Sunday, 28 June 2015

பூரட்டாதி நட்சத்திரத்தினர் கூற வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவனாய தன தான்யாதிபதயே தனதான்ய ஸம்ருதிம்மே தேஹி தபாய சுவாஹா :


இதை தினசரி 108 முறை கூறி வர பண கஷ்டங்கள் அடியோடு விலகும்.

உத்திராடம் நட்சத்திரத்தினர் கூற வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதி சர்வ சௌபாக்ய
ஜனனி ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஸ்வரூபி காமதேனவே ஸ்வாஹா :


இதை தினசரி 108 முறை கூறி வர சரிந்த தொழில் சிறக்கும், மன தைரியம் உண்டாகும், தாம்பத்திய பிரச்சனைகள் தீரும்

அனைத்து கஷ்டங்களும் விலக ரேவதி நட்சத்திர அன்பர்கள் கூற வேண்டிய மந்திரம்


" ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்தினே சனைச்சராய
  க்லீம் ஐம் சௌம் ஸ்வாஹா "


தினசரி 108 முறை மேற்கண்ட மந்திரத்தை கூறி வர, ஸ்திரீ சாபம், தேவையில்லாத பயங்கள் விலகுவதோடு சனியினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும்,கஷ்டங்களும் விலகும். (மற்ற நட்சத்தினரும் கூறி வரலாம்-பலன் உண்டு )

ஆடுகள் தரும் அளப்பரிய பலன்கள் :


குறிப்பு : ஆடுகளை உணவாக கொள்ளாதவர்களுக்கு மட்டுமே கீழ்க்கண்டவை பயன் கொடுத்துள்ளது .
தொடர்ந்த துர் அதிர்ஷ்டம், எல்லா விஷயங்களிலும் தோல்வி மற்றும் முடியும் என்று கடைசி வரை சென்று முடியாமல் போகும் காரியங்கள், ராகு திசை மற்றும் புத்தி ஜாதகத்தில் இருப்பின், அஷ்டமத்தில் ராகு, காலை எழும் பொழுது சோம்பல், இரவு அதிக நேரம் தூங்காமல் இருப்பவர்கள், துர் சகவாசம் உள்ளோர், குடியின் வசம் சிக்கி தவிப்போர் போன்ற அனைத்திற்கும் ஆடுகள் கொட்டகையில் அமர்ந்து தினமும் சிறிது நேரம் அவைகளை கண்டு வந்தாலோ அல்லது அவைகளின் படத்தை வைத்து தினசரி 15 நிமிடங்கள் பார்த்து வந்தாலோ மேற்கண்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முடிவில் மாற்றம் நிகழும். மேஷம் மற்றும் ரிஷப ராசியினர் பார்த்து வந்தாலும் பயன் தரும்.மேலும் குழந்தை பேறு தாமதமாவோரும் பார்த்து வர பலன் உண்டு.
படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகள் மற்றும் வியாபாரத்தில் தொடர் நஷ்டம் கண்டு வருவோர் புதன் கிழமை அன்று மதியம் 1-2 க்குள் ஆடுகளுக்கு பச்சை கீரைகள் தொடர்ந்து வாங்கி கொடுத்து வர கல்வி அறிவு மேம்படும்-வியாபாரம் செழிக்கும். குறிப்பாக ஜோதிடர்கள் இதை செய்து வரலாம்.வாக்கு வன்மை கூடும். ஜாதகத்தில் புதன் நீச்சமாக இருப்போரும் வாழ் நாள் பரிகாரமாக இதை செய்து வர நல்லவை நடக்கும்.

எதிர்பாரா பண வரவிற்கு எளிய பரிகாரம்


இந்த பரிகாரம் செய்ய ஏற்ற நாள் வெள்ளிகிழமை-காலை 6-7 மணி அல்லது மதியம் 1-2 மணி. முடியாதவர்கள் மட்டும் இரவு 8-9 மணியளவில் செய்யலாம்.
ஒரு கைக்குட்டை அளவுள்ள வெள்ளை துணியை சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து கொள்ளவும். பின்பு அதில் புதிதாக வாங்கிய கையளவு கல் உப்பு, மற்றும் 6 மொச்சை, 6 டைமண்டு கற்கண்டு சேர்க்கவும். பின்பு துணியின் நான்கு மூலைகளிலும் சிறிது குங்குமப்பூ தேய்த்து முடிச்சாக கட்டி வீட்டின் அல்லது அலுவலகத்தின் வட கிழக்கு மூலையில் யார் கண்ணும் படாதவாறு வைத்து விடவும். மறு வாரம் அவற்றை எடுத்து வில்வ மரம் அடியில் பிரித்து போட்டு விட்டு , அதே துணியை எடுத்து வந்து மீண்டும் செய்து வரலாம். அவரவருக்கு தேவையான வாரங்கள் செய்து பயனடையுங்கள். கை மேல் பலன் தரும் எளிய பரிகாரம் இது.

குன்றி மணியின் தாந்த்ரீக பலன்கள்


கருப்பு சேர்ந்த சிகப்பு குன்றிமணி : எளிதில் விளையக்கூடியது. எனினும் அபார சக்தி கொண்டது. வீட்டில் வைத்தோ அலுவலகத்தில் வைத்தோ தாயத்து கொண்டு அணிந்தோ உபயோகிக்கலாம் பண பிரச்சனைகளை போக்கும்.
கருப்பு குன்றிமணி : ராஜஸ்தான் மாநில காடுகளில் விளையும் இவை மிகுந்த சக்தி கொண்டவை. இதை வைத்திருப்போறுக்கு ஏவல் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஏற்படாது. காளியின் ரூபமாக கருதபடுபவை.பல தாந்த்ரீக பயன்பாட்டிற்கு உபயோகமானவை. தாயத்தில் அணிந்தோ அல்லது பாக்கெட்டில் வைத்தோ இருந்தாலே மிகுந்த பயன் தரும்.கிடைப்பது அரிது.
வெள்ளை குன்றிமணி : அம்பாள் ரூபமாக கருதப்படுபவை. மிகுந்த பண கஷ்டம், தொடர்ந்த பண சரிவு, வியாபாரத்தில் நஷ்டம்,மன அமைதியின்மை, படிப்பில் நாட்டமின்மை போன்றவை இருப்பின் இதன் துணை கொண்டு ஜெயிக்கலாம். அபார சக்தி கொண்டவை.
சுத்த சிகப்பு குன்றி மணி : மனிதர்களின் துர் அதிர்ஷ்டத்தை போக்க வல்லவை. தொடர்ந்து எதிர் மறையாக செயல்படும் மற்றும் சிந்திக்கும் மனிதர்களின் மனதை மாற்ற கூடியவை.
மொத்தம் பன்னிரண்டு விதமான வண்ணங்களில் வளரும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தாந்த்ரீக பயன்பாட்டிற்கு ஏற்றவை. மற்றும் மனிதர்களின் பல் வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லவை.

செல்வ நிலை மேலோங்க :


"திடீர் பண வரவிற்கு" என்ற தலைப்பில் 11 குன்றிமணி மற்றும் பவளமல்லியின் வேர் எடுத்து தாயத்தில் இட்டு அணிய சொல்லியிருந்தோம்-ஒரு வருடம் முன்னால்.
இதை செய்த பலரும் தாங்கள் அடைந்த பயன்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர்-பலர் இவை எங்கு கிடைக்கும் என தொடர்ந்து கேட்டவாறே இருந்து வருவதை தொடர்ந்து அனைவரும் பயன் அடையும் வகையில் மேற்கண்ட பண வரவை அளிக்கும் 11 குன்றிமணி மற்றும் சக்தியூட்டபட்டு பூஜிக்கப்பட்ட பவளமல்லியின் வேர் சேர்த்து அனைவருக்கும் கட்டணமில்லாமல் அளிக்க முடிவு  செய்துள்ளோம். கீழ்க்கண்ட தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொண்டு தேவைப்பட்டவர்கள் வந்து பெற்று கொள்ளலாம்.வழக்கம் போல் வெளியூர் அன்பர்கள், சுய விலாசமிட்ட தபால் தலையுடன் அனுப்பி வைத்தால் அவர்களுக்கும்
அனுப்பப்படும் .
இதை வெள்ளி அல்லது செம்பு தாயத்தில் இட்டு கழுத்தில் மட்டுமே கட்டி கொள்ள வேண்டும். மிகுந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம் இது. பண ரீதியாக கஷ்டங்களை அனுபவித்து வரும் அனைவருக்கும் மிகுந்த பயன் தரும் ஒன்றாகும் இது.தேவைப்பட்டவர்கள் பெற்று பயனடையலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : +919677184802
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033
ருத்ர பரிஹார் ரக்‌ஷா செண்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33
தொலைபேசி எண் : +919677184802