ராகு கேது பெயர்ச்சியால் நன்மைடைய 27.7.17வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சிக்காக உங்கள் அனைவரின் நலனுக்காக நடக்கவிருக்கும் ஹோமத்தினை பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இந்த ஹோமத்திற்கு ரிஷப ராசியினர் / லக்கினத்தினர் பிரசாதத்திற்காக வழங்கவிருக்கும் லட்டு மற்றும் அன்னதானத்தில் கொடுக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு பொறுப்பேற்று கொள்ளலாம். இது ஒரு சூட்சுமம் நிறைந்த பரிகார முறையாகும். மேஷம், கன்னி,,சிம்மம், தனுசு, கும்ப ராசியினர் ஹோமத்திற்கு தேங்காய், நெய் மற்றும் பூ, பழ வகைகள், ஹோம சமித்துகள் கொடுத்து வர, நன்மைகள் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக சிம்ம ராசி மற்றும் லக்கினத்தினர் ஹோமம் நடக்க இருக்கும் இடத்தினை கொடுத்து உதவ (மண்டப வாடகை) , கடந்த ஒன்றரை வருடமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து துன்பங்களும் பறந்தோடுவது உறுதி. இங்கே குறிப்பாக சொல்ல வேண்டியது, ஒருவர் முழு வாடகையும் ஏற்று கொள்ளவது அல்லது பிரசாதத்திற்கு  முழு தொகையும் கொடுப்பது என்பது அவசியமில்லை. அவர்களால் முடிந்த எந்த ஒரு தொகையும், நிச்சயம் பரிகாரத்திற்கு பலம் சேர்க்கும். துலா ராசி மற்றும் லக்கினத்தினர், அங்கு பாராயணம் செய்ய வரும் பெண்களுக்கு புடவைகள், ரவிக்கை துணி மற்றும் வளையல்கள் கொடுத்து பரிகாரத்திற்கு பலம் சேர்க்கலாம். இது போன்ற கிரக பெயர்ச்சிகளுக்கு பலர் ஹோமங்கள் செய்து வந்தாலும், இது போன்று ஒரு லக்ஷ ஆவர்த்திகள் செய்து மிக அதீத சக்தி வாய்ந்த பரிகார யக்ஞமாக மாற்றுவது எவரும் இல்லை. நம் புராதன கிரந்தங்கள், இது போன்ற யாகத்தில் கலந்து கொள்வதும் அதற்கு உரிய பொருட்களை கொடுத்து வருவதும், மிக பெரிய மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தும் என்று உறுதியளிக்கின்றன. வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறுவோம். மற்ற ராசியினருக்கு எவ்வகை பரிகாரங்கள் என்பதை அடுத்த பதிவினில் காண்போம்.

லக்ஷ ஆவர்த்தி ராகு கேது பெயர்ச்சி பரிஹார ஹோமம் 27.7.17
நடத்திவைப்பவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
இடம் : ஸ்ரீகைலாஷ் மஹால், மௌன சாமி மடம் தெரு, அம்பத்தூர், சென்னை
நேரம் : காலை 8 முதல் மாலை 5 வரை

மேற்கண்ட பொருட்களை கொடுக்க மற்றும் மேல் விவரங்களுக்கு :

மேலும் விவரங்கள் பெற :
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments