
நாளைய தினம் 25.1.17
வரும் பிரதோஷம் மேற்கண்ட அனைத்தையும் அருளும் ஒன்றாகும். இன்றைய தினம் பிரதோஷ வேளையில் ஈசனின் கர்ப்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, பின் வெளி பிரகாரத்தில் பச்சை திரி கொண்டு 5 நெய் விளக்கேற்றி வழிபட மேற்கண்ட அனைத்து நலன்களும் வந்து சேரும். சண்டிகேஸ்வரர் சன்னதியிலும் ஒரு நெய் விளக்கேற்றவும். இந்நாளில் நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுதல் அளவற்ற இன்பங்களை தரும். மேலும், பண வரவு அதிகரிக்க இன்றைய தினம் நாயுரு செடியொன்றை வாங்கி வைத்து வளர்த்து வரலாம். இன்றைய தினத்தில் மாடு முக்கியமாக ஆடுகளுக்கு கீரைகள் கொடுத்து வர மிக நன்று. நாய்களுக்கு உணவிடுவதும் இன்றைய நாளில் நன்மை சேர்க்கும்.