குரு பெயர்ச்சி ஹோமம்-2.9.17


இன்று எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண அனுகிரஹத்தினாலும் பல நல்ல உள்ளங்களினாலும் மேற்கண்ட ஹோமம், எளிய முறையில், அதே சமயம், மிக நல்ல அதிர்வலைகள் உருவாகி, நடந்தேறியது. இந்த ஹோமத்தினை நல்ல படியாக நடத்த உதவிய என் அருமை தம்பி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர், அம்பாள் உபாசகர் Bharani Kumar, சகோதரர் Ram Prakash மற்றும் சகோதரர் க்ரிஷ்ணமுர்த்தி , தன் கலைக்கரங்களால் குருபகவானை கண் முன் நிறுத்திய தம்பி Adaikappan Alangaram,சகோதரி கிருத்திகா மேலும் பலருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கிய குறிப்பு : எம் அன்பர்கள், சென்னையிலிருந்து குடும்பத்தினருடன் ஒவ்வொரு முறையும் வந்திருந்து தன்னார்வல தொண்டில் ஈடுபட்டு வரும் சகோதரி Abirami Vivek, எம் சிரமத்தை குறைத்து வருகிறார். மேலும், ஒவ்வொரு முறையும் உள்ளூரிலிருந்தும், வேலூர், மதுரை, பெங்களூரு, திருச்சி போன்ற இடங்களில் இருந்தும் வந்து தங்கள் கடமை இது, என நினைத்து, எம் நிகழ்ச்சிகளுக்கு தொண்டாற்றும் பலரையும் கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் இல்லாவிடில், இவ்வளவு சிரமமின்றி எம் காரியங்கள் நடந்து முடியாது. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து வித செல்வங்களையும் வழங்கி ஆசீர்வதிக்க, எம் அன்றாட பிரார்த்தனையில் வேண்டி கேட்டு கொள்கிறேன். இது போன்றே, ஒரு குடும்பமாக நாம் தொண்டாற்றி வரின், லோகத்தில் சிறிய அளவிலாவது நம்மால் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். ஹரி ஓம் தத் சத்

Post a comment

0 Comments