எந்த ராசியினர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்??

" மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்" 

நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு  8:15 மணி முதல்

கிரகங்களில் குருவினால் ஏற்படும் எவ்வித சிரமங்களையும் அடியோடு நீக்கும் சக்தி, பரிபூரணமாய் தக்ஷிணாமூர்த்தி பகவானால் மட்டுமே முடியும். ஆகவே தான், திருமணத்தடை, காரியத்தடை போன்றவற்றையும் நீக்கும் ஹோமமாக இருக்கட்டும் என 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்' செய்ய திட்டமிடப்பட்டது. வேறு, வித்யார்த்தி ஹோமங்கள்  ஞானம் பெருக்கவும், தேர்வில் தேர்ச்சி பெற உதவுமே அன்றி திருமண தடை, சுபகாரிய தடைகளை போக்காது. மேலும், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தினர் கண்டிப்பாக இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதின் மூலம் மேன்மையுறுவர். உண்மையில் இவர்கள் வருடம் ஒரு முறை பொருட்செலவை பொருட்படுத்தாது தங்கள் இல்லங்களில் இவற்றை செய்ய வேண்டும்-அப்படி செய்யாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைய போகிறது. மேற்கண்ட ராசி அல்லது லக்கினத்தினருக்கு குரு திசா புத்திகள் நடைபெற்று வருமேயானால், இந்த ஹோமம் ஒரு மிக பெரும் பரிகாரமாக அமையும்.

திருமண தடை அல்லது சுப காரிய தடைகள் இருந்து வரின், வேறு எந்த பரிகாரத்தையும்  விட, இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபடுவது, ஆகச்சிறந்த  பரிகாரமாக அமையும். திருமண தடை உள்ளோர், கும்ப ஜல அபிஷேகம் செய்து கொண்டு வழிபட, தடையகன்று நல்ல வரன்அமைய ஏதுவாகும்.


ஹரி ஓம் தத் சத்

தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Post a comment

0 Comments