வாழ்வை வண்ணமயமாக்குங்கள்சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு : பொதுவாக விற்க முடியாத வீடுகள் மற்றும் நிலங்கள் போன்றவை விற்று போவதற்கு நாம் சில முறைகள் செய்து கொடுத்து வருவதும், அவை பெரும்பாலும் வெற்றி கண்ட நிகழ்வுகளும் உங்களுக்கு தெரிந்தது தான். ஒரு நபர் வேறொருவருக்கு பெரும் தொகை செட்டில் செய்ய தொன்னூறு நாட்கள் அவகாசம் கேட்டு, (அதற்குள் வீட்டை விற்று பணத்தை கொடுத்துவிடலாம் என்றெண்ணி) எம்மிடம் வந்து விஷயத்தை கூறவே, வழக்கம் போல் அவருக்கும்  நாம் கொடுக்கக்கூடிய எந்திரங்கள் மற்றும் அவ்விடத்திலே செய்ய வேண்டிய விஷயங்கள் என கொடுத்தோம். ஆனால் நாற்பத்தியைந்து நாட்களே முடிந்த நிலையில், அவர் மீண்டும் வந்து, இது வரை ஆட்கள் வந்து பார்த்து செல்கிறார்களே தவிர, விற்பனையாகவில்லை என்று வருந்தினார். மேலும் நாற்பத்தியைந்து நாட்களே உள்ள நிலையில், பணத்தை செட்டில் செய்யா  விட்டால் பெரும் பிரச்னை ஆகி விடும் என்றார் கண்ணீர் மல்க. உடனடியாக அந்த இடத்தின் வரை படம் கேட்டு பின்னர் அருகில் இருக்கும் இடங்களின் நிலை போன்றவற்றை கேட்டறிந்து, அவரை வீட்டின் ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு வகை பெயிண்டை உடனடியாக மாற்றுமாறும், பின்னர் ஒரு முறை ஏற்கனவே பார்த்து சென்றவர்களை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்து பேசுமாறும் கூறினோம். அரை குறை நம்பிக்கையுடன் சென்ற அவர், மேலும் இருவதே நாட்கள் ஆன நிலையில், இதோ இன்று குதூகலத்துடன் தொலைபேசியில் அழைத்து தான் நினைத்ததை விட ஐந்து சதவீதம் அதிக விலைக்கு விற்க அட்வான்ஸ் பெற்று விட்டதாக கூறி மகிழ்ந்தார். இது எப்படி சாத்தியம் எனவும் கேட்டார்? 'க்ரோமோதெரபி ' முறையில் இது மட்டுமல்ல. அனைத்து வித தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமே, அதுவும் வெகு சீக்கிரத்தில் என கூறினோம். இதை ஏன் முதலிலேயே கூறவில்லை என உங்களில் சிலருக்கு தோன்றலாம்? காரணம், ஏற்கனவே இது போன்று ஒரு சிலரிடம் கூறியும் அவர்கள் அதை செய்யாது யந்திர முறைதான் வேண்டும் என முறையிட்டனர். அவ நம்பிக்கை தான் காரணம். மேற்சொன்ன வண்ண முறையும் Occult Science எனப்படும் மறைமுக அமானுஷ்ய அறிவியல் முறையே ஆகும். மாறாத  நம்பிக்கை இருப்பின் அனைத்தும் சாத்தியமே.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments