தொடர் வறுமைகள் நீங்க கோமதி சக்கர வழிபாடுவீட்டில் பல ஆண்டுகள் தொடர் வறுமைகள் இருந்து கொண்டே இருப்பின் கீழ்கண்ட கோமதி சக்கர வழிபாட்டினை செய்து பயன் பெறலாம். மஹாலக்ஷ்மியின் ரூபமான இதற்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வரக்கூடிய சக்தி உண்டு.

11 கோமதி சக்கரங்களை ஒரு காட்டன் மஞ்சள் துணியில் சக்கர முகம் மேல் நோக்கியவாறு வைத்து ஒவ்வொன்றிலும் சுத்தமான சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, மஹாலக்ஷ்மி அஷ்டகம் அல்லது சுதர்சன ஸ்லோகம் கூறி வெள்ளியன்று வழிபட வேண்டும். பின் தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து பூஜையை முடிக்கவும். மறுநாள், சக்கரங்களை அடங்கிய துணியை முடிச்சாக கட்டி அதற்கு தூப தீபம் காட்டி வீடு முழுதும் அஷ்ட திக்குகளில் முடிச்சை  வைத்து எடுக்கவும். தனி வீட்டில் உள்ளோர் முடிச்சை கொண்டு வீட்டை 6 முறை சுற்றி வருவது மேலும் பயன் தரும். பின்பு முடிச்சை  ஆறு, குளம் அல்லது கடலில் விட்டு விட்டு நேராக வீடு திரும்பவும். இதை வருடம் ஒரு முறை பரிகாரமாக செய்து வந்தால் போதும்.

குறிப்பு : மேற்கண்ட பூஜையில் தன ஆகர்ஷண தூபம், ஊதுவத்தி உபயோகிப்பது மேலும் சிறப்பு. கோமதி சக்கரம் மற்றும் தூபம் போன்றவை, பக்தி பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். மேலும் நம் சென்டரிலும் அணுகலாம்- +918754402857 )

Post a comment

0 Comments