மாசி அமாவாசை மஹா சண்டி ஹோமம் -15.12.18

வரும் 15.2.18 மாலை சென்னை  தி.நகர் சங்கர மடத்தில் நடக்கவிருக்கும்
மஹா சண்டி ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டவர்கள், செய்து கொள்ளவிருப்போர் கவனத்திற்கு :

சண்டி ஹோமத்தில் உங்களின் எந்த தேவைக்காக சங்கல்பம் செய்து கொள்ளவிருக்கிறீர்களோ அதற்குண்டான பொருளாக சண்டி விதானத்தில் கூறப்பட்டு உள்ளதை விளக்கியுள்ளோம். நேரில் வரும் சமயம், டோக்கன்
பெறும் இடத்தில் அதற்குண்டான பொருட்களையும் கொடுத்தால் ஹோமத்திற்கு உபயோகிக்கப்படும். பலன் உடனடி மற்றும் பன்மடங்கு என்பது நிச்சயம்.

மனசாந்திக்கு : எள் மற்றும் சுத்தமான நெய் (தூய நெய் மற்றும் ஏற்று கொள்ளப்படும்-குறைந்தது அரை கிலோ)

வியாதிகள் அகல ஆயுள் விருத்திக்கு : அருகம்புல் (இயன்றளவு)

தனம் தான்யம் பெற : நெல், சம்பா அரிசி மற்றும் சுத்தமான தேன் )(இயன்றளவு)

அரசு வேலை மற்றும் அரசுஆதாயங்கள் பெற : வில்வ இலைகள் மற்றும் பாதாம் பருப்பு  (இயன்றளவு)

சொத்துக்கள் பெற : தாமரை மலர்கள் மற்றும் முந்திரி

இயன்ற பெண்ணை திருமணம் செய்ய மற்றும் தாம்பத்தியம் இனிக்க :

பொறி மற்றும் உலர் திராட்சை (இரண்டும் அரை கிலோ)

திடீர் அதிர்ஷ்டம் பெற : மகிழம், மல்லி, ஜாதி பூக்கள் (உதிரி தலா கால் கிலோ)

வசியத்திற்கு : கதம்ப மலர் உதிரி மற்றும் மாலை (இயன்றளவு)

அனைத்து நலன்களும் பெற : குங்குமப்பூ (சுத்தமானது-இயன்றளவு)

அனைவரையும் கவர்ந்திழுக்க : காராம்பசு நெய் அல்லது நாட்டு பசு நெய் (இயன்றளவு)

பகைவர் அழிய : தர்பூசணி, வேம்பு சமித்து

மேற்கண்டவைகளை தங்களின் சங்கல்பத்துடன் ஹோமத்தில் சேர்ப்பக்கப்படும். விசேஷ சங்கல்பம் செய்து கொள்வோர், தங்களின் பிரச்சனைகளை சுருக்கமாக கூறியோ, எழுதி அனுப்பியோ சங்கல்பம் செய்து கொண்டு பலனடையலாம். நேரில் வருவோர் தாங்களாகவே, மனையில் அமர்ந்து விசேஷ சங்கல்பம் செய்து கொள்ளலாம்.

அனைத்திற்கும் மேலாக கலசத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட சண்டி தேவியின் தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து கொள்ள விரும்புவோர்-கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். சங்கல்ப உபயதாரர்கள் அனைவருக்கும் சண்டி ஹோமத்தில் வைத்து உருவேற்றம் செய்து, அதீத பலனை தரக்கூடிய வெள்ளி முலாம் பூசப்பட்ட சண்டி தேவியின் உருவ ரட்சை வழங்க உள்ளோம்.

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857

Post a comment

0 Comments