ராகு கேது பெயர்ச்சியால் நன்மைடையசூட்சும பரிகாரங்கள்- நிறைவு பாகம்

லக்ஷ ஆவர்த்தி ராகு கேது பெயர்ச்சி பரிஹார ஹோமம் 27.7.17
நடத்திவைப்பவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
இடம் : ஸ்ரீகைலாஷ் மஹால், மௌன சாமி மடம் தெரு, அம்பத்தூர், சென்னை
நேரம் : காலை 8 முதல் மாலை 5 வரை

வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி ஹோமத்திற்கு பரிகார உபயமாக மிதுனம், கடகம், விருச்சிகம்,மகரம் மற்றும் மீன ராசியினர் எவ்வித பொருட்களை கொடுத்து பயன் பெறலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

மிக முக்கியமாக கடக ராசியினர் : இவர்களே இந்த முழு ஹோமத்தையும் ஏற்று செய்ய வேண்டிய நிலையில் இந்த பெயர்ச்சி உள்ளது எனலாம். இவர்கள் இந்த ஹோமத்திற்கு நல்லெண்ணெய் மற்றும் ஹோமத்திற்குண்டான விறகுகள், சமித்துகள், மற்றும் வறட்டிகள் கொடுத்தும், ஹோமம் செய்யும் புரோகிதர்களுக்கு சம்பாவனை (தட்சிணை) கொடுத்தார்களேயானால் ஹோமம் செய்த பலன் கிட்டுவது உறுதி.மேலும், இந்நாளில் இடப்படும் வெண்பொங்கலுக்கு இவர்கள் உபயம் செய்யலாம்.

மிதுன ராசியினர் ஹோமத்தில் விட தாராளமாக நெய் கொடுக்கலாம்.மேலும் ஹோமத்தை செய்யும் புரோகிதர்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் கொடுக்க பலன் இரட்டிப்பாகும்.

விருச்சிக ராசியினர் ஹோமத்திற்கு தேவைப்படும் செங்கற்களை கொடுக்கலாம். மேலும் இவர்கள் ஹோமத்தில் இட நவதானியங்கள் வாங்கி கொடுப்பதும் பலன் தரும். எலுமிச்சை அன்னதான உபயம் செய்யலாம்.

மகர ராசியினர் நல்லெண்ணெய் ஹோம சமித்துகள் மற்றும் அன்னதான உபயம். புளியோதரை அன்னதான உபயம்.

மீன ராசியினர் வாழைப்பழங்கள், புரோகிதர்களுக்கு தட்சிணை மற்றும் வேட்டி  அங்கவஸ்திரம் கொடுத்து ஆசி பெறலாம்.  இவர்கள் இந்த நாளில் வழங்கப்படும் சக்கரை பொங்கல் அன்னதான உபயமும் செய்யலாம்.

மேற்கண்ட எல்லாவற்றிற்கும் மேலாக, ஹோமத்தில் கலந்து கொள்வது மிக முக்கியம். வெளியூர் அன்பர்கள் போதிய தபால் தலையிட்ட கவர்கள் அனுப்பி பிரசாதம் மற்றும் தான ஆகர்ஷணம் செய்யும் ரக்த சந்தானம் பெற்று கொள்ளவும்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Post a comment

0 Comments