ஸ்ரீமான் ராமருக்கும் புண்யவதி சீதைக்கும் திருமணம் ஆன தினமே விவாஹ பஞ்சமியாக கொண்டாடப்பட்டு வருகிறது, தொன்று தொட்டு. அப்படிப்பட்ட புண்ய தினம் நாளை-4.12.16.

இத்தினத்தில் திருமணம் வேண்டி காத்திருப்போர், தன் மகன் மகளை திருமணம் செய்ய பொருள் இல்லாது தவிப்போர், மற்றும் தன் பெண்,ஆண் பிள்ளைகள் தவறான மணமுடிக்காது, நல்ல வரனை கைப்பிடிக்க வேண்டியிருப்போர், மண வாழ்வில் நிம்மதியற்று இருப்போர் அனைவரும் மாலை குளித்து, துவைத்த ஆடை அணிந்து ராமரின் பட்டாபிஷேக படத்தை வைத்து, கோலமிட்டு , தனி மண் அகலில் நெய் தீபமேற்றி, ராமாயணத்தின் சீதா ராம விவாஹ சர்க்கத்தை படித்து முடித்து நிவேதனம் செய்து வழிபட, மேற்கண்ட துன்பங்கள் தீர்ந்து நல்வழி பிறக்கும். அப்படி செய்ய முடியாதோர் ராமரின் சன்னதி கர்ப கிரக விளக்கிற்கு தூய  நெய் கொடுத்து , சன்னதியில் ஒன்றரை மணி நேரம் இருந்து மனமுருகி வேண்டி வர மேற்கண்ட அதே பலன் உண்டு. வருடத்தில் ஒரு முறையே வரும் இந்த கிடைத்தற்கரிய நாளை பயன்படுத்தி நல் வழி பெற எல்லாம் வல்ல அந்த சீதாராமரை பிரார்த்திக்கிறேன்.

"ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

                ஹரி ஓம் தத் சத்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!