
மேலும் நந்தியெம்பெருமானின் தலையில் கை வைத்து காதில் நம் எச்சில் பட விருப்பங்களை கூறுவது மகா பாவச்செயலாகும். இது தற்காலத்தில் உதித்த ஒன்று. கோவிலில் எந்த ஒரு விக்ரகத்தையும் தொடாமல் வழிபட்டால் மட்டுமே பலன். அற்புத மந்திர சக்திகள் கொண்ட விக்கிரங்களை கைகளால் தொட்டு பெரும் பிழையை செய்ய வேண்டாம். மேலும், சண்டிகேஸ்வரர் சதா நேரமும் சிவ தியானத்தில் இருப்பவர். அவரை வழிபடுவதாக கூறி கை சொடுக்குவது, கை தட்டுவது,ஏன், இன்னும் சிலர் தலையில் கொட்டி கூட வழிபடுகின்றனர், இத்தகைய பாவச்செயலை செய்து விட்டு, நம் துன்பங்கள் தீரவில்லையே
என இறைவனை குறை கூறி என்ன பயன்? ஆகவே சண்டிகேஸ்வரர் சன்னதியில் சத்தம் எழுப்பாமல் மெதுவாக 'சிவயநம' மந்திரம் கூறி வழிபடுவதே முறை. ஒவ்வொரு முறை சிவன் கோவிலுக்கு செல்லும் சமயமும் சண்டிகேஸ்வரரின் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வைக்க மறந்து விடாதீர். மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் இவை உங்கள் வாழ்வில்.
ஹரி ஓம் தத் சத்: