உடனடி பலனளிக்கும் பரிகார முறைகள்

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த பொழுது திடீரென்று,
அங்கு வந்திருந்த ஒரு அம்மையார் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு விசாரித்ததில், அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், தன்  மகனுக்காக தாந்த்ரீக ஜோதிட ஆலோசனைக்கு  வந்திருந்ததையும், நாம் பரிகாரம் கூறியதையும் குறிப்பிட்டு, தற்சமயம் மீண்டும் ஆலோசனை தேவை என்றும், தொலைபேசி எண்ணை மறந்து விட்டு, தவித்து கொண்டிருக்கையில், தெய்வ அருளால் நேரில் சந்தித்து விட்டேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.அப்பொழுது பழைய விஷயங்கள் நினைவிற்கு வரவே, அவருக்கு ஆலோசனை தர விருப்பமில்லை எனவும், வேறு தகுந்த நபரை சந்திக்குமாறும் கூறினேன். காரணம், அந்த சமயத்தில், இவர், தன் 22  வயது மகனுடன் வந்திருந்தார். அந்த மாணவனுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கையில்லை, அது மட்டுமின்றி இவற்றில் ஓர் இளப்பம் இருந்தது. அவர்களின் விஷயங்களை கணித்து கொண்டிருக்கையில், அந்த மாணவன் , தாயின் வற்புறுத்தலால், பல நபரை சந்தித்து விட்டதாகவும், ஒரு பிரஜோனமும் இல்லை என்றதோடு மட்டுமல்லாமல், தான் சந்தித்த நபர்களின் பெயரையும் குறிப்பிட்டு, அவர்களெல்லாம் வெறும் கட்டு கதை என்றான். அவர் கூறிய நபர்களெல்லம், மிக அதிக முதிர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, மிகுந்த ஞானம் உள்ளவரும் கூட. எனக்கு ஏற்பட்ட கோபத்தை அடக்கி கொண்டு அவருக்கு தேவையான பரிகாரத்தை கூறி அனுப்பி வைத்தேன். அதாவது, அயல் நாட்டிற்கு சென்று படிக்க துடித்து வந்த அந்த நபர், கடந்த ஒரு வருடமாக முயற்சித்தும் பலன் இல்லை. அதுவே, ஆற்றாமைக்கு காரணம். அது மட்டுமின்றி, பலரையும் ஆலோசித்தும், அவர்கள் கூறிய பரிகாரங்கள் எதையும் செய்யவில்லை !! நோய்க்கு மருத்துவரிடம் சென்று, அவர் கொடுக்கும் மருந்துகளை உண்ணாது, அவரை குறை கூறும் நிலை தான் இது.

நான் தொடர்ந்து 48 தினங்கள், அதிகாலையில் சூரியனை தரிசித்து சில விஷயங்கள் செய்யுமாறு கூறியிருந்ததை கண்டு, கிளம்பு முன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, எனினும், சூரியனை பார்ப்பது 'சன் கேசிங்' என்று வெளிநாட்டில் புகழ் பெற்ற முறை, அதனால் முயற்சிக்கிறேன் என கூறி சென்றான். இதை நினைவில் வைத்து அந்த தாயிடம் கூறியபொழுது, அழாத குறையாக, 'சார், நீங்கள் சொன்னதை செய்த 27 வது நாளே, விசா கிடைத்து விட்டது, அப்படி போகும் சமயமும், தன் முயற்சியால் தான் வந்தது என கூறி சென்றான், ஆனால், அங்கு சென்று படித்து கொண்டே வேலை செய்து சம்பாதிக்கவும் செய்தான், தற்சமயம் ஒரு பிரச்சனையில் சிக்கி, இங்கு திரும்பி விட்டான், அவன் தற்பொழுது நிறைய மாறி விட்டான், அவன் கூறி தான் உங்களை தேடி கொண்டுள்ளோம் என மிக வேண்டி கேட்கவே, தொலைபேசி எண் கொடுத்து, ஆலோசனைக்கு நேரம் கேட்டு கொள்ளும்படி கூறினேன்.

பரிகார முறைகளில், பல சூட்சுமங்கள் உண்டு. அதை பற்றியெல்லாம் அலசி ஆராயாமல், உண்மையை கண்டு கொள்ளாமல், பிறரை ஏசினால் மேற்கண்ட நிலை தான் மிஞ்சும். ஜோதிடம், தாந்த்ரீகம், ஸ்வர சாஸ்திரம், ரத்ன சாஸ்திரம் போன்றவை மிக அதீத சக்தி வாய்ந்தவை மட்டுமல்ல. அறிவியல் சார்ந்த உண்மையும் கூட. 

Post a comment

0 Comments