மூலாதாரம், சுவாதிஷ்டானம்,
மணிபூரஹம்,அனாஹதம்,விசுத்தி,ஆக்ஞா,சஹஸ்ராரம்
என படுகின்ற புற கண்களால் காண முடியாத ஏழு சக்கரங்களையும் அவை நம் உடலில் ஏற்படுத்தும் நன்மை தீமைகளை இந்த பதிவில் காண போகிறோம் !!
இவை நம் உடலில் சம நிலையில் இருக்கும் பொழுது நம் மனம்,உடல் அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கிறது !! மேலும் சம நிலையில் உள்ள நாசியும், சம நிலையில் சக்கரங்களும் இருந்து விட்டால் நாம் நல்ல மேன்மை நிலைக்கு சென்று பல அற்புதங்களை உணரவும் நிகழ்த்தவும் முடியும்..பின்பு வேறு எந்த கிரக கோளாறுகள் அல்லது தீய மற்றும் எதிர் மறை சக்திகளை கண்டு பதற தேவை இல்லை !! ஆனால் அந்த நிலை அவ்வளவு எளிதல்ல !!

சம நிலையில் இல்லாத பொழுது -

மூலாதாரம் : உணவு சரியாக உட்கொள்ளாமை, வீரிய குறைவு, மல ஜல கோளாறுகள், பெரும் குடல் மற்றும் சிறு குடல் நோய்கள்.

சுவாதிஷ்டானம் : சிறுநீரகம், கல்லீரல், அடி வயிற்று கோளாறுகள்

மணிபூரஹம் : கணையம் மற்றும் அன்னீரக சுரப்பிகளின் நோய்கள்

அனாஹதம் : இதயம் மற்றும் நுரையீறுகள் சம்பந்தப்பட்ட நோய்கள், எதிர்ப்பு சக்தி இல்லாமை, முதுகு மற்றும் தோல் பட்டை, கை வலி

விசுத்தி : தொண்டை, கழுத்து, பற்கள் மற்றும் ஈறுகள், காது மற்றும் தசைகள் சம்பந்தமான நோய்கள்

ஆக்ஞா : மூளை, நரம்பு மண்டலம், கண், காது, மூக்கு சம்பந்தமான நோய்கள்

சஹஸ்ராரம் : பெருமூளை, உடல் வலிகள், முதுகு தண்டு வடத்தின் உச்சி

இவைகள் குறைவாக இருக்கும் பொழுது 'எல்லாவற்றிலும் ஏமாற்றம், எந்த விஷயத்திற்கும் சந்தோசம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, தொடர்ந்த தலை குத்தல் போன்றவை ஏற்படும், அதே நேரத்தில் இவை அதீதமாக இருக்கும் பொழுது 'எதிலும் குழப்ப நிலை,முடிவெடுக்க முடியாத மனம் மற்றும் விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள் ஏற்படும்.

சக்கரங்களும் கிரகங்களும் :

மூலாதாரம்:              சனி மற்றும் ராகு
சுவாதிஷ்டானம் :    சுக்கிரன்
மணிபூரஹம்       :   செவ்வாய் மற்றும் கேது
அனாஹதம்         :   சூரியன்
விசுத்தி                  :   புதன்
ஆக்ஞா                  :   சந்திரன்
சஹஸ்ராரம்       :    வியாழன் (குரு)

இதை எப்படி எதிர்கொள்வது ?

அரோமா தெரபி, தியானம், நல்ல குருவின் வழிகாட்டல், தொடர்ந்த நேர் மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளல், யோகா, சவுண்ட் மற்றும் கலர் தெரபி மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேலும் மிக எளிய முறையில் இவற்றை எப்பொழுதும் சம நிலையில் வைத்திருக்க கூடிய முறைகளை ஒரு பயிற்சி முகாமாக நடத்தும் திட்டமும் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!