சனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்பொதுவாக சிலர் தங்களின் கஷ்ட காலங்களில் தங்களின் அதாவது குடும்ப தலைவர் என வைத்து கொள்வோம். அவரின் ஜாதகத்தை உரியவரிடம் காண்பித்து பலன் அறிந்து, பரிகாரங்கள் ஏதேனும் இருப்பின் அறிந்து அதன் படி செய்வர். பின் சில காலங்கள் கழித்தும் நிலை சரியாகாது போயின், குறிப்பிட்ட பரிகாரம் அல்லது பலன் கூறிய நபர்  பற்றி அவநம்பிக்கையுருவர். இப்படி எம்மிடம் பலர் வந்து எங்கெங்கு சென்றோம் என்றெல்லாம் விவரிப்பதுண்டு. இதில் குறை கூற வேண்டியது தம்மை தாமே அன்றி, பலன் அல்லது பரிகாரம் கூறிய நபர்களை அல்ல. ஆகையினால் தான் எம்மிடம் வருவோர் சனி கிரகம் ரீதியாக தொல்லைகளை சந்தித்து வரின், நாம் கேட்கும் முதல் கேள்வி, அவர்களின் வாழ்க்கை முறை, தூங்குதல், உணவு பழக்கம், விழித்தெழும் நேரங்கள் பற்றி தான். ஏனெனில், எம்மை பொறுத்தவரை இவைகள் சனி  கிரக ரீதியான கஷ்டங்களுக்கு மிக முக்கியமானவை. மேலும், ஒரே குடும்பத்தில் சனி பெயர்ச்சியினால் ஒருவருக்கு மேல் குறிப்பாக தந்தை மகன் அல்லது மகள்- ஒரே ராசியாக இருந்து ஏழரை அல்லது அஷ்டம சனி போன்ற காலங்களோ அல்லது சனி திசை ஒருவருக்கு மேல் ஒரே குடும்பத்தில், மற்றும் ஒரே குடும்பத்தில் சனி திசை, ராகு திசை போன்றவை மற்றும் சனி பெயர்ச்சியின் நிலை சரியில்லாது போதல் போன்றவை இருப்பின், வாழ்நிலை மிக கடினமாக காணப்படும். இதை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தே பலன்கள் மற்றும் பரிகாரங்களை கேட்டு சென்று, செவ்வனே செய்து வரின், பலன் நிச்சயம். ஜோதிட அல்லது தாந்த்ரீக குரு மார்கள், எவரும் வருவோர்  குடும்பத்தில்  அனைவருக்கும் தம்மிடம்  ஆலோசனை எடுத்து கொள்ள சொல்லி கூற மாட்டார்கள். ஆலோசனைக்கு செல்வோர் தான் , நல்லது எவை என கேட்டறிந்து செயல்படவேண்டும்.

இது போன்ற சனி பெயர்ச்சி காலகட்டத்தில், நன்கு தாந்த்ரீக மந்த்ர பிரயோகம் செய்யப்பட்ட ரட்சை, ஒரு நல்ல வேலி எனலாம். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் அனைவரும் அணிந்து வர, பல சிக்கல்களை எளிதில் தாண்டி விடலாம். ஆகவே தான் வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தில் இந்த ரட்சை மிக குறைந்த கட்டணத்திற்கு கொடுக்க திட்டமிட்டோம்.

சனி பெயர்ச்சி மஹா ஹோமம்
நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர் (பஸ் ஸ்டான்ட் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் அருகில்)
நேரம் : காலை 10 AM மணி முதல் 1 PM மணி வரை
நிவேதன அன்னம் : மதியம் 1:15 PM முதல்

மேல் விவரங்கள் பெற : +918754402857 & +919840130156


முக்கிய பின் குறிப்பு : தாந்த்ரீக அல்லது ஜோதிட ஆலோசனை கூறும் அனைவருக்கும், எல்லோரும் போல் வாய், வயிற் அதற்கு பசி மற்றும் தாகம் உண்டு. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு. அவர்களும் மற்ற  அனைவர் செலுத்தும் அதே வாடகையை  செலுத்தி  தான் வீடுகளில் குடியிருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு உடல்நிலை மோசமானால், அவர்களும் மற்றவர் கொடுக்கும் தொகையை கொடுத்து தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிவரும். அவர்களும் சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கர்ம சனி,கண்டக   சனி என்ற சோதனையான காலங்களை சந்திக்க வேண்டி வரும்.  அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கும் மற்ற அனைவரும் செலுத்தும்  அதே கல்வி தொகையை  தான் பள்ளி கல்லூரிகளில் செலுத்த  வேண்டிவரும். இவை அனைத்தையும் மனதில் கொண்டோமானால், அவர்களிடம் அனைத்தையும் இலவசமாக எதிர்பாராத குணம் ஏற்படும். சனீஸ்வரரை ப்ரீதி செய்ய முதலில், எவரிடமும் எதையும் இலவசமாக பெறாமல் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஏதேனும் குருமார்கள் அன்பு பிரசாதமாக சிலவற்றை கட்டணமின்றி கொடுத்தாலும், அவற்றை பெற்று கொண்டு, ஒரு வாழைப்பழமாவது அல்லது ஒரு ரூபாய் நாணயமாவது அவர்களுக்கு தட்சிணையாக அளிப்பது நன்று. நாம் பல ஆன்மீக பொருட்களை கட்டணமின்றி கொடுத்து வந்த நேரங்களில், பலர் இதனை கடைபிடித்து பெற்று கொண்டனர்.

தற்சமயம் எம்மிடம் தொடர்ந்து ஒரு சிலர் , சேவையை-பொருட்களை, கட்டணமின்றி எதிர்பார்த்து நச்சரிப்பதால்,அப்படிப்பட்டோருக்காக  மேற்கண்ட பின் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

Post a comment

0 Comments