மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை

 மஹா சண்டி ஹோமம்

நாள் : 16.1.2018
நேரம் : மாலை 5:00  மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
பிரசாத விநியோகம் : இரவு 8 :05 முதல் 
நிவேதன அன்னம் : இரவு 8 : 15 மணி முதல்

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டி இருப்பதாலும், வெளியூரில் இருந்து வந்து கலந்து கொள்ள காலை வேளையில் சிரமம் எனவும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வந்ததால் 'மஹா சண்டி ஹோமம்" மேற்கண்ட தினத்தில் மாலை வேளையில் மாற்றப்பட்டுள்ளது. மாற்றமும் நன்மைக்கு தான். ஹோமங்களிலேயே சண்டி மற்றும் காளிக்கு மட்டுமே இரவினில் பலம் அதிகம். ஆகவே, மாலையில்  செய்யப்படுகின்ற இந்த ஹோமம் வீரியத்தில் மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அமாவாஸ்யை தினம் செவ்வாயில் வருவது "பவுமாவதி" எனப்படும்.சண்டி ஹோமம் இந்த நாளில் செய்வது மிக அதீத சக்தி வாய்ந்த ஒன்றாக அமையும். மேலும் இந்த நாள் பூராடம் நக்ஷத்திரத்தில் வருவதால், பெண் தெய்வ உபாசனை இந்த நக்ஷத்திர நாளில் செய்வது உடனுக்குடன் பலிதம் தரும்.

முன்னரே கூறியிருந்தது போல், இம்முறை ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்பம் செய்ய பெயர் வாங்கப்படமாட்டாது. ஆகவே, சங்கல்பம் செய்து கொள்ள விருப்பமுள்ளோர் முன்னரே  தொடர்பு கொண்டு விவரங்கள் கொடுக்கவும். மேலும், பிரத்யேக காரணங்கள் கொண்டு, சங்கல்பம் செய்ய விரும்புவோர், தீர்க்க முடியாத பிரச்சனைக்காக சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து  கொள்ள விரும்புவோரும், நிலைமை என்ன என்பதை விளக்கி முன்னரே பதிவு செய்து கொள்ளவும்.

ஹோம பொருட்கள் மற்றும் அன்னதானத்திற்கு நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படும். 

+919840130156 / +918754402857 

Post a comment

0 Comments