பிஸ்மில்லாஹி ரெஹ்மான் நிர் ரஹீம்


இங்கே கொடுக்கப்பட்டுள்ள அல்லாவை துதிக்கும் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஈசனின் பஞ்சாட்சர மந்திரங்களை போல பலன் தர வல்லவை. ஹிந்து, முகமதியர்கள் மற்றும் வேறு எந்த மதத்தினர் கூறினாலும் பஞ்சாட்சரமும் சரி கீழ்க்கண்ட அல்லாவை துதிக்கும் மந்திரங்களும் சரி, பலன் நிச்சயம்என்பது என் அனுபவத்தில் கண்டது. மத துவேஷம் இல்லாதோர் கூறி பயனடையலாம்.மேலும் ஜாதகம்,கோட்சாரத்தில் ராகுவினால் ஏற்படும் துன்பங்கள் அல்லது ராகு திசை, புத்தி நடந்து கொண்டு இருப்பின் கீழ்க்கண்ட மந்திரங்கள் உடனடி பலன் கொடுத்து வருவதை கண்டு வந்துள்ளோம். முகமதியர் அல்லது நம்பிக்கை உள்ள மற்றோர்களும் கூறி பயன் அடையலாம்.

ஞானம் பெற - யா அல்லாஹ்
அருள் கிடைக்க - யா ரஹ்மானு
செல்வம் பெருக- யா ரஹீமு
அரசாங்க தொல்லைகள் நீங்க- யா மாலிக்கு
காரிய பலிதம் பெற - யா குத்தூஸு
நோய்கள் நீங்க- யா ஸலாமு
தீங்குகள் நீங்க- யா முஉமினு
மனோ வேதனைகள் நீங்க- யா முஹைமினு
எதிரிகள் நீங்க -யா ஜப்பாரு
ஆண் குழந்தை பாக்கியம்- யா முதகப்பிரு
எதிலும் வெற்றிக்கு-யா காலிக்கு
அமைதியான மரணம் சம்பவிக்க - யா பாரிஉ
கஷ்டங்கள் நீங்க- யா முஸவ்விரு
கர்மங்கள் விலக - யா கப்பாரு
பற்றுகள் அகல- யா கஹ்ஹாரு
வளமான வாழ்க்கைக்கு - யா வஹ்ஹாபு
குறைவின்றி உணவு கிடைக்க - யா ரஸ்ஸாகு
எதிலும் வெற்றிக்கு- யா பத்தாஹு
அனைவரின் அன்பையும் பெற - யா ஹாபிளு
பண வசதி- யா ராபிஉ
மேன்மை பெற - யா முஇஸ்ஸு

மேற்கண்டவைகளை 101 முறை துதித்து வர அல்லா அணைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவார். துதிக்கும் முன் உடல் மற்றும் மன சுத்தி முக்கியம்.
"சப்கா மாலிக்கு ஏக்" என்ற சீரடி மகான் சாய் நாதரின் கூறுக்கு ஏற்ப எவர் ஒருவர் மிகுந்த நம்பிக்கையோடும் அன்போடும் கடவுளை துதித்து வருகிறாரோ, அது ராமராக இருப்பினும் ரஹ்மானாக இருப்பினும், பலன் கிடைப்பது உறுதி !!

ஓம் நமசிவாய !!

Post a comment

0 Comments