வசிய முத்திரை பயிற்சிநாள் : 24.9.17
நேரம் : மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை
இடம் : மேற்கு மாம்பலம், பாணி கிரஹா திருமண மண்டபம்

கட்டணம் இன்றி நாம் நடத்த இருக்கும் வசிய முத்திரை பயிற்சி பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பலர் நேரில் வந்தும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் சீடி வடிவில் தயாரித்து கொடுப்பின் , அனைவரும் பயனுறுவர் என கேட்டு வருகின்றனர். இதை பற்றி உங்களுக்கு ஆழமான புரிந்துணுர்வு தேவை. இத்தகைய சீடிக்கள் பல சந்தையில் உள்ளன. எனக்கு தெரிந்த வரையில் அவை முழுமையான பயன் கொடுப்பதில்லை. ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு, பின் முழுமையாக அன்றாட அலுவல்களில், வேலை சுமையில் அவற்றை மறந்து விடுகின்ற வாய்ப்பு அதிகம். எம் நோக்கம், தாங்கள் அனைவரும் இவற்றை கற்றுணர்ந்து, மேலும் பலருக்கு இவற்றை பயிற்றுவித்து, அவர்களின் வாழ்வையும் மேம்படுத்த வேண்டும் என்பதே. இத்தகைய முத்திரை பயிற்சினை கட்டணம் வசூலித்தும்  பலர் நடத்தி வருகின்றனர். நேரில் வந்து தாங்கள் கற்று கொள்ளும் சமயம், தாங்கள் சரியாக இதை கற்று கொள்கிறீர்களா என சோதிக்க முடியும், தவறிருப்பின், சென்டரின் தன்னார்வலர்கள் திருத்தம் செய்வர். மேலும், உங்களின் புற ஒளி மற்றும் ஆற்றல்களின் நிலை எப்படி உள்ளது என்பதனை என்னாலும் அறிந்து கொள்ளமுடியும். அதற்காகவே, இந்த ஏற்பாடு. வசதியின்மையால், இவற்றை விளக்கும் படங்களை கொடுக்க இயலாது என்ற காரணம்  கொண்டு, வருவோர் அனைவரையும், நோட்டு மற்றும் பேணா கொண்டு வர கூறியிருந்தோம். தற்சமயம், அந்த குறையையும்  போக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அனைவருக்கும் இவற்றினை விளக்கும் படமும் கொடுக்க உள்ளோம். மிக சரியாக ஆறு மணிக்கு பயிற்சி தொங்கப்பட்டு விடும். ஆகவே, அதற்கு தகுந்தாற் போல் முன்னமே வந்து விடுதல் நன்று. சென்னையில் உள்ளோர் முன் பதிவு டோக்கன் நேரில் வந்து பெற்று செல்லவும். இந்த பயிற்சி உங்கள் வாழ்வில் அனைத்து வித உடற், மன பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது என்பதை உறுதியாக கூற முடியும்.

ஹரி ஓம் தத் சத் :

Post a comment

0 Comments