மாந்த்ரீக மூலிகை ரகசியங்கள்தற்சமயம் பலர், ஒவ்வொரு மாந்த்ரீக மூலிகைகளின் பெயரை சொல்லி, பத்திரிகைகளில், இது அதை செய்யும்,இதை செய்யும் என விளம்பரம் தருவதை கண்டு வருகிறேன். என்னிடம் ஒருவர், இவை உங்களிடம் உள்ளதா எனவும் அது பயன் தருமா என்றும் கேட்க, அவருக்கு கூறிய பதிலை உங்களுடன் பகிர்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன், சதுரகிரி மற்றும் கொல்லி மலை போன்ற மலை பகுதிகளில், தகுதியான நபர்களை கொண்டு, எடுக்க வேண்டிய முறைகளை கூறி எடுத்து, உபயோகித்து வந்தோம். தற்சமயம், வெகு முக்கியமான, சவாலான விஷயங்களுக்கு மட்டுமே அரிதாக எடுத்து தேவைப்படுபவர்களுக்கு உரிய முறைகள் செய்து கொடுத்து வருகிறோம். இது போன்ற மூலிகைகளை கொண்டு வெற்றிக்கான அஞ்சனமும் தயாரித்ததுண்டு. இருப்பினும், சிலர் அதை நாம் கூறும் வண்ணம் உபயோகிக்காமல், தவறான செயல்களுக்கு உபயோகம் செய்வதை அறிந்ததால், அதையும் குறைத்து கொண்டு விட்டோம்.

மேற்சொன்னவாறு, மூலிகைகள் கண்டிப்பாக இந்த காலத்திலும் பலன் தரக்கூடியவைகளே, அது மட்டுமின்றி, அதிசயங்களையும் நடத்த வல்லவை. ஆனால், அவற்றிற்கென பல கட்டுப்பாடுகள் உள்ளன.

குறிப்பிட்ட கிழமை, நட்சத்திரம் மற்றும் ஹோரை முக்கியம்-அப்படி மூலிகைகளை எடுப்பதற்கு.

எடுக்கும் மூலிகைகளை காப்பு கட்டி எடுக்கவேண்டும். வெறுமே, புத்தகங்களில் படித்து விட்டு, மஞ்சள் காப்பு கட்டி எடுப்பதில்  ஒரு பயனும் இல்லை. காப்பு கட்டி எடுக்கும் முறை என்பது நீண்ட விஷயங்களை கொண்ட ஒன்றாகும். அப்படி எடுக்கும் சமயம், அதற்கான மூல மந்திரம் கொண்டு ஜெபித்து எடுத்தால் மட்டுமே பயன்.

அப்படி எடுக்கப்படும் மூலிகையை, எந்த கர்மத்திற்காக (வசியம், மோஹனம், ஆக்ரூஷணம் போன்று..) உபயோகிக்கின்றோமோ,  அதற்குரிய  மந்திர ஜெபம் செய்து சக்தியூட்டி கொடுத்தால் மட்டுமே பயன் தரும். ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக ஜெபம் செய்ய வேண்டும். எனவே, கடைசரக்கு போன்று இவற்றை விற்பதால், என்ன பயன் தரும் என்பது சந்தேகமே.

கடைசியாக, அப்படிப்பட்ட மூலிகைகளை, உடலில் துணியின்றி எடுக்க வேண்டும் என்பது நியதி. அப்படி செய்தால் மட்டுமே பலன். அதனால் தான் மேற்சொன்னவாறு, அதற்குரிய ஆட்களை கொண்டு எடுக்கப்ப
ட்டது.

நம் சித்தர்கள் சொன்ன,ஒவ்வொரு முறையுமே மிகுந்த பலன் தரக்கூடியவையே, முறையாக செய்தால். 

Post a comment

0 Comments