
மேற்கண்ட திதி இன்று 9.1.17 திங்கள் கிழமை ஆகும். குறிப்பாக மார்கழி வளர்பிறை துவாதசியில் வறியோர்க்கு அன்னமிடுவது, பல மடங்கு நன்மைகளை சேர்க்கும். இன்று சிலருக்கு இடும் அன்னம் பல லட்சம் பேருக்கு இடும் அன்னதானத்திற்கு சமமாகும்.
முறை :
காலை பல் துலக்கி, முதலாவதாக காக்கைக்கு ஏதேனும் உணவிட்டு, பின் நீரோ அல்லது தேநீர் போன்றவை அருந்தலாம். காலை சிற்றுண்டி முடிந்ததும், ஏதேனும் உணவை நாய்களுக்கு, இலையிலோ அல்லது பேப்பரிலோ வைத்து, பின் முடிந்தால் பசுவிற்கு வாழைப்பழம் அல்லது உங்கள் சக்திக்கேற்ற உணவை கொடுத்து, பின் மதியம் உங்களால் முடிந்த அளவு நபர்களுக்கு தயிர் சாதம் அல்லது வேறு உணவுகளை கொடுத்து வரவும். அன்னதானம் இடும் சமயம் பறவைகளாயினும், மிருகங்களாயினும், மனிதர்களாயினும் சரி, அன்னமிடுவோர் கால்களில் செருப்பு அணிந்து இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்க. அன்னதானம் இடும் நாட்களில், பலனை பெற, அசைவம்-முட்டை உட்பட தவிர்க்கவும்.
இப்பதிவை தாமதமாக படிப்போர், இரவில் நாய்களுக்கும், முடிந்த அளவு மனிதர்களுக்கும் உணவிட்டு வரவும்.
ஹரி ஓம் தத் சத் :