மேற்கண்ட உபாசனை பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தோம். நம்
எழுபத்தியிரண்டாயிரம் நாடிகளிலும் மந்திரத்தின் மூலம் தனதேவதையின் ஆற்றல் பரவ, நம் வாழ் நாள் முழுதும் பண ரீதியான பிரச்சனைகள் அண்டாது பார்த்து கொள்வதோடு மட்டுமல்லாமல், நாம் விரும்பிய செல்வ செழிப்பான வாழ்வும் வாழ முடியும். அறிய தவ சீலர்களால் கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறிய மந்திரமானது, தகுந்த உபதேசத்தின் மூலமே பெற முடியும். இவற்றை வரும் பௌர்ணமி கடந்து, ஆரம்பிக்க எண்ணியிருந்தோம். எனினும் பலர், வரும் (31.1.18) கிரகண காலத்தை சுட்டி காட்டி, " நீங்கள் தான் கிரகண நேரத்தில் கூறப்படும் மந்திர சாதனைக்கு சக்தி பல்லாயிரம் மடங்கு என கூறியுள்ளீர்களே, அதற்கு முன்னரே உபதேச முறை கொடுங்களேன்-கிரகணத்தில் உபாசனை செய்து பயன் அடைவோமே ' என கோரிக்கை வைத்துள்ளதால், வரும் சனிக்கிழமை (27.1.18), ஞாயிறு (28.1.18), செவ்வாய்(30.1.18) மற்றும் புதன் கிழமைகள் (31.1.18 காலை மட்டும்*)  என பிரித்து, நான்கு நாட்கள் உபாசனை வழங்க உள்ளோம்-நம் சென்டரிலேயே.
உபாஸனைக்கு பதினைந்து முதல் அரை மணி நேரம் வரை ஆகும். மிக முக்கியமாக, இதற்கு தொடர்ந்து ஏழு முதல் இருபத்தியோரு நாட்கள் வரை தினசரி ஒரு மணி நேரம் மந்த்ர ஜெபம் செய்ய வைராக்யமுள்ளோர் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தட்சிணை விவரங்கள் கேட்டு பெறவும்.  மந்திர உபாசனை பெற்று கொண்டு அதை தொடராமல் பாதியில் விட்டு விடுவோம் என சிறு ஐயம் இருப்பினும், இந்த முறை உங்களுக்கானதல்ல என்பதனை புரிந்து கொள்ளவும். சிலருக்கு  மந்திரம் உச்சரிப்பு பற்றிய ஐயம் இருப்பின், அது அறவே தேவையில்லை, மிக எளிதான அனைவரும் உச்சரிக்க கூடிய மந்திரம் தான் என்பதனை அறிக.

மிக முக்கிய குறிப்பு : உபாசனை முறை  நேரில் வருவோருக்கு மட்டுமே. 

ஹரி ஓம் தத் சத் 

+918754402857 / +919840130156


Post a Comment

Previous Post Next Post

Get in touch!