு சேதுவை சுற்றி பறக்க ஆரம்பித்தார். வழியில் மலைகள், குன்றுகள்,மரங்கள் என அனைத்திலும் சனி அடிபட்டு அனுமனின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் பின்பு மன்னிப்பு கேட்டு விடுபட்டு கொண்டார். விடுபட்ட சனிக்கு உடல் முழுதும் ரத்தம் மற்றும் காயங்கள், வலி. அதை கண்ட அனுமன் அவருக்கு கடுகு  எண்னை கொடுத்து உடம்பில் தேய்க்க  சொல்ல, தேய்த்த   சனிக்கு உடனடி குணம் கிடைத்தது. உடனே அனுமனுக்கு நன்றி கூறி அன்று முதல் "இந்த எண்னை எனக்கு ப்ரீதி செய்தது ஆகவே யார் கடுகு எண்ணையை சனிக்கிழமைகளில் தானமாக கொடுக்கிறார்களோ அவர்களுடய மன,உடல் வலிகளை  போக்குவேன் என உறுதி அளித்தார் சனி. செவ்வாய்க்கு அனுமனை வழிபடுவர்.ஆகவே செவ்வாய்க்கும் அது கொடுக்கப்பட்டது.

இது இதிகாசம்.இது மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களும் கடுகு எண்னைக்கு உண்டு.ஆகவே நல்ல பலன் நிச்சயம் உண்டு. மேலும் கருப்பு உளுந்து,வெல்லம் சனிக்கு ப்ரீதியானது. ஆகவே தான் உளுந்தை ஊர வைத்து குரங்குக்கு கொடுக்க சொல்வது.அனுமனிடம் நேரடியாக கொடுக்க முடியாதல்லவா ?
யாம் கொடுக்கும் ஒவ்வொரு பரிகாரமும் மிகுந்த பலன் வாய்ந்தவையும், சக்தி மிக்கதும் ஆகும். நேரமின்மை காரணமாக ஒவ்வொரு விசயத்திற்கும் முழு விவரங்கள் கொடுக்க இயலுவதில்லை.நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம். அன்பர் திரு. Kr Saravanan // உங்கள் 20 வருட அனுபவத்தில் இதையும் சேர்த்து கொள்ளலாம் !!

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்


கடுகு எண்னை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும். வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் இளைஞ்ச இளைஞ்சிகளும் இப்படி செய்யலாம்.
ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணையை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். வாழ்க வளமுடன் அனைவரும் !!

நவகிரஹ தூப பொடி

நவகிரஹ தூப பொடியின் மகத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு ஏராளமான நம் குழு அன்பர்கள் வாங்கி செல்கின்றனர். உண்மையில் தினமும் அதை காலை மாலை வீட்டிலோ அல்லது வியாபார இடத்திலோ தாந்த்ரீக நவகிரஹ மந்திரங்களை கூறி கொண்டே போட்டு வருவது நவகிரஹ ஹோமம் தினசரி செய்து வருவதற்க்கு ஒப்பாகும்.நாம் நம் முன்னோர்கள் செய்து வந்த பல நல்ல பழக்க வழக்கங்களை விட்டு விட்டோம். அதனால் தான் தற்பொழுது அனைவரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி தவிக்கிறோம். என்னிடம் வந்து தான் வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை, அவசியம் தாங்களே கூட கடைகளில் வாங்கி தயாரித்து கொள்ளலாம்.அனைவரும் செய்ய வேண்டியது மிக அவசியம்-அவ்வளவே. நம் கலாச்சாரத்தில் இருந்து அழிந்து வரும் இந்த எளிய முறை பரிகாரத்தை தங்கள் உறவினர்கள்,திருமணமான மகன்,மகள்,சகோதர சகோதரிகள் அனைவரையும் பின் பற்ற சொல்லி பயன் பெற செய்யுங்கள்.
__________________________________________________________
நாம் கொடுத்து வரும் 'வாழ் நாள் பரிகாரங்களில்-நேர பரிகாரம்' என ஒன்றையும் கொடுத்து அது மிக முக்கியமாக கடை பிடிக்க வேண்டிய ஒன்று என கூறி வருகிறோம். சமீபத்தில் ஒருவர் வந்து பரிகார முறைகள் அனைத்தும் செய்து விட்டேன்-பலன் எதுவும் தெரியவில்லையே-வேறு எதாவது செய்ய வேண்டுமா என கேட்டார். எப்படி செய்தீர்கள் என கேட்கையில் நான் குறித்து குடுத்த நேரங்களில் ஒன்று கூட அவர் பரிகாரங்கள் செய்கையில் உபயோகிக்க வில்லை என தெரிந்தது.நான் சிறிது கோபம் கொண்டேன்-எதற்காக வீணாக என்னிடம் வந்தீர்கள் என கேட்டேன். என்னை அமைதிப்படுத்தும் விதமாய், "இல்ல சாமி- நாம தான் ராகு காலம், எம கண்டம், ஹோரை எல்லாம் பாத்து தானே செய்கிறோம்னு விட்டுட்டேன்' என்றார்.ஹோரைகளில் சுப ஹோரைகள் அனைவருக்கும் நல்லது செய்து விடுவதில்லை. அப்படி செய்தால் இத்தனை பரிகாரங்கள், பூஜை முறைகள், மந்திரங்கள், ஹோமங்கள் என எதுவும் தேவை இல்லை. அவரவர் ஜாதகப்படியும் கிரகங்களின் குணங்களையும் வைத்து நாம் ஒருவருக்கு கொடுக்கும் நேரம் என்றும் பொய்த்ததில்லை. இதை கூறி அனுப்பி வைத்தேன் இன்று தொலைபேசியில் அழைத்து, தற்போது உபயோகிக்க ஆரம்பித்து விட்டதாகவும், பலன் தெரிகிறது என்றும் கூறினார்.மகிழ்ச்சி.
தற்போது வாழ் நாள் பரிகாரங்களுடன் பண வரவிற்காக வாசனை திரவியமும், வசிய வார்த்தை பிரியோகமும் சேர்த்தே கொடுத்து வருகிறோம்.போன முறை ரூ.50,000 வசிய வார்த்தைகள் மூலம் கிடைத்ததாக கூறிய திரு. Kanaga Rajஅவர்கள் இந்த வாரம் அழைத்து, நீங்கள் கொடுத்த வார்த்தையின் சக்திக்கு அளவே இல்லை என்றார்.தற்பொழுது பணப்புழக்கம் அதிகரித்து விட்டதாக கூறிய அவர், விரைவில் பணத்தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து விட்டு, நான் இழந்த Bolero காரை மீண்டும் வாங்கி, என் குடும்பத்துடன் உங்களை வந்து சந்திப்பேன் என்றிருக்கிறார் !! சந்தோஷமாக இருந்தது !!இது போன்று என்னை நாடி வரும் அனைவருக்கும் தேவைகள் பூர்த்தியாகி நலம் பெற வைக்க வேண்டுமாய் என் ஆராதனை தெய்வமான சாய் நாதரை வேண்டி கொள்கிறேன். மேலும் இதே ஆன்மீக துறையில் இருக்கும் உயர்திரு. கிரிதரன் மகாதேவன், அவர்கள் தன் தோழர்களையும் நாடி வருபவர்களையும், என்னிடம் விநாயகர் வாங்கி வீட்டில் வையுங்கள், நல்லது நடக்கும் என கூறி அனுப்பி வருகிறார் போலும். இது வரை இப்படி செய்வதை என்னிடம் கூறியதும் இல்லை. சமீபத்தில் வந்த ஒரு தோழர் கூறியதும் தான் அறிந்து கொண்டேன். அவருக்கு இன்னும் என் நன்றிகள் பாக்கியுள்ளது. என் மீதும், நான் கொடுத்து வரும் விநாயகரின் அற்புதங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் !! இது போன்று பெயரை சொல்லாமல் செய்து வருபவர்கள் நம் குழுவில் பெருகி வருகின்றனர். முகமறியாமல் பலருக்கு உதவி வரும் அவர்களுக்கும் என் நன்றிகள் !!
__________________________________________________________
மிகுந்த கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் இந்த விநாயகரை வைத்து அகத்திய மந்திரம் கூறி,அகத்தி கீரையால் அர்ச்சனை செய்து வந்தால் எப்பேர்பட்ட கோடிக்கணக்கான கடனாக இருந்தாலும் விரைவில் தீர வழி காட்டி விடுகிறார் நம் வலம்புரி விநாயகர். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம்

நம்மை சூழ்ந்துள்ள 
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.

சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள்


வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.
பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன ?

வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர தாந்த்ரீக பரிகாரம்


அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள் தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம் மிகுந்த பலன் தரும்.நம்பிக்கையுடன் செய்து வரலாம்.இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய வழிகள் மட்டும் தொடராமல் வட நாட்டினர் முறைகளையும் தொடர்ந்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்களையும் சோதித்து பின்பு கொடுத்து வருவதால், பக்தியுடன் செய்வோருக்கு பலன் நிச்சயம் ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறேன்
சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து 1 கிலோ கருப்பு உளுந்து மற்றும் 1 கிலோ நிலக்கரி இரண்டையும் 1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து, அதை சாதகர் தலை மற்றும் உடலை 21 முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்) பின்பு அதை ஓடும் நீரில் (ஆறு,ஏரி,கடல்,நீர் நிலைகள்) விட்டு விட வேண்டும்.பின்பு அங்கேயே நின்று ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டி கொண்டு வீடு திரும்ப,விரைவில் நல்ல செய்தி வரும். இதை சனிக்கிழமை காலை 6-7 அல்லது 1-2 செய்ய மிகுந்த பலன் தரும். முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு முன்பு செய்து விட வேண்டும். மற்றபடி இதற்கு மந்திரம்,திசை போன்றவை ஏதும் இல்லை. வீட்டிலேயே சுற்றி விட்டு பின்பு எடுத்து சென்று நீரில் விடலாம். 

கஷ்டங்கள் அனைத்தும் விலக மூலிகை வழிபாடு


எதிரிகளால் வஞ்சிக்கப்படுத்தல், உறவினர்களால் மற்றும் நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கஷ்ட நஷ்டங்கள், கடன் தொல்லை, தரித்திர நிலை, எதிரிகளின் மிகுந்த தொல்லை, தர்ம நியாயம் இல்லாத வம்பு வழக்குகள் அகல : சனிக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் குப்பைமேனி மூலிகையை (செடி) வேர் அராமல் பிடுங்கி எடுத்து வேரை மட்டும் பூஜையில் வைத்து பூஜித்து வர,மேற்சொன்ன அனைத்தும் விலகி ஓடும். கோர்ட், வழக்கு போன்றவற்றிர்க்கு போகும் பொழுதும், எதிரிகள் தொல்லை அதிகமாகும் போதும் இதன் வேரை தன்னுடன் எடுத்து சென்றால் ஜெயம் உறுதி. இதன் வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது முன்னோர் வாக்கு. 

ஜோதிட சூச்சும பரிகாரங்கள்திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.

பண புழக்கத்திற்க்கு எளிமையான பரிகாரங்கள்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையல் பொருட்கள் மூலம் பல தாந்த்ரீக விஷயங்களை சாதிக்கலாம். இதை அனுபவத்தில் உணரலாம்.ஏற்கனவே நாம் கொடுத்திருந்த பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் விஷயம் பலருக்கு உடனடி பயன் கொடுத்துள்ளதை பதிவின் கருத்து பெட்டியில் காணலாம். ஓரிருவர் பணம் வரவில்லை என்றும் கூறியிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மிக குறைவே. கீழே கொடுத்துள்ள முறைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறையே. அனைவரும் பயன் பெற வாழ்த்துகிறேன். கீழே கொடுத்திருக்கும் அனைத்தும் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்.தேடி தெரிந்து கொள்ளவும்.
(1) AllSpice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
(2) இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
(3) புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
(4) AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ உடன் சிறுது எடுத்து செல்லலாம்.
(5) வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

கடன் நிவர்த்தி முறை

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும். 

அமானுஷ்ய பரிகாரங்கள்


(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.

நம்மை சுற்றியிருக்கும் (AURA CLEANSING) ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா (BAKING SODA) பரிகாரம் !!


நம் உணர்ச்சிகள், மனம் மற்றும் எண்ணங்களில் தெளிவின்மை, தவறான முடிவுகள் எடுத்தல், உடல் நலம், ஆன்மீக வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கும் (AURA) தொடர்புண்டு. மேற்கூறிய எதுவும் சரியில்லை என்றால் அதுவே அந்த ஒளி வட்டத்தின் (AURA COLOUR) நிறமாக தெரியும். நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்தை (AURA) நாமே பார்த்து அறிந்து கொள்ளும் முறையை வேறு ஒரு பதிவில் வெளியிடுகிறேன் !! இப்போது எப்படி அதை சுத்தி செய்வது என்பதை பார்ப்போம். எப்படி காற்றுள்ள இடத்தில் நாம் நின்றாலோ அல்லது நாம் உள்ள இடத்தில் காற்று வந்தோலோ நம் புழுக்கம் மறையுமோ இதுவும் அப்படி தான் !! புற ஒளி வட்டத்தை (AURA) சீர் செய்து நம் எதிர் மறை எண்ணங்களை, நம்மை சுற்றியுள்ள எதிர் மறை சக்திகளை விரட்டுகிறோம் !! அவ்வளவே !! இதுவும் நாம் ஏற்கனவே கூறி பலரால் முயற்சிக்கப்பட்டு பலன் கொடுத்து வரும் 'உப்பு நீர் பரிகார' முறையை போன்றே மிகவும் சக்தி வாய்ந்தது !!! இதற்கு நாள்,கிழமை,நட்சத்திரம்,திதி,நேரம் காலம் எதுவுமில்லை !! எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் !! கிழக்கு முகமாக நின்று மிதமான சூட்டில் உள்ள குளியல் நீரில் சிறிது ஆப்பசோடா எனப்படும் Baking சோடா வை எடுத்து கலந்து உடல் முழுவதும் கைகளை சீப்பு போல் எண்ணி வாறுவது போல் தேக்க வேண்டும். மேலிருந்து கீழ்-பின்பு கீழிருந்து மேல்-3 முறை . அப்படி செய்யும் பொழுது கண்களை மூடி நம் உடலில் உள்ள தீய சக்திகள் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலக தியானித்து கொண்டே செய்ய வேண்டும். முடிந்ததும் அப்படியே 3 நிமிடங்கள் நின்று தியானத்தை முடித்து கொண்டு, பின்பு சகஜமான முறையில் எப்போதும் போல் குளித்து முடிக்கலாம். குளித்து முடித்ததுமே நல்ல மாற்றம் தெரியும். இதை செய்யும் நாளில் ஸோப் உபயோகிக்க கூடாது. வெறும் நீரில் மட்டும் நன்கு குளிக்கலாம். குளித்த அன்றைய தினமே நம் எண்ணங்களில் , நடத்தையில் மாற்றம் தெரியும்.இதை மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் !! வீட்டில் உள்ள அனைவரும் செய்யலாம். (10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாரடைப்பு வந்தவர்கள், இதய கோளாறு உள்ளவர்களை தவிர)
அடுத்த நாள் முதல் தினசரி "ஹிமாலயன் க்ரிஸ்டல் ராக் ஸால்ட்" உபயோகித்து குளித்து வரலாம். சிறிது தண்ணீரில் கலந்து முதலில் உடலெங்கும் தேய்த்து குளித்து விட்டு பின்பு ஸோப் தேய்த்து குளிக்கலாம். இதை தினமும் செய்யலாம். நல்ல மாற்றம் தெரியும். வாங்க இயலாதவர்கள் கள் உப்பு அல்லது இந்துப்பு உபயோகிக்கலாம் !! 70% மாற்றம் தெரியும் !!
(Himalayan Crystal Rock Salt நம்மிடம் கிடைக்கும் !! 1 கிலோ ரூ.150/- அழைக்க வேண்டிய எண் : +919840130156. வெளி ஊர்களுக்கு Courier லும் அனுப்பப்படும் !! )
அன்பர்கள் செய்து விட்டு எனக்கு மாற்றத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் !!