சூஷ்ம ஞானத்தை தரும் " மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்"

நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு 7:30 மணி முதல்

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தினர் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட அவர்கள் வாழ்வு மேன்மையுறும் என்பது உறுதி. பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மேற்கண்ட ராசி அல்லது லக்கினத்தினை கொண்ட  மகன் அல்லது மகள்கள் இருப்பின், கண்டிப்பாக அவர்களையும் அழைத்து வந்து வழிபடவும்.

அரசு சமித்து, பூக்கள், உதிரி பூக்கள், பழங்கள், நெய் (சுத்தமான நெய் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்) , தேன் போன்றவை ஹோமத்திற்கு கொடுத்து வழிபடலாம். அன்னதானத்திற்கு உபயம் செய்ய விரும்புவோர், கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

சங்கல்பம் செய்து கொள்வோருக்கு மட்டும் :  தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தில் வைக்கப்பட்ட நோட்டு, பேணா மற்றும் கல்வியில், ஞானத்தில் தேர்ச்சி பெற நான்கு முக ருத்ராட்சம் வழங்கப்படும். மற்றபடி அனைவருக்கும், ஹோம பிரசாதம் மற்றும் நிவேதன அன்னம் உண்டு.

முக்கிய குறிப்பு : கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்போர் அல்லது கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி இருக்கும் பிள்ளைகள் ,திருமண மற்றும் சுப காரிய தடை கொண்டோர்,  ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்வது மிக சிறந்த பரிகாரமாக அமையும்.

மேலும் விவரங்கள் பெற : +919840130156  &  +918754402857 

Post a comment

0 Comments