அபிசார தோஷம் , மாந்த்ரீக தோஷங்களுக்கு உட்பட்டு உள்ளோரை ஜாதகத்தின் மூலம் வெகு எளிதில் கண்டு பிடிக்க இயலும்-ஆறு மற்றும் எட்டாம் இடங்கள், பார்வை மற்றும் அதில் உள்ள கிரகங்கள் மற்றும் நடப்பு திசா புத்தியை வைத்து.
ஒரு சிலர் அவர்களிடம் செல்பவர்கள் எவராயினும், அவர்களின் கஷ்டங்களை கூறியுடன், செய்வினை செய்யப்பட்டு உள்ளது என கூறிவிடுகின்றனர். இவர்களும் அதை நம்பி, மற்றும் அதையே நினைத்து கொண்டு, ஜோதிடர், மாந்த்ரீகர் என விண்டோ ஷாப்பிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதில் உண்மையாக ஒரு சிலர், அவர்களுக்கு அப்படி எந்த செய்வினையும் செய்யப்படவில்லை என கூறினால் நம்பாமல், அவர்களையே ஒன்றும் தெரியாதவர் என நினைத்து விடுகின்றனர்.

செய்வினை எப்படி செய்யப்படுகிறது? 

குறிப்பிட்ட சில தேவதைகளை வைத்து,மூலிகைகளை கொண்டு,  உதாரணமாக 'யக்ஞனி' என ஒரு தேவதை உண்டு. இதை வைத்து அபிசார தோஷத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி அவரை அடி பணிய வைத்தல், அவர்களின் சொத்துக்களை பறித்தல், அழித்தல் என பல முறைகளை கையாள்வர். இந்த அபிசார தோஷமானது பன்னிரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே வேலை செய்யும். இதில் துயரம் என்னவென்றால், அந்த ஆண்டுகளுக்குள், பீடித்துள்ள நபர், முக்காலே முழு சதவீதம், செல்வ நிலையிலும் சரி, மன நிலையிலும் சரி, அழிந்து போய் இருப்பார்.

என்னவெல்லாம் ஆகும் என்பதை பார்ப்போமா?  

உணவின் சுவை தெரியாமை, எவர் மீதும் சந்தேகம் அல்லது இனம் தெரியாத பயம், வீட்டில் மிருகங்கள், மீன்கள் காரணமின்றி திடீரென இறத்தல், கொடூர கனவுகள், அடிக்கடி விபத்துகள் அல்லது கால் தடுக்கி கீழே விழுதல், வீண் விரயங்கள், பொருட்கள் களவு போதல், மன நிம்மதியின்றி போதல், மனம் தேவையற்ற சிந்தனையாகவே எப்பொழுதும் இருத்தல் போன்றவை சில அறிகுறிகள். இதில் நீங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, மேற்சொன்ன அறிகுறிகளில் பல சாதாரணமாகவே நமக்கு வந்து போவதுண்டு. இதை படித்து விட்டு, உடனே தங்களுக்கும் அவ்வித அபிசார பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் என எண்ணக்கூடாது. மேற்சொன்னவை ஒரு உதாரணத்திற்கும், விழிப்புடன் இருப்பதற்கும் தான்.நகங்களை வெட்டி கீழே போடுவது, உதிர்ந்த முடிகளை அப்படியே விட்டு வைப்பது போன்றவை கால நேரம் சரியில்லாமல் போயின், கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

எப்படி குணப்படுத்துவது ?

குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் துணை கொண்டு இதனை எளிதில் குணப்படுத்த முடியும். ஆழ்ந்த நம்பிக்கையும், மன உறுதியும் முக்கியம். தகுந்த நபரை கொண்டு அப்படிப்பட்ட ஏவல் உள்ளதா என்பதை கண்டு கொண்டு, பின் அதற்குண்டான பரிகாரங்களை செய்ய, துன்பங்களில் இருந்து நிரந்தரமாக மீளலாம். பொதுவாக, இப்படி இருப்பின் செல்வ நிலையில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஒரு சூட்சும பரிகாரம் உள்ளது.
முதலில் அந்த நபர் மற்றும் அவர் வசிக்கும் இடம், இரண்டையும் பஞ்சகவ்யம் கொண்டு குளிக்க/கழுவ வேண்டும். பின் தினசரி மாலை வேளையில் சீதாரி தூபம் இட்டு வரலாம். இந்த தூபத்தை பற்றி ஒரு தேவார பாடலே உண்டு. தூப முறையை அடுத்த பதிவில் காணலாம்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!