
இன்றைய புனித நாளில் சிவ சன்னிதானம் சென்று அங்குள்ள நடராஜர் சந்நிதியின் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் கொடுத்து, சிவபெருமானுக்கு வில்வ இலை மாலை சூட்டி வணங்கி வர, ஈசனின் பரிபூர்ண அருள் கிட்டும். மேலும், இன்றைய தினம் இரவில் அமைதியாக குறைந்தது பதினைந்து நிமிடங்கள் நிலவு தரிசனம் செய்ய, மனோபலம் கூடும். நிலவு தரிசனம் செய்யும் சமயம் கீழ்கண்ட மந்திரம் மனதினுள் கூறி வருவது மிக நன்று. இந்நாளில் வீட்டில் ஈசனின் முன் தனி நெய் தீபம் ஏற்றி வைத்து, பச்சரிசியும் வெல்லமும் கலந்து செய்யும் களியை நிவேதனம் செய்து வர நற்பலன்கள் கூடும். பரிகாரத்திற்காக ருத்ராட்சங்கள் அணிய விரும்புவோர் இந்நாளில் அணிவது கூடுதல் சிறப்பு.
மந்திரம் : நடராஜா நடராஜா ஜெய் சிவ சங்கர நடராஜா
சிவராஜா சிவராஜா சம்போ சங்கர சிவராஜா
ஹரி ஓம் தத் சத் :