Tuesday, 18 October 2016

பெற்றோரை கதறடித்த பெண்

தற்சமயம் காதல் என்கிற பெயரில் நடக்கும் அநியாயங்களுக்கு அளவே இல்லாமல் போய் வருகிறது !! சிறிது கூட பெற்றெடுத்த தாய் தந்தையரை பற்றி கவலை இன்றி, இரக்கம் இன்றி பிள்ளைகளும், பெண்களும் நடந்து வருவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது !! இது, சில காலம் முன்பு நடந்த சம்பவம். பெற்றோரை கதறடித்த பெண்ணின் விஷயங்கள் !!

என்னிடம் ஆலோசனைக்கு கொல்லிமலையில் உள்ள ஒரு பெரியவர் மூலம் கேள்விப்பட்டு வந்திருந்தனர் ஒரு பெற்றோர் !! இரண்டு மகள்களை பெற்ற அவர்கள் மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர் !! மூத்த மகள் காதல் வயப்பட்டு வந்து கூறியதும், ஜாதி பேதம் பார்க்காமல் அவளின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு திருமணம் செய்து வைத்து, அது தவறான திருமணமாய் முடிந்து, கைக்குழந்தையுடன் கணவனை பிரிந்து தற்போது இவர்களுடன் வாழ்ந்து வருகிறாள். ஆனால் இதை பற்றி எல்லாம் யோசிக்காமல், வேறு தேவைக்காக உபயோகப்படுத்தும்  ஒருவனுடன் காதல் என்று வந்து நின்றிருக்கிறாள் இளையவள் !! பதறிய பெற்றோர் எவ்வளவோ எடுத்து கூறியும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்க, பெற்றோரும் பிள்ளையை பற்றி விசாரித்து, அவன் நிஜ முகம் கண்டு, அவனுடன் திருமணம் செய்து வைக்க முடியாது என கராறாய் கூற, பெண் பேயாட்டம் ஆடி இருக்கிறாள். திடீர் என கிளம்பி வெளியே சென்று ஒரு நாள் முழுதும் காணாத அவளை தேடி தெரு தெருவாய் அலைந்து திரிந்து, போலீசில் சொன்னால் அவப்பெயர் ஆகி விடுமே என கவலையுடன் வீடு திரும்ப, மறு நாள் காலை வீட்டிற்கு வந்த பெண், ஒழுங்காக அவனுடன் திருமணம் செய்து வைக்காவிட்டால் இது போன்று தான் இருப்பேன் என்றாளாம் !! மனமுடைந்த பெற்றோர் ஒரு ஜோதிடரை சந்தித்து கேட்க, அவர் துல்லியமாக கணித்து, 'பெண்ணுக்கு வசிய மருந்து கொடுக்கப்பட்டுள்ளது - மேலும் பெண் கன்னி தன்மையை இழந்திருப்பாள் என்றும் மேலும் சீரழிவதற்குள் மருந்தை எடுக்கும் வழியை பாருங்கள் என கூறி வேறு ஒருவரிடம் அனுப்பியுள்ளார். அவரும் மிக சிறந்த முறையில் மருந்தை முறிக்கும் மருந்து கொடுத்து,அது பெண்ணிற்கு கொடுக்கப்பட்டது. மருந்து வெளியேறியது என்றாலும், எந்தளவிற்கு முழுமையாய் என தெரியவில்லை, காரணம், பெண் மீண்டும் பிடிவாத போக்கும், பகல் முழுதும் அந்த நபருடன் சுத்துவதுமாக இருந்திருக்கிறாள். பின் இவர்கள் வேறு ஒரு மாந்த்ரீகரை தேடி கொல்லிமலை செல்ல, அங்குள்ள ஒரு பெரியவர் இவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதை கண்டு விஷயம் கேள்விப்பட்டு, எம்மிடம் அனுப்பி வைத்துள்ளார். கொல்லிமலை மற்றும் சதுரகிரியில் நம் முறைகளை பற்றி அறிந்த அன்பர்கள் பல உண்டு.

அனைத்தையும் கேட்டு பின் அவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பினோம்.  மூன்று மாதங்கள் கழித்து, பெண்ணுடன் மீண்டும் காண வந்தனர் பெற்றோர். தற்சமயம் புத்தி தெளிந்தாகவும், ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் என தெரியவில்லை என்றும் கூறியது அந்த பெண் !! இந்த பெண் விலகியதால், அந்த நபர் தொடர்ந்து பயமுறுத்தி பிளாக் மெயில் செய்து வர, பெண் திருந்தியதால், வெகுண்டெழுந்த பெற்றோர் காவல் துறையை நாடி, அந்த நபர் இப்போது காவலில் !!

அந்த பெற்றோரின் மகிழ்ச்சிக்கும் நன்றி கலந்த வார்த்தைகளுக்கும் வேறு ஈடு இல்லை இவ்வுலகில் !! 

No comments: