வசிய முத்திரை பயிற்சிமேற்கண்ட பயிற்சி இன்று சிறந்த முறையில் நடந்தேறியது. நூற்றி ஐம்பதிற்கும் மேலானோர் வந்திருந்து பயிற்சி பெற்றனர். மன கோளாறுகள், பயம், சக்கரை வியாதி, கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகள், வேலை கிடைக்க, தன வரவிற்கு, கண்கள் மற்றும் காது கோளாறுகள் நீங்க, கிட்னி பிரச்சனைகள் தீர, ஆண்மை, பெண்மை குறைபாடுகள் நீங்க, குழந்தை செல்வம் கிட்ட, தெய்வ தொடர்பு ஏற்பட, வாயு கோளாறுகள் நீங்க, மூட்டு பிரச்சனைகள், உடை குறைக்க மற்றும் கூட, முகம் பொலிவு பெற, ஆஸ்துமா மற்றும் ஜலதோஷ பிரச்சனைகளுக்கு, தைராய்டு,மறதி, வாதம் பிரச்சனைகள் நீங்க என பல் வேறு பிரச்சனைகளுக்கும் முத்திரை முறைகளை பயிற்றுவித்தோம். எம்மை மிகுந்த வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் ஆளாக்கியது என்னவென்றால், நாம் கேட்டு கொண்டபடி, அந்த இரண்டு மணி நேரமும் அன்பர்களிடத்தில் அப்படி ஒரு அமைதி. மிகுந்த கட்டு கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும், ஆர்வத்துடனும் பயிற்சி பெற்று சென்றனர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். Abirami Vivek அவர்களின் ஆரம்ப உரையாடலை பின் தொடர்ந்து, Ganesh Rajaraman அவர்களின் இனிய குரலினால் கடவுள் வாழ்த்து பாட பெற்று , பின் பயிற்சி ஆரம்பமானது. Swasthiktv.com நேரடியாக நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். நான் கேட்டதும் , மறுப்பேதும் சொல்லாது மிகுந்த வேலைப்பளுவிலும், இதை சாத்தியமாக்கிய 'சாய் அருண்' அவர்களுக்கு நன்றி.   தன்னார்வத்துடன் எமக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இறைவன் சித்தமிருப்பின், இது போன்று மாதம் இரு முறையாவது, பல் வேறு பயிற்சிகள், மற்றும் முகாம்கள் நடத்த விரும்புகிறேன் . எல்லா வல்ல இறை அதற்குரிய சக்தியை கொடுத்துதவ வேண்டுகிறேன்.

Post a comment

0 Comments