வசிய முத்திரை பயிற்சி 24.9.17மேற்கண்ட முத்திரை பயிற்சிக்கு பதிவு செய்துள்ளோர், மாலை 5 :45 மணியளவில் வந்து அறையில் வசதியாக அமர்ந்து விடுமாறு கேட்டு கொள்கிறோம். பயிற்சி தொடங்கு முன், கைபேசியினை சைலன்ட் மோடில் போட்டு விடுவது அவசியம். காலம் தாழ்த்தி வருவோருக்கு இடமளிக்கும் சூழ்நிலை இருக்காது என்பதால், அதற்கு  தகுந்தாற் போல் கிளம்பவும். தன்னார்வலர்கள் ஐந்து மணிக்கே வந்து விடின், சற்று வசதியாக இருக்கும்.பயிற்சியின் நடுவில் சந்தேங்களை கேட்காமல் ,முடிந்ததும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.  முத்திரை பயிற்சி முடிந்தவுடன், கற்று கொடுக்கப்பட்ட முத்திரைகள் அடங்கிய காலண்டர் கொடுக்கப்படும். காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள பயன்களை விடவும் அதிக பயன்கள் ஒவ்வொரு முத்திரைக்கும் உண்டு, அவைகள் விளக்கப்படும். ஆகவே தேவையுள்ளோர் குறிப்பு எழுதி கொள்ள,முன்னேற்பாடுடன் வரவும். பயிற்சி நடக்கும் சமயம், அமைதி அவசியம், ஆகவே சிறு குழந்தைகளுடன் வருவோர், தக்க ஏற்பாட்டுடன் வரவும். பயிற்சி முடிந்ததும், அனைவரும் உணவருந்தி செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

குறிப்பு : முன்பதிவு அவசியம் /  இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் இல்லை.

நாள் : 24.9.17
நேரம் : மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை
இடம் : மேற்கு மாம்பலம், பாணி கிரஹா திருமண மண்டபம்
தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Post a comment

0 Comments