பணவீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய தாந்த்ரீக மந்த்ர சாதனைபொதுவாக தாந்த்ரீக மந்த்ர சாதனைகள் நம் வீட்டு இட்லியை போல-
உடனடியாக சமைத்து விடலாம்-சத்தானது- கேடான பின் விளைவுகளும் இல்லை-செலவும் கம்மி.

எதற்காக இதை கூறுகிறோமென்றால் சமீபத்தில் ஒரு தம்பதியர் நேரடி ஆலோசனைக்கு வந்திருந்தனர். வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி. லாபம் உண்டென்றாலும் அத்தனையும் வராக்கடனாக வெளியில் நிற்கிறது. தொழில் இடம் வங்கியில் கடனாக உள்ளது. பல மாதங்களாக தவணை கட்டாத நிலையில் எந்நேரமும் ஜப்தி செய்யப்படலாம் என்ற நிலை. கணவரின் நிலையை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு சாதகமான நிலை எதுவும் இல்லை. அதே நேரத்தில் மனைவியும் மிகவும் உறுதுணையாக இருப்பதால் அவரின் நிலைகளை சோதித்து பார்த்ததில், தாந்த்ரீக முறையில் இவர்களுக்கு உடனடி தீர்வு உண்டு என தெரிந்தது. இருபத்தியோரு நாட்கள் இரவு நேரம் பூஜை அறையில் அமர்ந்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாந்த்ரீக மந்த்ர சாதனை செய்ய தயாரா என பெண்மணியை கேட்டதில் 'எத்தை தின்னால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருந்த அவர், இந்நிலை மாறுமென்றால் இரவு முழுதும் விழித்திருந்து பூஜிக்க தயார் என்கிறார். சுலபமான ஆனால் மிகுந்த மன உறுதி தேவைப்பட்ட ஒரு அதீத சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்த்ர சாதனை அவருக்கு அளிக்கப்பட்டு, அதற்குரிய நேரம், நாள் போன்றவையும் குறித்து கொடுக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இத்தகைய உபாசனைகளின் பலனை, மன உறுதியும், அதீத நம்பிக்கையும் இருப்பின் முதல் ஓரிரு நாட்களிலேயே காணலாம் என்பது தான். குறிப்பிட்ட நபர், உபாசனை ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடியாத நிலையில், இன்று தொலைபேசியில் 'தங்களுக்கு வேறு வங்கி மூலம் இடைக்கால கடனுதவி கிடைக்க இருக்கிறது எனவும்- இட ஜப்தி விவகாரமும் தள்ளி போகிறேதென்றும்- கடன்களையும் வசூலிக்க மிக அதீத பிரயத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார் கணவர் என கூறி மிகவும் சந்தோஷத்துடன் நன்றி தெரிவித்தார். உபாசனை முடிந்ததும் பாருங்கள் இந்த மந்த்ர சாதனையின் அருமை முழுமையாக தெரியும் என கூறி வாழ்த்தினோம். ஈசன் அருளிய இந்த சக்தி வாய்ந்த தந்த்ர மந்த்ரங்கள் துன்பத்தில் உள்ளோருக்கு, தங்களை முறைப்படி உபாசிப்போருக்கு,
என்றும் வாரி வழங்கிட தயங்கியதேயில்லை.

ஹரி ஓம் தத் சத்   

Post a comment

0 Comments