NAVARATRI | NAVARATHRI | நவராத்திரியில் நல்லவை எல்லாம் பொங்கி வர 

நவராத்திரி 10.,10.21 நாளில் அனைத்து  துன்பங்களையும் நீக்கும் சண்டி ஹோமத்தில் பங்கு கொண்டு ஆகர்ஷணம் செய்யப்பட்டு ஹோமத்தில் உருவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும் சண்டிக்குரிய கருப்பு மஞ்சள் பிரசாதம் மற்றும் அணைத்து துஷ்ட சக்தியையும் நீக்கும் முடிக்கயிறு பிரசாதம் பெற இங்கே க்ளிக்கவும்

நம் துன்பங்கள் அனைத்தும் முடிவிற்கு வருவதற்காகவே, மஹாளய பட்சம் முடிந்ததும் தொடங்குகிறது நவராத்ரி. நம் வாழ்வியல் துன்பங்களை களைவதற்கு மிக சரியான சந்தர்ப்பங்கள் நவராத்ரி, தீபாவளி நாட்கள் போன்றவை. தேவியின் பரிபூர்ண ஆக்ரமம் இந்த நாட்களுக்கு உண்டு. இந்த தினங்களில் எவைகளை செய்யலாம், எவற்றை செய்ய கூடாது என்பதையும், சூட்சும முறையில் இந்த நாட்களில் நம் துன்பங்களை களைந்து, நன்மைகளை-நேர் மறை ஆற்றல்களை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பதனை இந்த பதிவில் காண்போம்.


இந்த நாட்களில் அசைவம், தாம்பத்தியம், சவரம், முடி களைதல் போன்றவை கண்டிப்பாக தவிர்த்தல் நலம் தரும்.
தன ஆகர்ஷண சாம்பிராணியை பெற இங்கே க்ளிக்கவும்.

தினசரி சுமங்கலிகள் அல்லது கன்னி குழந்தைகளுக்கு மஞ்சள் மற்றும் வளையல்கள் வாங்கி கொடுப்பது மங்கள நிகழ்ச்சிகளை நம் வாழ்வில் கொண்டு வரும்.

மஹாலக்ஷ்மி சன்னதியில் 'தன ஆகர்ஷண ஊதுபத்தியை' தினசரி ஒரு பாக்கெட் வீதம் கொடுத்து ஏற்ற சொல்லி, கர்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். தினசரி கோவில் செல்ல முடியாதோர்,  வீட்டில் உள்ள மஹாலக்ஷ்மி படத்தின் முன் ஏற்றி வைத்து, வெள்ளி விளக்கில் வெள்ளை திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபடலாம்.தன ஆகர்ஷண ஊதுபத்தியை பெற இங்கே க்ளிக்கவும்

இந்த நாட்களில் லட்சுமி சோழி எனப்படும் நான்கு வர்ண சோழிகளை வீட்டின் பூஜை அறையில் அல்லது பணப்பெட்டியில் வைப்பது நல்ல பலன் தரும். இத்துடன் கோமதி சக்கரம் வைத்து வழிபட, பலன் இரட்டிப்பாகும். இருக்கும் இடத்தினை செல்வ வளமாகும் வலம்புரி சங்கினை  வீட்டினில் வைக்க மிக சரியான சந்தர்ப்பம் இது.

NAVARATHRI 2021


இந்த ஒன்பது தினங்களில், மந்திரங்களில் தேர்ந்த ஒருவரை வைத்து வீட்டில், துர்கா சப்தசதி பாராயணம் செய்விக்கவும். தெரிந்தவர், தானே செய்யலாம்.

இந்த நாட்களில் மாலை வேளையில் 'ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே" என்ற சர்வ சக்தி படைத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை கூறி நிவேதனம் செய்து வழிபட்டு வருவது, மிக பெரிய துன்பங்களில் இருந்து நம்மை உடனுக்குடன் காக்கும்.

கணவன் மனைவிக்கும்,மனைவி கணவனுக்கும் ஒரு வெள்ளை துணியில் தேங்காயை சுற்றி பரிசளிக்கவும். அதனை நவராத்ரி முடிந்ததும் சமையலுக்கு  உபயோகிக்க, அன்னியோன்னியம் மிகும்.

இந்த தினங்களில் ஒன்பது முக ருத்ராட்சத்தினை வாங்கி கழுத்தோடு அணிவது, தேவியை தங்களோடு என்றும் வைத்திருப்பதற்கு சமம்.

ஒன்பது சிறிய நிலக்கரி துண்டுகளை வாங்கி வைத்து கொண்டு, தினசரி ஒன்றாக மண்ணில் மாலை நேரத்தில் புதைத்து  வரவும். மண் இல்லாதோர், ஒரு மண் தொட்டியில் புதைத்து வரலாம். இது எப்போதும் வீட்டில் இருக்கலாம்.

இந்நாட்களில் கன்னி பெண்களுக்கு சிகப்பு நிற ஆடைகளை தானமளிப்பது (முடியாதோர் சிகப்பு கைக்குட்டை வழங்கலாம்) நன்மை சேர்க்கும்.

இந்த நாட்களில் ஸ்ரீ சூக்தம் தினசரி வீட்டில் கூறி வர பணம் பல வழிகளில் சேரும்-தினசரி ஸ்ரீ சூக்தம் கேட்க இங்கே க்ளிக்கவும் (வாட்சப்பில் பகிர்ந்து தினசரி கேட்கவும்)

முக்கிய குறிப்பு : இந்நாட்களில் உங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கன்னி குழந்தைகளுக்கு (எட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்) உதவி செய்கின்றீர்களோ, அந்தளவு உங்கள் வாழ்க்கை வளமாகும்.

ஹரி ஓம் தத் சத்-ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!