'லக்ஷ்மி கட்டு' அறுபட சூட்சுமமான பரிகாரம்


வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குன்மதினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும். பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பதாய் வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம். தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும். இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும். 'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்.

Post a comment

0 Comments