தேர்வுகளில் தேர்ச்சி பெற-கல்வி ஞானம் பெருக 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்"நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு  8:15 மணி முதல்

உங்கள் குழந்தைகள் / மாணவர்கள் / அரசு வேலைக்கு தேர்வு எழுதுவோர், நல்ல முறையில் தேர்ச்சி பெற்று, வெற்றிகளை குவிக்க, இம்மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாதம் ஒரு முறை 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்" செய்யவிருக்கிறோம். வழக்கம் போல் இதில் கலந்து கொள்ள, தெய்வீக அனுகிரஹத்தை பெற எவ்வித கட்டணமுமில்லை. அதே சமயம் சங்கல்பம் செய்து கொள்ள, மிக சிறு நன்கொடையாக ஒரு நபருக்கு ரூ.150 /-  நிர்ணயம் செய்துள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் குழந்தைகளுக்காக சங்கல்பம் செய்து 'குரு தட்சிணாமூர்த்தியின்' அருட் பிரசாதமாக நோட்டு / பேணா / மற்றும் ஞானத்தை கூட்டும் நான்கு முக ருத்ராட்சம் பெற்று கொள்ளலாம். இந்த ஹோமத்தில் அன்னதானம் செய்ய விருப்பமுள்ளோர் மற்றும் நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்களை அணுகவும். இந்த ஹோமத்திற்கு பூ, நெய், மஞ்சள் வாழைப்பழம் அரசு சமித்து மற்றும் வறட்டி கொடுத்து தெய்வீக ஆற்றலின் பரிபூர்ண அருளை பெறலாம்.

எவ்வளவோ படித்தும் தேர்வில் ஜெயிக்க முடியாமல் இருப்போர் மற்றும் படிப்பு மனதில் ஏறாது சிரமப்படுவோர் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 'கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்ள மேற்கண்ட நிலைகள் மாறுவதை கண்கூடாக காணலாம்.

முக்கிய குறிப்பு : சங்கல்பம் செய்து கொள்வோருக்கு மட்டுமே மேற்கண்ட பிரசாதங்கள் கொடுக்க எமது டிரஸ்டின் நிதி நிலைமை இடம் கொடுக்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹோம பிரசாதம் மற்றும் நிவேதன அன்னம் அவசியம் உண்டு என்பதை நினைவில் கொள்க.

மேல்விவரங்கள் பெற :  +919840130156 / +918754402857 

Post a comment

0 Comments