அனைத்து தேவைகளும் தீர்க்கும் வசிய யந்திரங்கள்


யந்திரம் : மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு சோதனைகளுக்கும் தீர்வாக  தாந்த்ரீகத்தில் பல் வேறு யந்திர முறைகள் உள்ளன. தகுந்த நேரம்,நட்சத்திரம், நாள் போன்றவை இனம் கண்டு உபாசனையுடன் இவற்றை பூஜிக்க, தான் சென்று சேரும் இடத்தின் தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்யும்.

துஷ்ட சக்திகள் அகல, கணவன் மனைவி அன்னியோன்னியம், வியாபார/தொழில் வெற்றி, பணத்தடைகள் நீங்க, மன வியாதி அகல, தீராத வியாதிகள் தீர, புகுந்த வீட்டில் பெண் நிம்மதியாக வாழ, நலிந்த தொழில்கள் வீறு நடை போட, எதிரிகளால் தொல்லைகள் நிற்க,விரும்பியவர் வசப்பட,  என சொல்லி கொண்டே போகலாம். இது மட்டுமல்லாது கிரக கோளாறுகளுக்கும், ஒவ்வொரு தெய்வம் மற்றும் தேவதைகளுக்கும் என யந்திர முறைகள் உள்ளன. எம் அனுபவத்தில் இவற்றை கொடுத்து நாம் கூறிய முறையில் உபயோகம் செய்து வருகிறவர்கள் மிகுந்த வெற்றியை பெற்றுள்ளனர். சமீபத்தில், திருவண்ணாமலையை அடுத்து சிறிய மடம் நிறுவி நடத்தி வரும் நிறுவனர் ஒருவர், தினசரி அன்னதானம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் தகுந்த நன்கொடை கிட்டாமல் திண்டாடி வந்தார். அவரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கு இணைந்து, அவ்விடத்தில் ஏதேனும் குறை உள்ளதா என சென்று பார்த்து வந்தோம். அவ்விடத்தில் யோகினிகளின் சூட்சும நடமாட்டம் உள்ளதும், அவர்களுக்கு உபாசனை செய்யாமல் இருப்பதால், மனக்குறையுடன்  இருப்பதும் தென்பட்டது. உண்மையில் நம்மை சுற்றி பல வித சூட்சும சக்திகள் இயங்கி கொண்டிருக்கும். அவற்றில் தெய்வீக சூட்சும சக்திகள் ஏதேனும் விருப்பம் கொண்டு வந்தமர்ந்து, அவற்றை அறியாமல் நாம் திருப்தி செய்ய தவறின், சில கஷ்டங்களுக்கு உட்படுவோம். இதை உணர்ந்து, அவருக்கு அறுபத்து நான்கு யோகினிகள் (இவர்களுடைய கோவில் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ளது-மேல்விவரங்களுக்கு எம்முடைய யோகினிகளை பற்றி பழைய பதிவுகளை காணவும் ) யந்திரம் உபாசனையுடன் கொடுத்து பிரதிஷ்டை செய்து, பூஜிக்கும் முறைகளை கூறினோம். தற்சமயம், வியத்தகு முறையில் முன்னேற்றம் கண்டதோடு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் இடத்தையும் வாங்கி விரிவு படுத்தி  அடுத்த மாதம் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் முக்காலத்தையும் கூறும் பஞ்சாங்குலி தேவி யந்திரந்தை, ,உபாசனை முறையை பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்
...

Post a comment

0 Comments